Theva

Editorial:

In பொது on மார்ச்18, 2008 at 6:31 முப

கூத்தரங்கம் மேலும்
விரிவும் ஆழமும் பெறும்.

கூத்தரங்கம் கடந்த மார்ச் – 2005 உடன் தனது ஓராண்டைப் பூர்த்திசெய்துள்ளது. இந்த ஓராண்டில் 06 இதழ்களை வெளியிட்டுள்ளோம். இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை கூத்தரங்கத்தை வெளியிடுவது என்று திட்டமிட்டிருந்தோம். அதன்படி குறித்த காலத்தில் இதழ்களை வெளியிட முடிந்தது. இதற்கு நாடகமும் அரங்கியலும் துறை மாணவர்கள், ஆர்வலர்கள், புலமையாளர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் மிகுந்த ஆதரவு தந்துதவினார்கள்.

இந்த ஆதரவுகளால் நாடகமும் அரங்கியலுக்குமான செய்தி இதழை வெளியிடுவதில் இருந்த தயக்கம் படிப்படியாக நீங்கித் தொடர்ச்சியாக சீராக இதழை வெளியிடும் துணிவைப் பெற்றுக் கொண்டோம். பலரது வேண்டுகோளிற்கிணங்க செய்தி இதழ் என்ற நிலையில் இருந்து புலமைசார்ந்த கட்டுரைகளையும் பேட்டிகளையும் உள்ளடக்கியதாக கூத்தரங்கம் சற்று விரிவடைந்தது. கூத்தரங்கம் இன்னும் ஒரு திட்டமான வடிவத்தை பெற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு ஒரு திட்டமான, நிரந்தரமான, வரையறையை கொடுத்து “சிறைப்பட்டுக்” கொள்ள விரும்பவும் இல்லை. இயலுமான வரை ஒரு “விட்டாத்தியான” வெளிப்பாட்டு முறைமையையே கூத்தரங்கம் கொண்டிருக்க விரும்புகின்றது.

எம்மத்தியில் காணப்படும் வளப்பற்றாக்குறை நாம் பாய்வதற்கு நினைக்கும் எல்லையை எட்டிவிடாது தடுக்கிறது. நாடகமாடுபவனே, நாடகம் பற்றி எழுதவேண்டிய நிலை. செயல்முறை சார்ந்த புலமைத்துறை விருத்தி நாடகத்துறையில் இன்னும் போதுமாக இல்லாதது பெரும் குறைபாடாகவே தொடர்ந்து உள்ளதாக உணர்கிறோம். எமது சமூக அமைப்புக்குள் காணப்படும் வழமையான “கட்டுப்பெட்டித்தனம்”, “யாரிகட்டி நிற்கும் பண்பு”, “கன்னை பிரித்து கோடு கீறி நிற்பது” போன்ற அனைத்தையும் நாடகத்துறைக்குள்ளும் காணமுடிவது வேதனையானது. இதனால்தான் “திறந்த மனமொன்று வேண்டும்” என்று கடவுளைப் பிராத்தித்து கூத்தரங்கத்தை ஆரம்பித்தோம். அதனை எவ்வளவு செய்தோம் என்பதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் அதற்காக மனதார முயற்சித்திருக்கிறோம்.

கூத்தரங்கிற்கு ஆதரவு தந்த அனைவரினதும் “ஆத்ம வலு” எம்மை இரண்டாவது ஆண்டுக்கு உந்தித் தள்ளுகிறது. இவ்வாண்டில் கூத்தரங்கம் மேலும் விரிவும் ஆழமும் பெறும். அதற்காக நாடகத்துறை மாணவர்கள், ஆர்வலர்கள், புலமையாளர்கள் நாடகச் செயற்பாட்டாளர்கள் அனைவரதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம். நாடகத்துறை இன்று பல துறைகளுக்குள்ளும் கால் பதித்துச் செல்கிறது.

எம்மத்தியில் உள்ள பல்வேறு நாடகவடிவங்கள் சரியான முறையில் நடுநிலையுடன் பதிவாக வேண்டும். மேலாண்மை பண்பைத் தவிர்த்து இவை மேற்கொள்ளப் படவேண்டும். “முயன்று தவறலாகக்” கண்டுபிடிக்கப் பட்டவைகள் வந்தவாறே அழிந்து விடுகின்ற அவலம் தவிர்க்கப்படவேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டுமென்பது எமது விருப்பம். அதற்கான களமாக “கூத்தரங்கம்” இருக்கும்.

– ஆசிரியர் குழு

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: