Theva

ஜனகரலய – மக்கள் களரி

In ஆக்கம் on பிப்ரவரி23, 2008 at 9:23 முப

People’s Theatre

“நீண்ட காலமாகச் செயற்பட்டு வரும் அங்கீகரிக்கப்பட்ட நாடகக் கலை சமூகத்தில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மாத்திரம் செல்லக் கூடிய நிலையில் இன்று உள்ளது. இதனைப் புரிந்துகொண்ட நாங்கள் 1948ஆம் ஆண்டு தொடக்கம் வீதி நாடகக் குழுவாக நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று நாடகங்களை நிகழ்த்தினோம். இதன் மூலமாக உண்மையான அரங்கம் தொடர்பான அனுபவங்கள் சிலவற்றைப் பெற்றுக்கொண்டோம். அதனூடாக மக்களுக்கிடையில் நாடகங்களைப் போடும் விதிமுறை தொடர்பான எண்ணம் எம் மனதில் தோன்றியது.

ஒவ்வொரு இடத்திற்கும் சென்று செந்நெறி நாடகங்களை மேடையேற்றக்கூடிய அரங்கு ஒன்றை உருவாக்கினோம். இதற்காகவே நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றி நடத்திச் செல்வது இதன் நோக்கமாக இருந்தது. இந்த எண்ணக்கருவை மீண்டும் மீண்டும் புதுப்பித்து இருபத்தைந்து வருடங்களின் பின் தற்போது ‘ஜனகரளய’ என்ற நாடோடி நாடகத் திட்டத்தைச் செயற்படுத்துகின்றோம்.” ஜனகரளய நாடகக் குழுவினர் இப்படிக் கூறுகின்றனர். பராக்கிரம நீரியல்ல H.A.பெரேரா போன்ற நாடகக் கலைஞர்கள் இக்குழுவை வழிப்படுத்துகிறார்கள்.

இந்தக் குழுவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் இளைஞர் யுவதிகள் உள்ளடங்கலாக 24 பேர் உள்ளனர். இதில் தயாரிக்கப்படுகின்ற ஒவ்வொரு நாடகங்கமும் தமிழ் சிங்கள மொழிகளில் தயாரிக்கப்படுகின்றது. மொழித் தடையில்லாமல் இலங்கையின் எல்லா மக்களும் நாடகங்களைப் பார்ப்பதற்கு ஏற்ப நாடகங்களை வழங்குவது இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.

குறு நாடகங்களையும் நீண்ட நாடகங்களையும் இக்குழு தயாரித்து மேடையேற்றுகிறது. தயாரிக்கப்படுகின்ற நாடகங்கள் 450 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய நடமாடும் நாடக மேடையில் (கூடாரம்) மேடையேற்றப்படுகின்றன. மேலும் இந்தக் கூடாரத்தில் அந்தந்தப் பிரதேசக் கலை இரசிகர்களுடனும் கலைஞர்களுடனும் சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன.

ஜனக்கரலய நாடகக் குழு வெவ்வேறு இடங்களில் நாடகங்களை மேடையேற்றும் அதேவேளை பாடசாலை மாணவ மாணவிகளிற்கான நாடகக் களப்பயிற்சிகள், செயல் அமர்வுகள், நாடக இரசனை தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உளரீதியான அபிவிருத்திக்கு உதவியாக இருக்கும் பிரயோக அரங்கச் செயல் முறையும் இதன் ஓர் அம்சமாகும்.

உண்மையான சமாதானத்தை எதிர்பார்ப்பதற்கு சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையில் கலாசார ரீதியான ஒருமைப்பாடு வளர்ச்சியடைய வேண்டும். இது நாடகக் கலை சார்ந்த செயற்பாடாக அமைய வேண்டுமென்று ஜனக்கரலய நாடகக் குழு விரும்புகின்றது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: