Theva

நான் உந்தன் பிள்ளை, நீ எந்தன் அன்னை

In பகிர்வு on பிப்ரவரி23, 2008 at 9:07 முப

ஆழிப்பேரலையின் அவலம் தொடர்பாக அரங்க ஈடுபாட்டார்களின் மனதில் எழுந்த உணர்வுகளுக்கு கவிதை வடிவம் கொடுத்துள்ளார் கவிஞர் நா.சிவசிதம்பரம். இக்கவிதை செயல்திறன் அரங்க இயக்கத் தயாரிப்பில் இசைப் பாடலாகவும் வெளிவந்துள்ளது.

last-page-copy.jpg 

அலை கடலே
நான் உந்தன் பிள்ளை
நீ எந்தன் அன்னை

அம்மா இந்நாள் அழகே!
ஆற்றலின் ஊற்றே! உயிரே!
ஏன் வாழ் முதலே வணங்குகிறேன் !

தீ – வெளி – காற்றொடு
திகழ் நிலம் – நீரென
தினமும் மலரும் இயற்கை அம்மா

முற்றத்தில் கோலம் செய்
முழுவான நிலவும் – எம்
சுற்றமும் நீதானே!

கற்றது உன் மடியில்
காலங்கள் உன் அடியில்
முற்றிலும் நீதானே!

வான் பொழி மழையும்
வளர் அலை கடலும்
தாய் தந்தை உறவம்மா

நான் உந்தன் பிள்ளை
நீ எந்தன் அன்னை
வாழ்வுந்தன் வரம் அம்மா

கனவிலும் நினைவு தாருங்கள்
மனதிலும் குளிர்மை வரும் – பாருங்கள்
நீ தருவாய் ! என் வாழ்முதல் ஆனவளே!

குhலை செவ்வானத்தின்
குதிர் கூடத் தாயே – உன்
கருணையின் வழிதானே!

குhல் சுடும் வெயிலொடு
கடுங்கூதல் மழையும் – உன்
கடமையின் தொடர் தானே

பார்வையில் ஒளியும்
பழகும் நல்லுறவும்
நீ தந்த நேசம் அம்மா
வெளிச்சமும் பகலும்
விளக்குடன் இரவும்
வேருக்குள் ஈரம் அம்மா

கனவிலும் நினைவு தாருங்கள்
மனதிலும் குளிர்மை வரும் – பாருங்கள்
நீ தருவாய்! ஏன் வாழ்முதலாளனவளே!

மாறும் – நாள் எந்த நாளும்
ஓயாது – முன்னேற்றம் –
கடலலை போல் உள்ளம்

தீயும் தீபத்தின் ஒளியாகும்
பாரும்!
தாயின் இருவிழி தன்னில்

பின்னூட்டமொன்றை இடுக