Theva

Editorial: நாடகப் போட்டிகள்

In பொது on நவம்பர்24, 2007 at 10:33 முப

சென்ற யூலை, ஓகஸ்ட் மாதங்களில் யாழ்ப்பாணத்தில் அதிகமான நாடகப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. சிறுவர் நாடக விழா என்ற பெயரில் ஆரம்பப் பாடசாலைகளுக்கிடையில் சிறுவர் நாடகப் போட்டிகள் கல்வி வலய ரீதியாக நடைபெற்றன.

தமிழ்த்  தினப் போட்டிகளும் நாடகப் போட்டிகளும் கல்வி வலய ரீதியாக நடைபெற்றன.

இதனைவிட தென்னை பனை அபிவிருத்திச் சபை கூட்டுறவுச் சங்கம், சின்மய மிஷன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், கல்வியியல் கல்லூரி, கியூடெக், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்ற நிறுவனங்களும் வௌ;வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நாடகப் போட்டிகளை நடத்தியிருந்தன.

இப்போட்டிகள் பரவலாக எல்லா இடங்களிலும் நாடகங்கள் தயாரிக்கப்படுவதற்கும் மேடையேற்றப்படுவதற்கும் ஊக்கமளிப்பவையாக உள்ளன. இருப்பினும் இவற்றை நாடகத்துறை வளர்ச்சிக்கான ஒன்றாகக்  கருதமுடியவில்லை. போட்டிகளில் கலந்து கொள்ளும் அதிகமான நாடகங்கள் போதிய அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட நல்ல நாடகங்களாக இல்லை. நாடகங்களில் தரமான நாடகங்கள் மேடையேற்றப்படுவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு ஏன் நாடகப் போட்டிகளை நடத்துகிறோம்? அதனூடாக எதை அடைய நினைக்கிறோம்? என்ற தெளிவுடன் நாடகப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இதில் நாடகம் சரியாகவும் இருந்தால்தான் சொல்லவரும் விடயமும் தாக்கவன்மையுடன் சென்றடையும் என்பதை போட்டிகளை நடத்துபவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

போட்டியில் பங்கு கொள்வோர் பார்ப்போர் சொல்லும் விடயம் சொல்லப்படும் முறைமை சொல்லப்படும் இடம் என்பன கவனத்தில் எடுக்கப்பட்டு நாடகப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். போட்டி முடிவில் பங்குபற்றிய நாடகங்கள்  பற்றிய மதிப்பீடு நிகழ்த்தப்பட வேண்டும். ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். குறை நிறைகள் கதைக்கப்பட வேண்டும். நாடகப் போட்டி ஒன்றை நடத்துவதற்கு முன் நாடகக் கருத்தரங்குகள், களப்பயிற்சிகள் நடத்துதல் ஆரோக்கியமான வழிமுறையாக அமையும்.

அடுத்து நாடகப்  போட்டிகளில் மதிப்பீட்டாளர்கள் நாடகத்துறை சார்ந்தவர்களாக, செயல்முறை அனுபவம் உடையவர்களாக செயற்பாட்டாளர்களாக இருத்தல் சிறந்தது. சரியான மதிப்பீடுகள், நடைபெறும் போது அதுவே நல்ல நாடகப் போக்கை நெறிப்படுத்தும். நாடத்துறை வளர்ச்சிக்கு நாடகப்  போட்டிகள் நடத்துவது மட்டும் போதுமானதாக அமையாது நாடகப்  போட்டிகளுக்கு முன்னும் பின்னும் நடக்கும் விடயங்களே முக்கியமாகின்றன. இதனை நாடகப் போட்டிகளை நடத்துபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

-ஆசிரியர்குழு

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: