Theva

மனிதரிலே மனிதருண்டு. வானவரும் மனிதராய் வருவதுண்டு

In சொற்சித்திரம் on மார்ச்17, 2008 at 6:06 முப

suntha-7.jpgஎன்.சுந்தா பற்றிய ஒரு நினைவுக்குறிப்பு

– பேராசிரியர் கார்திகேசு சிவத்தம்பி

மரணம் எப்போழுதுமே அதன் எதிர்பார்க்கப்படாத் தன்மை காரணமாக நம்மை நிலைகுலைய வைக்கிறது. அதிலும் பார்க்க மனத்தை பிழிந்து உதறுவது, அதனை, அதன் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது மானுட நிர்ப்பந்தமாகும். 

 “அழுத கண்ணீர் ஆறெல்லாம் அதில் ஓர் எழுத்தை அழித்திடுமோ” சுந்தா, சுந்தா என்று நாங்கள் வாய்நிறைய மனம் நிறைய அழைத்து வந்த, பேசிவந்த நா.சுந்தரலிங்கம் என்றும் “என். சுந்தா” இன்று நம்மிடையே இல்லை.

ஐந்து, ஆறு மாதங்களுக்கு ஒரு தடைவை கொழும்புக்கு அவர் வரும் பொழுது கட்டாயம் வரும் ஒரு போன் அழைப்பு. அதனூடாக வரும் சுந்தா பேசுகிறேன் என்ற தீர்மானமன குரல். பெரும்பாலும் அடுத்தடுத்த நாள் குறைந்த பட்சம் ஒரு மணித்தியாலமாவது என்னுடன் பேசவென எனது தொடர்மாடிக் கட்டடத்திற்கு சுந்தா வருவார். இனி, சுந்தா அப்படி வரமாட்டார். நான் எப்போழுதுமே சுந்தாவுடன் பேசும் பொழுதுதான் ஏக வசனத்தில் பேசுவேன். அது கரவெட்டி, வடமராட்சிக் குணம். குறிப்பிடும் பொழுதெல்லாம் மரியதைப் பன்மைதான். அது சுந்தா என்ற ஆளுமை அவரைத் தெரிந்தவரிடத்துப் பெற்றுவந்த வசூல்.

சுந்தா இல்லை என்கிற பொழுதுதான் தெரிகிறது. எத்தனை பெரிய ஆலமரமாக நின்றார் என்று. யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் இளைப்பாறிய கல்விப் பணிப்பாளர். நாடகமும் அரங்கவியலும் எனும்; பாடவிதானத்தின் ஆக்குனர்களில் ஒருவர். அவர் இணைந்து தயாரித்த நாடகத்திற்கான ஆசிரியர் கைந்நூலை தேசிய கல்வி நிர்வாகம் இன்னும் பிரசுரிக்கவில்லை. ஒரு முக்கியமான விஞ்ஞானபாட மொழிபெயர்ப்பாளர். தமிழ் நாடகவியலுக்கான கலைச் சொல்லாக்கக் குழுவின் அச்சாணியாகத் தொழிற்பட்டவர். எல்லாவற்றிலும் மேலாக, இலங்கையின் நாடக அரங்கவியல்துறை பற்றிய பல்கலைக்கழகமட்ட மிகச் சிறந்த விரிவுரையாளர்களுள் ஒருவர். அந்த விரிவுரைகள் குறிப்புக்களை ஒப்புவிப்பவையல்ல. நாடகம், அரங்கு, ஆற்றுகை என்பன பற்றிய ஒரு கொள்கை நிலைப்பட்ட விளக்கமாகவும் வியாக்கியானமாகவும் அந்தக் கற்பித்தல் அமையும்.

அற்புதமான நாடகத் தயாரிப்பாளர். ‘அபசுரம்’, ‘விழிப்பு’, என்ற பிரசித்தி பெற்ற நாடகங்களின் ஆசிரியர், நெறியாளா.; அபத்த நாடக முறைமை(யுடிளரசன வாநயவசந)க்கான மிகச் சிறந்த தமிழ் வடிவம் ‘அபசுரம்’. தமிழ் புனைகதையில், லாஸாராவுக்குள்ள இடம் போல தமிழ் நாடக வரலாற்றில், சுந்தாவுக்கும் ஒரு இடம் உண்டு.

மிகுந்த அவதானிப்புச் சக்தியுள்ள கைத்திறன் வாய்ந்த கற்பனை பூர்வமான வேடப் பூனைவுக் கலைஞன். வித்தியானந்தனின் ‘கர்ணன் போர்’, ‘இராவணேசன்’ அரங்கில் ஏற்படுத்திய தாக்கத்தில் ஒரு பகுதி சுந்தாவின் மேக்கப்புக்குள் இருந்தது. ஸ்ரனிஸ்லவஸ்கி எனும் இரஸ்சிய நாடகக் கலைஞரின் நடிப்புப் பற்றிய கொள்கையான “முறைமை”(வுhந ளுலளவநஅ)யின் ஒரு முக்கிய எடுத்துரைப்பாளராக விளங்கியவர்;.

ஆபிரிக்க நாடுகளில் கற்பித்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக “பெயர்க்கண்டும் – நஞ்சுண்டமையும்” நயக்க தக்க நாகரீகம் மிக்க மனிதன். அவருடைய மிகச் சில நாடக நண்;பர்களைப் போல தன்னுடைய ஆற்றல்களைப் பற்றி தான் எதுவும் கூறாதவர். இதற்குள் சுந்தா என்ற நிர்வாகி பற்றிப் பேசப்படவில்லை. கல்வித்துறை நிர்வாகி பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால், நிச்சயமாக எனக்குக் தெரியும் தன்னை முன்னிலைப்படுத்தாத மிகமிகச் சிறிய கல்விப்பணிப்பாளர் பெயர்ப்பட்டியலிலே சுந்தாவின் பெயர் நிச்சயம் இருக்கும். அதுவும் சற்று மேலேயே இருக்கும். சுந்தாவின் மகன் சொன்னான்- ளுசை, அப்பா ஒரு  ஊழஅpடநவந அயn. உண்மையில், சுந்தாவைப் பற்றிய மிகப் பெறுமதியான மதிப்பீடு அது. சுந்தா ஒரு நிறைமனிதர். அந்தப் பெயரினுள் வாழ்ந்தவர்கள். அந்தப் பெயருக்குரியவருடன் வாழ்ந்து வந்த நம்மில் பலர், வெறுமை என்னும் வெளிக்குள் நிற்கிறோம்.

சுந்தாவை எனக்கு 1958 முதல் தெரியும். கொழும்பு வளாகத்தின் விஞ்ஞானத்துறை மாணவனாகப்  பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த காலம் முதல் அவரைத் தெரியும். முருகையனின் தம்பி சிவானந்தம் இவருடைய நண்பர், தோழர். அப்பொழுது நான் ஸாகிராக் கல்;லூரியில் ஆசிரியனாக இருந்தேன். கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானத்துறை தமிழ் மாணவர்களின் தமிழ் நாடகங்களை – தமிழ்த்துறை பேராதனைக்குப் போனதன் பின்னர் – நெறிப்படுத்தி உதவியவர்கள் வரிசையில் நான்காவது ஐந்தாவதாக எனது பெயர் வரும். சானா, சரவணமுத்து மாமா, கே.எஸ்.நடராசா, சுந்தாவும் நானும் பின்னர்;.

தமிழ் சங்கத்தின் நாடகத் தயாரிப்புக்கு துணைத்தலைவரே பொறுப்பு. 1959ல் என்று நம்புகிறேன் (அல்லது 1960இல்) சுந்தா துணைத் தலைவரானார். ஒரு புதிய நாடகம் போடவேண்டும். என்று சிவானந்தமும் சுந்தாவும் விரும்பினர். சிவானந்தம் விடாப்பிடியாகவே நின்றார். அப்பொழுது யு.N.கந்தசாமி சற்று திடகாத்திரமாக இருந்த காலம். அவருடன் உரையாடிய பொழுது, மதமாற்றக் கதையைப்பற்றி அவர் சொன்னார். உண்மையில், கதையை முதலில் தெரிந்து கொண்டு நாடக ஒத்திகைகளை ஆரம்பித்து விட்டு நாடக எழுத்துப்பிரதியை இரண்டு வாரத்துக்குள்ளேயே முழுமையாகக் கையில் பெற்றோம்.

இரண்டு, மூன்று நாளுக்கு ஒரு தடைவ யு.N.கந்தசாமி, அந்த கத்தரிப்பூ நிற புஷ்டேட்டுடன் மு.பு.மண்டபத்துக்கு எழுத்துப் பிரதியளைக் கொண்டு வருவார். அந்த நாடகத்தில் கத்தோலிக்கனாக இருந்து இந்துவாக மாறும் கதாநாயகனின் நண்பன் ஒரு கிண்டல் பேர் வழி. சுந்தாவுக்கு அந்தப் பாத்திரத்தைக் கொடுத்தோம். உண்மையில் அந்தப் பாத்திரம் சுந்தாவை வைத்து, சுந்தாவுக்கென எழுதப்பட்டது என்று கூடச்சொல்லலாம். மதமாற்றம் மிகப் பெரிய வெற்றியாயிற்று. நாடகத்தைப் பார்த்து விட்டுச் சென்ற ளு.து.ஏ.செல்வநாயகம் அதுபற்றி நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் சிவானந்தனிடம் கடைசிவரை இருந்தது.

கொழும்பில் பலர் பின்னர் அந்த நாடகத்தை மேடையேற்றினார்கள். அவர்களுள் லடிஸ் வீரமணி முக்கியமானவர். சுந்தா படித்துக் கொண்டிருக்கும் பொழுதும், படிப்பு முடிந்து மொழி பெயர்பாளராகியதன் பின் நாடகப் பயில்வுக்கான ஜேர்மன் கலாசாரக் கவுண்சில், பிரிட்டிஷ் கவுண்சில் ஆகியவற்றில் 3-4 மாதகால நாடகப் பட்டறைகளில் பயின்றவர். ஆங்கில, சிங்கள நாடகப் பரிட்சயமுள்ளவர். என் மூலமாக வானொலி நாடகத் தொடர்பும் ஏற்பட்டது. அது மத்திரமல்ல, இக்காலத்திலேதான் கூத்தாடிகளுக்கான கால்கோள் தொடங்கிற்று. 

1963இல் எனக்கு விவாகம். அத்துடன் சிறிது கால அரங்கத் தொடர்பு விநாசம். ஆனால், அதற்குமுன் பேராசிரியர் வித்தியானந்தனின் கூத்து மீட்பு தயாரிப்புக்கான கர்ணன்போர், இராவணேசன், நொண்டி நாடகம்  மேக்கப் சுந்தாதான். அப்பொழுதுதான் எங்களுக்கு மேக்கப் குச்சிகள் இலக்கங்களின்ர முக்கியத்துவம் தெரிய வந்தது. பேராசிரியர் பாலகிருஷ்ணன் சுந்தாவின் மரணச் செய்தி அறிந்து அந்த மேக்கப் செய்த சுந்தாவா என்று மிகுந்த ஆர்வத்தோடு கேட்டார். சுந்தாவைப் போலத்தான் சுந்தாவின் மேக்கப்பும், ஆள் பேசுவதில்லை. கைவண்ணம் பேசும்.

உறவு தொடர்ந்து இருந்தது. அத்தொடர்பாடலின் சில கதைகள் இப்பொழுதும் எழுத்துருக்கு வருகின்றன. 1960,70களில் முருகையன், சுந்தா, சிவானந்தம் சுந்தாவின் மனைவி எல்லோருமே கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் வேலை செய்தார்கள். ஒருநாள், உரையாடலின் பொழுது விஞ்ஞானப் பட்டதாரிகள் அதற்குரிய தொழில்களுக்குப் போகாமல், தமிழிற்குள் நிக்கிறீர்களே! என்று ஆதங்கப்பட்டுச் சொன்னேன். சுந்தா தனக்கே உரிய கூர்மையான முறையில் எங்களது இந்தத் தீர்மானத்தில் உங்களுக்கும் பங்கு உண்டு என்றார். சுந்தாவின் இந்தச் சொல் எனக்குள் நீண்டகாலமாக நின்று அவர்களைப் பற்றிய அக மகிழ்வை, வியப்பை எற்படுத்தியது. ஆழ்ந்த நித்திரையில் படுக்கையில் புரண்டு படுக்கின்ற பொழுது திறவாத கண்களின் முன் வந்து கேட்கும் வாக்கியங்களில் இதுவும் ஒன்று. அந்த நினைவு எனக்கு மீண்டும் மீண்டும் வரும். சுந்தாவுக்கு என்றுமே மரணமில்லை. “பேசாத நாளெல்லாம் பிறவா நாளே”.

1974இல் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தில் நாடகம் அரங்கியலுக்கான ஒரு சிறப்புக் கற்கை ஏற்படுத்தப்பட்டது. தம்ம யாகொட அதன் மூலவிசை, நாடகத்துறைப் புலமை உதவி- சிங்களத்திற்கு யு.து.குணவர்த்தன தமிழுக்கு நான். அந்த வகுப்பு ஒரு வருடத்துக்கு என்று தான் பெயர். ஆனால் இரண்டு வருடங்கள் நடைபெற்றது. அதன் முக்கியத்துவத்தை நான் முன்பும் கூறியுள்ளேன். சண்முகலிங்கம், சுந்தா, சிவானந்தன், காரை சுந்தரம்பிள்ளை, கவிஞர் கந்தவனம், தாசீசியஸ் திருச்செந்தூரன், சத்தார், குறமகன், வள்ளிநாயகி, திருச்செல்வம் ஆகியோர் மாணவர்கள்.

இந்தப் பெயர்களை எழுதாவிட்டால், உண்மையில் 1960க்குப் பிந்திய தமிழ் நவீன நாடக வரலாற்றை எழுதவே முடியாது. என்னையும் சுந்தாவையும் பொறுத்தவரையில் இந்த வகுப்புக்கள் முக்கியமானவை. ஏனென்றால், அதற்கு முன்னர் ஒரு மாணவ ஆசிரிய உறவு போன்ற ஓர் உறவு இருந்ததே அல்லாமல், நிஜமான ஆசிரிய மாணவ உறவு போன்ற ஓர் உறவு ஏற்பட்டது இந்த வகுப்பால்தான.; இது எனக்கு ஒரு பெரும்பேறு. சுந்தா, சிவானந்தன், சண்முகலிங்கம், கரை சுந்தரம்பிள்ளை அந்த நாட்களில் தாசீசியஸ் இவர்கள் எல்லோரும் மனம் நிறைய சேர் என்று அழைக்கும் பொழுது எனக்குள் ஒரு பெரும் சிலிர்ப்பு ஏற்படும். இவர்களால் சேர் எனப்படுவது உண்மையிலேயே என்னைக் கிறங்க வைத்தது. இவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருந்த வேளையில்தான் நான் யுளளயடையடிடந Pசழகநளளழச ஆனேன். எனக்கு நல்ல ஞாபகம் சிவானந்தம்தான் இதை முதலில் அறிவித்து, முதல் தடவையாக என்னை பேராசிரியர் சிவத்தம்பி என்று குறிப்பிட்டவர். நான் என் மாணவர்களால் இரட்சிக்கப்பட்டவன்.

நான் யாழ்ப்பாணம் சென்று விட்டேன், சுந்தா பின்னர் ஆபிரிக்கா சென்றார். 86-87இல் யாழ்பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நுண்கலைத்துறையில், சண்முகலிங்கமும் நானும் நாடகத்துக்கான பட்டப்படிப்பை ஆரம்பித்த பொழுது இருவர் கட்டாயமாக விரிவுரையாளராக வரவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டோம். ஒருவர் சுந்தா, மற்றயவர் காரை. சுந்தரம்பிள்ளை. சுந்தாவின் வருகை மிக முக்கியம். ஏனெனில் சண்முகலிங்கம் கூட தனது அரங்குக்கான தொடுகோட்டை பிறெஃட்டை உள்வங்கித்தான் தொடங்குகிறார். மண்சுமந்த மேனியர் பிறெஃட்டின் தொலைபடுத்தல் உத்தியை, நமது கூத்துமரபின் ஆட்டச்சித்தரிப்பு உத்தியோடு இணைக்கின்றதில் முக்கியமானது.

சுந்தா வித்தியாசமானவர். சுந்தா முழுக்க முழுக்க ஸ்ரனிஸ்லவஸ்கியின் பள்ளியைச் சார்ந்தவர். யதார்த்த நாடகத்தை தனது கொள்கைத் தளமாகக் கொண்டவர். நமது மாணவர்கள் அந்தச் சிந்தனை முறைமையைத் தெரிந்தவர்களாக அந்த நாடகப் பாரம்பரியத்திற்கு பழக்கப்பட்டவராக வரவேண்டும் என்பது எனது அபிப்பிராயம். பல்கலைக்கழக மட்டத்தில் குறிப்பாக முதற்பட்ட நிலையில் மாணவர்கள் பாடவிடயம் பற்றி படிக்கின்ற பொழுது அப்பாடம் பற்றிய எல்லாக் கண்ணோட்டங்களையும் கொள்கைகளையும் அறிந்திருத்தல் வேண்டும். அது மிக மிக முக்கியம். சுந்தா நமது மிக முக்கிய வருகை விரிவுரையாளர்களில் ஒருவராக விளங்கினார். துரதிஷ்டவசமாக அவரது மனதைப் புண்படுத்திய ஒரு கலைப்பீடாதிபதியும் உண்டு. ஆனால் சுந்தா சட்டை மீது விழுகின்ற எச்சங்களை கையால் தட்டிவிட்டு தன் கைகளை மாத்திரமல்ல மனத்தையும் கழுவிக் கொள்பவர்.

“மனிதரிலே மனிதருண்டு. வானவரும் மனிதராய் வருவதுண்டு”

அண்மையில் தமிழ் கலைச் சொல்லாக்க மீளாய்வுச் செயற்திட்ட ஒருங்கினைப்பாளராக இருந்தபோது 1970களில் கொண்டு வரமுடியாது போன நாடகம் அரங்கியல் பற்றிய கலைச்சொல் தொகுதியினை இப்பொழுது நாம் மீளக் கொண்டு வருவதற்கு சுந்தாவே காரணம். அவர் தன்னிடம் இருந்த (70களில்) அச்சேறின யு முதல் ணு வரையான ஆவணங்களின் பகுதியைத் தந்தார். இத்தகைய கவனங்கள்தான் சுந்தாவை நாங்கள் வியந்து பார்க்க வைப்பன. அத்துடன் கா.பொ.த. (சா.த) நாடக அரங்கியற் பாடவிதானத்தை தமிழ் மொழிவழி வாய்புக்கு அமைத்த பொழுது, அதற்கான ஆசிரியர் கைந்நூலை முன் நின்று தயாரித்தது சுந்தாதான். அந்த நூல் இப்பொழுது அச்சாவதாகக் கேள்வி. சுந்தாவை நான் மறக்க முடியாது. என்னைப் பற்றி நான் என் மனதில் வைத்துக் கொண்டுள்ள வரைவுள்ளே சுந்தாவும் ஒரு மிக முக்கியமான புள்ளி. நமது பாரம்பரியத்தில் நிறைகுடம் தூக்கப்படுவது தெய்வக் குடமுழுக்குகளிற்காகத்தான். சுந்தா நான் ஊடாடிய முருகனுக்கான பாலபிஷேகமாகி விட்டான். நமது மனங்களை குளிர வைத்தவன் தெய்வங்களையும்…..!!!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: