Theva

Archive for the ‘ஆக்கம்’ Category

முருகையனுக்கு அஞ்சலி!

In ஆக்கம் on ஜூன்28, 2009 at 9:04 பிப

Murukaiyaan

(23/04 /1935  –   27 /06/2009)

ஈழத்தின் சிறந்த கவிஞர்களுள் ஒருவரும் நாடக ஆசிரியருமான கலாநிதி இ.முருகையன், இயற்கை எய்தினார். அவரது பிரிவு ஈழத் தமிழ் அரங்கில் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு.

கவிஞர் முருகையன் கவிஞராக மட்டுமன்றி நாடக ஆசிரியராகவும் தமிழறிஞராகவும் திறனாய்வாளராகவும் சீரிய முற்போக்குச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவர். அரசகரும மொழித் திணைக்களத்தில் பணியாற்றிய காலத்தில் தமிழ்க் கலைச் சொல்லாக்கத்திற்கு அவர் ஆற்றிய சேவை பெரும் கவனத்திற்குரியது.

அவரது கவிதைகள் போன்று மொழி, சமுகம், அரசியல் ஆகிய துறைகளில் அவரது கட்டுரைகளும் மிகுந்த தெளிவும் ஆழமும் கொண்டவை. சமூகப் பயனுடையவை.

அவரது மறைவையொட்டி அஞ்சலிகளையும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் செய்திறன் அரங்க இயக்கமும் கூத்தரங்கமும் தெரிவித்துக் கொள்கின்றன.

கவிஞர் முருகையன் கூத்தரங்கம் இதழுக்கு வழங்கிய செவ்வியை இங்கு காணலாம்.

புதிய வலைப் பூ

In ஆக்கம் on ஜூன்28, 2009 at 8:51 பிப

நாடகம் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்ள ஒரு புதிய வலைப் பூ

http://actimo.wordpress.com/

முதுமையின் முதிர்வில் ஒப்பனைக் கலைஞர்

In ஆக்கம் on மார்ச்18, 2008 at 6:28 முப

பெஞ்சமின் ஐயா. நாடகத் துறை சார்ந்தோரிற்கு இவரைத் தெரியாதிருக்கBenchamin முடியாது. கூத்து, இசைநாடகம், இலக்கிய நாடகம், நவீன நாடகம், நாட்டிய நாடகங்கள் என பெஞ்சமின் ஐயாவின் தொடர்புகள் விரிவுபட்டன.

வேடஉடைகள், ஒப்பனைகள், அரங்க அமைப்புக்கள், காட்சித்திரைகள், தட்டிகள் என அரங்கத்துறைக்கான இவரது பங்களிப்பு நீண்டகாலமாகவே இருந்து வந்திருக்கின்றது. 90வயதினைத் தாண்டி விட்ட இவர் தனது இளந்தாரிக் காலத்திலேயே மேற்குறித்த விடயங்களில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார்.

தனது 90வது வயதில் பெரும் பகுதியை அரங்கத்துறை சார்ந்த விடயங்களில் ஈடுபடுத்திய ஒப்பனைக் கலைஞரான  பெஞ்சமின் ஐயாவை கூத்தரங்கின் சார்பில் சந்தித்தோம். 25ம் ஆண்டளவில் இருந்து தனது நாடகத்துறை சார்ந்த அனுபவங்களை மீட்டு எம்முடன் கதைப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார் பெஞ்சமின் ஐயா.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

தீனக்குழந்தைகள் நாடகம்: ஒரு பார்வை

In ஆக்கம், விமர்சனம் on பிப்ரவரி23, 2008 at 9:24 முப

இ.விஜி

சமூகத்தில் இன்று அரங்கு பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. போர்க்காலத்தில் போரின் உடனடித் தேவைகளைப் பேசிய அரங்கு போர் சற்று ஓய்ந்திருக்கும் வேளையில் போரினால் பாதிக்கப்பட்ட மனிதமனங்களைப் ஆற்றுப்படுத்த முற்படுகின்றது. போரினால் நாம் எதிர்கொண்ட, எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகளை அரங்கு பேசி வருகின்றது. அந்த வகையில் தே.தேவானந்தின் ‘நெஞ்சுறுத்தும் கானல்’, ‘இடர்கள் கெடுக’, ‘முடக்கம்’ போன்ற மிதிவெடி விழிப்புணர்வு நாடகங்கள் கடந்த ஆண்டுகளில் பாடசாலைகளில் மேடையேற்றப்பட்டன. அந்நாடகங்கள் பெரும்பாலும் மதிவெடியினால் ஏற்படும் பாதிப்புக்களையும் அப்பாதிப்புக்கு உள்ளானவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும் பாதிப்புக்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிகளையும் கூறுகின்றன. இப்பொழுது ‘தீனக் குழந்தைகள்’ எனும் நாடகம் தே.தேவானந்தினால் எழுதி, நெறியாள்கை செய்யப்பட்டு பாடசாலைகளில் மேடையேற்றப்படுகின்றது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஜனகரலய – மக்கள் களரி

In ஆக்கம் on பிப்ரவரி23, 2008 at 9:23 முப

People’s Theatre

“நீண்ட காலமாகச் செயற்பட்டு வரும் அங்கீகரிக்கப்பட்ட நாடகக் கலை சமூகத்தில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மாத்திரம் செல்லக் கூடிய நிலையில் இன்று உள்ளது. இதனைப் புரிந்துகொண்ட நாங்கள் 1948ஆம் ஆண்டு தொடக்கம் வீதி நாடகக் குழுவாக நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று நாடகங்களை நிகழ்த்தினோம். இதன் மூலமாக உண்மையான அரங்கம் தொடர்பான அனுபவங்கள் சிலவற்றைப் பெற்றுக்கொண்டோம். அதனூடாக மக்களுக்கிடையில் நாடகங்களைப் போடும் விதிமுறை தொடர்பான எண்ணம் எம் மனதில் தோன்றியது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »