Theva

அரங்கினூடான உளசமூக மேம்பாட்டுச் செயற்பாடுகள்

In கட்டுரை on பிப்ரவரி23, 2008 at 9:12 முப

சுனாமி பேரலைத் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் யாழ். மாவட்டத்தில் தற்போது 17 இடைத்தங்கல் முகாம்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் தங்கியுள்ள மக்களின் உளநெருக்கீட்டை தீர்ப்பதற்கான செயற்றிட்டங்கள் நடைபெறுகின்றன. முக்கியமாக சிறுவர்களின் உளநெருக்கீட்டைத் தீர்ப்பதற்கு அரங்கச் செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

சர்வதேச அரசார்பற்ற நிறுவனங்களின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்ற இச்செயற்பாட்டில் சிறுவர்கள் விளையாட்டுக்களை விளையாடுதல், ஆடுதல், பாடுதல், பாகமாடுதல், கதை சொல்லல் போன்ற செயற்பாடுகள் நடைபெறுகின்றன. இது சிறுவர்களுக்கான மகிழ்வளிப்பு செயற்பாடகவும் கல்வியூட்டல் செயற்பாடாகவும் அமைகிறது. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள சிறுவர்கள் மாலை வேளைகளில் அரங்க நிறுவனங்களைச் சேர்ந்த ஆற்றுகையாளர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

உறவுகளை இழந்து துயரில் ஆழந்திருக்கின்ற பெரியவர்களுக்கான அரங்கச் செயற்றிட்டங்கள் போதியளவு நடைபெறவில்லை. ஒரு சில முயற்சிகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டாலும் அவை போதிய திறன் இல்லாதவர்களால் மேற்கொள்ளப்படுவதால் தேவையறிந்த செயற்பாடாக அமையவில்லை. மேலும், அரங்கினூடான உளசமூக மேம்பாட்டுச் செயற்றிட்டம் சீரான திட்டமிடல் இன்றி மேற்கொள்ளப்படுவதையும் காணமுடிகின்றது. திட்டமிடல் சீராக இல்லாததால் போதாமைகளுடன் கூடிய தொடர்ச்சியற்ற செயற்பாடுகளாகக் காணப்படுகின்றன.

அரங்கச் செயற்பாட்டுக் குழு (TAG) பல்கலைக்கழக நாகத்துறை, செயல்திறன் அரங்க இயக்கம் (ATM), சமூக செயற்பாட்டு மையம் (JSAC) போன்ற நிறுவனங்களைச் சார்ந்தோர் நலன்புரி நிலையங்களில் அரங்கினூடான உளசமூக மேம்பாட்டுச் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: