Theva

பாரம்பரிய கலை மேம்பாட்டுக் கழகத்தின் அழகெழல்!

In கட்டுரை on நவம்பர்24, 2007 at 10:29 முப

paarampariyam_b.jpg

கூத்தன்

யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்ற பாரம்பரிய கலை மேம்பாட்டுக் கழகம் கடந்த பத்தாண்டுகளாக செயற்பட்டு வருகின்றது. இக்கழகத்தின் செயற்பாடு யாழப்பாணத்தில் காணப்படுகின்ற பாரம்பரிய அரங்குகளின் வாழ்வுக்கு ஓரளவேனும் உந்து சக்தியாக அமைகின்றதை இனங்காண முடிகின்றது.

பாரம்பரிய அரங்கு, (நாட்டுக் கூத்து, இசை நாடகம், காத்தான் கூத்து) ஊர்களில் ஆடப்படாமல் அழிந்து செல்லும் நிலை காணப்படுவதை அவதானிக்கலாம். இடம்பெயர்வு, போர் அனர்த்தத்தால் ஊர் சிதைந்து போனமை, பொருளாதாரப் பிரச்சினை போன்ற காரணங்களால் கூத்துக்கள் ஊர்களில் ஆடப்படாமல் கிடக்கின்றன. கூத்து ஆடப்படாமையால் சந்ததிக் கையளிப்பு அறுபட்டுப் போய்விட்டது. ஆதரிப்பவர்கள் இல்லை. பார்ப்பவர்கள் தொகை குறைந்து செல்கின்றது. இந்த இடைவெளியை நீண்ட காலத்திற்குப் பின் வந்து சேர்ந்த தொலைக்காட்சித் தொடர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.

இடம்பெயர்ந்து மீண்டும் ஊர் கூடியபோது பல அண்ணாவிமாரை தொலைத்து வந்தது நெருடலாக இருக்கிறது. இருப்பவர் இயக்கமின்றி இருக்கிறார். வயது முதிர்ந்து இயங்கும் நிலையில் இருக்கும் அண்ணாவியாருக்கும் இளைஞர்களுக்கும் அதிக இடைவெளி. கூத்துப் பழகுவதற்கு ஆட்களில்லை. இளைஞர்களுக்கு தனது பாரம்பரிய கலை எதுவென்று தெரியாத நிலை. தனது தேட்டம் எது? எதை நான் பாதுகாக்க வேண்டும் என்பதை உணர முடியாதவர்களாக இளம் சமூகத்தினர் காணப்படுகின்றனர்.

paarampariyam_a.jpgபாரம்பரியப் கலைகளை மேம்படுத்துவதற்காக, நிறுவன மயமாகிச் செயற்படுவது என்பது மிகச் சிரமமானது. கடினமான நடைப்பயணம் அது. அதில் சில அடைவுகளை இனங்காட்டிப் பத்து ஆண்டுகளை பூர்ததி செய்திருக்கிறது பாரம்பரிய கலைமேம்பாட்டுக்கழகம். அதில் பாரம்பரிய அரங்குகள் ஆங்காங்கே மீண்டும் துளிர்விட்டு வளர்வதற்கு வித்திட்டமையை முக்கியமாக குறிப்பிடலாம்.

பாரம்பரிய கலை மேம்பாட்டுக்கழகத்தின் சாதனைகளாக பின்வரும் ஐந்து விடயத்தை குறிப்பிட முடியும்.
1. பாரம்பரிய கலைப் போட்டி: வருடாவருடம் நடத்தப்பட்ட போட்டிகள் ஊர்களில் ஓய்ந்திருந்த கலைஞர்கள் ஒன்று கூடவும் நாடகங்கள் தயாரிக்கவும் ஊக்கமளித்தன. இப்போட்டிகளால் நாட்டுக் கூத்துக்கள், காத்தான் கூத்து, இசை நாடகங்கள் ஊர்களில் மீண்டும் ஆடப்பட்டன. இதனூடாக இளைஞர்கள் சிலர் ஆடவும் பாடவும் ஆரம்பித்தார்கள்.

2. மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு: ஆடி ஓய்ந்து ஒரு மூலையில் கிடந்த பல கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதால். மீண்டும் உயிர் பெற்றார்கள். நாம் ஆடிய கலையை ஏனையவர்களுக்கு உற்சாகத்துடன் கற்றுத்தர முன்வந்தார்கள். தமக்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்ற நினைப்பு அவர்களை சந்தோஷப்படுத்தியது. இந்த ஆத்ம திருப்தி கலைஞனுக்கு அவசியமென்று சொல்வார்கள.; அதனைப் பாரம்பரிய கலைகளில் ஈடுபட்ட கலைஞர்களுக்கு பாரம்பரிய கலை மேம்பாட்டுக் கழகம் வழங்கியது.

3. நூல் வெளியீடு: தமிழ் அரங்கில் பெரும் குறையாக உள்ள விடயம் ஆவணப்படுத்துதல். மிகமிகச் சொற்பமான கூத்து ஏடுகளே நூல்வடிவம் பெற்றுள்ளன. பல நாடக பாடங்கள் அந்தக் கலைஞர்களுடன் அழிந்து போய்விட்டது. நாடகக்காரர்கள் பற்றிய தகவல்கள் எம்மிடம் இல்லை. இதனை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை பாரம்பரிய மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டிருக்கிறது. (நூல் வெளியீடு, கசட் வெளியீடு, வீடியோ படங்களாக சேகரித்தல் என்பன இதில் அடங்கும்.)

4. கலை மேம்பாட்டுக்காக உழைக்கும் குழு உருவாக்கம்: பாரம்பரிய கலைகளின் மேம்பாட்டுக்காக உழைக்கின்ற கலைஞர் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வயது முதிர்ந்தவர்கள், இளைஞர்கள் என்ற பலரும் காணப்படுகிறார்கள். அதிகமாக ஆசிரியர்கள் இதில் இருப்பது மகிழ்வானது. இவர்கள் இனிவரும் காலங்களில் இந்தப் பணியை தோளில் சுமந்து செல்வார்கள்.

paarampariyam_c.jpg5. பாரம்பரியக் கலைகளுக்கான அங்கிகாரம்: தமிழர் சுயமான கலாசாரப் பண்பாட்டை உடையவர்கள் என்பதை மேடையில் அடித்து சொல்வதற்கு ஏற்றதாக எம்மத்தியில் காணப்படும். பாரம்பரிய கலைகளை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தி அதற்கான அங்கீகாரத்தை பெற்றக் கொடுத்தமை. இது பத்திரிகைகள், றேடியோ, ரிவி என்பன ஊடாக நடைபெற்றிருக்கிறது.

இவை கழகத்தின் பத்தாண்டு செயற்பாட்டின் அடைவுகள். இதற்காக உழைத்த அனைவரது பணியும் பெறுமதியானது. முன்னின்று உழைக்கும் மற்றாஸ் மெயில் பராட்டுக்குரியவர்.

இருப்பினும் இவர்களுக்கு முன்னால் இன்றும் மலைபோல் பணிகள் காத்துக்கிடக்கின்றன. அரச நிறவனங்களிடம் வேண்டுவதில் பயனில்லை. நாமே உழைத்தாக வேண்டும். மேலே சுட்டப்பட்ட பணிகள் மேலும் சிறப்பாக முன்னெடுக்கப்படுவது மிக அவசியம். இவற்றோடு,

1. ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பாரம்பரிய கலைகளை பேணுவதற்கான வழிகள் கண்டறியப்பட வேண்டும்.

2. இளம் சமுதாயத்திடம் கூத்துக்களைக் கையளிப்பதற்கான பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக இயங்க வேண்டும். கேரளவில் கதகளி பயிற்றப்படுவது போன்று.

3. பாடசாலைப் பாடத்திட்டத்தில் பாரம்பரியக் கலைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை அரசுக்குக் கொடுக்க வேண்டும்.

4. நல்ல தரமான பாரம்பரிய நாடகங்கள் தயாரிக்கப்பட்டு தொடர்ச்சியாக பல்வேறு இடங்களிலும் மேடையேற்றப்பட்ட வேண்டும்.

5. பாரம்பரிய கலைகளை எந்த வேளையிலும் பார்க்கக் கூடியதான கலைக் கூடம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.  இது சுற்றுலா வருபவர்கள் பார்க்கின்ற முக்கியமான இடமாக இருக்கும்.

6. எமது பாரம்பரிய கலை வடிவங்களுடன் சீரான தொடர்ச்சியான வெளிநாட்டுப் பயணங்கள் நடைபெற வேண்டும்.

இவ்வாறான பல பணிகள் பாரம்பரிய மேம்பாட்டுக் கழகம் முன் கிடக்கின்றன. இவற்றையும் கருத்திற்கொண்டு பாரம்பரிய கலை மேம்பாட்டுக்கு கழகம் தொடர்ச்சியாக உழைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: