Theva

பிரயயோக அரங்கு என்பது ஒருவகையான அரங்கு அல்ல…..

In ஆக்கம் on நவம்பர்24, 2007 at 10:10 முப

இங்கிலாந்து மன்செஸ்ரர் பல்கலைக்கழக நாடகத்துறை விரிவுரையாளர் திரு ஜேம்ஸ் தொம்சன் அவர்கள் பிரயோக அரங்கு பற்றிய கருத்துரையை 29.07.2004 அன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தியிருந்தார். அதன் தமிழாக்கம் இங்கே பிரசுரமாகின்றது.                                             (ஆ.ர்)

thomsan.jpgபிரயோக அரங்கு பல்கலைக்கழகங்களுடைய பல்வேறு செயற்பாடுகளிற்கு ஊடாக வருகின்ற ஒரு நிலை இருக்கின்றது. இங்கிலாந்தில் இருக்கின்ற பல்கலைக்கழகங்களுடைய அமைப்பு முறையிலே அரங்கக் கற்கை என்ற துறை இருக்கிறது. அதில் இருந்து பிரயோக அரங்கை நோக்கிப் போகிறோம். இதன் அடிப்படை நோக்கம் அந்தந்தக் கோபுரத்துக்குள் இருந்து, பல்கலைக்கழகத்துக்குள் இருந்து அரங்கை வெளியிலே கொண்டு போவதுதான். அதை சமூகத்திடம் கொண்டு வந்து அந்த அரங்கைப் பயன்படுத்துதல். அதை அவர்களுக்கு முன்னே நிறுத்துதல். அதன் மூலம் அந்த அறிவியல் நிறுவனத்துக்கும் சமூகத்துக்கும் – எந்த சமூகத்தில் அது வாழுகின்றதோ – அதற்கும் அந்த சமூகத்துக்கும் இடையில் ஒரு தொடர்பு ஏற்படுகின்றது.

கையிலே ஒரு காயம் ஏற்பட்டால் நாங்கள் கிறீமை அதில் பூசுவேம் அல்லது பிரயோகிப்N;பாம். அதுபோன்றே, அரங்கு ஒரு கிறீம் ஆக இருக்கிறது. சமூகத்தில் சில காயங்கள் இருக்கின்றன.   இந்த கிறீமை சமூகத்தினுடைய காயங்களுக்குப் பூசுதல், தடவுதல் பயனுள்ளது. எனினும் அந்த அர்த்தத்திலே நாங்கள் பிரயோக அரங்கை வரைவிலக்கணம் செய்யமுடியாது. ஏனென்றால், அரங்கு புண்களுக்கு மருந்து பூசுவது போல இல்லை.

பிரயோக அரங்கு என்றால் இதுதான் என்று ஒன்றை நாங்கள் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளமுடியும். அதாவது, உங்களுடைய கைவினையை நீங்கள் நன்கு பயன்படுத்துதல். பிரயோக அரங்கு என்பது புண்ணுக்கு மருந்து பூசுவது போன்றது அல்ல. உங்களுடைய அரங்கு சம்பந்தமான உங்களுடைய கைவினை ஆற்றலை மிகக்கடுமையாக சமூகத்தினுடைய தேவைக்காக சமூகத்தினுடைய பயன்பாட்டுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுதல்.

சமூகத்திலே வேர்விடாமல் சமூகத்திலே இருந்து பிடுங்கி எடுக்கப்பட்டு வேறாக்கப்பட்டு, தனிமைப்பட்டு இருந்த ஒரு அரங்குக்கு எதிராகத்தான் பிரயோக அரங்கு வந்தது. இதுவரை நான் பிரயோக என்ற சொல்லைத்தான் பயன்படுத்தி வந்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அரங்கு என்ற சொல்லைப்பற்றி இன்னும் சொல்லவில்லை.

பிரயோக அரங்கு என்பது ஒருவகையான அரங்கு அல்ல. அது உங்களுக்கு உங்களுடைய அரங்கு சார்ந்த உங்களுடைய கைவினை. அதனை வைத்துக்கொண்டு நீங்கள் செய்கின்ற வேலைகள் பிரயோக அரங்கேயொழிய அது வெறுமனே அரங்கு அல்ல. ஆனபடியால் பிரயோக அரங்கு என்பது ஒரு வடிவம் அல்ல. அது ஒரு விருப்பம் அல்லது ஒரு கருத்து அல்லது ஒரு மனப்பாங்கு ஆகும்.

ஐக்கிய இராச்சியத்திலே பிரயோக அரங்கு என்பதனுடைய வரலாறு பற்றி நாங்கள் சிறிது பேசலாம். இந்தப் பல்கலைக்கழகம், சமூதாயம் இந்த மட்டங்களிலே பிரயோக அரங்கு பற்றிச் சிந்திக்க வேண்டி வந்ததற்குக் காரணம் இரண்டு வடிவங்களிலே இந்த அரங்கைப் பயன்படுத்துகிற ஒரு நோக்கம் இருந்ததாகும். பிரித்தானியாவில் கல்வி அரங்கு, சமுதாய அரங்கு ஏனைய அரங்குகள் எல்லாம் அங்கு இருக்கின்றன. அவை சமூகத்திலே சில பணிகளைச் செய்து கொண்டு இருக்கின்றன.

60, 70களில்தான் இந்த வடிவங்கள் மேற்கிளம்பி அவை பிற்காலத்திலே வளர்ச்சியடைந்தன. அதேபோல வேற ஒரு சார்பில் இருக்கிற அரங்க கூட்டங்கள் இருக்கின்றன. நவவேட்கைவாத அரங்கு, பரீட்சார்த்த அரங்கு, தொழில்முறை அரங்கு என்ற அரங்குகள் ஒருசார்பானவை. இந்த அரங்குகள் இரண்டிலுமே ஒன்று சமூகவிடயத்தை முன்னெடுத்து அதனை முக்கியப்படுத்தியது. மற்றையது அழகியலை முக்கியப்படுத்தியது. ஒரு அரங்கு அழகியலை முக்கியப்படுத்திக் கொண்டு போக இன்னொரு அரங்கு சமூகநிலைப்பாட்டை முக்கியப்படுத்தியது. அழகியல் அரங்கு என்று சொல்லப்படுகிற அரங்கு தனியார்துறைத் தன்மையைப் பெற்று அது சமூகத்தோடு இருக்கின்ற உறவுகளை அதிகம் பேணமுடியாத நிலையிலே அது தன்பாட்டுக்குப் போகின்ற நிலை இருந்தது.

சமுதாய அரங்கு சமுதாயத்திலும், பாடசாலையிலும் அரங்க செயற்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வந்தது. சமுதாய அரங்கோடு ஈடுபடுபவர்கள் அழகியல் அரங்கை குற்றம் சுமத்துவார்கள். அதற்கு மக்களோடு எந்தத் தொடர்பும் இல்லை. சமுதாயத்தோடு எந்த ஒட்டுறவும் இல்லை எனக் குறைகூறுவார்கள்.

அழகியல் அரங்குக்காரர் சமுதாய அரங்குக்காரரைப் பார்த்து அழகியலலைக் கைவிட்டார், அரங்கைக் கைவிட்டார், ஆனபடியால் இது அரங்கு அல்ல என்ற ஒரு நிலைக்கு அவர்கள் உந்தப்படுகிறார்கள். இதிலே, இருக்கின்ற முக்கியமான பிரச்சினை என்னவென்றால் அழகியல் அரங்குக்கு சமுதாய உள்ளடக்கம் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல சமுதாய அரங்கு அழகியலோடு செயல்படுகின்ற போதுதான் அதனுடைய முக்கியமான பண்பு அங்கே சுவறப்படுகின்றது அல்லது சுவறுகின்றது.

இங்கிலாந்திலே இபN;பாது ஒரு நிலமை வந்திருக்கிறது. அழகியல் அரங்கைச் சேர்ந்தவர்களும், சமுதாய அரங்கைச் சேர்ந்தவர்களும் ஆளையாள் சந்தித்து ஒருவருக்கொருவர் கதைத்து உதவிசெய்து இந்த அரங்குகளினுடைய பயன்பாட்டை வளர்த்தெடுக்க முடியும் என்ற ஒரு நிலைப்பாட்டுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.

நீங்கள் கல்வித்துறையிலே ஒரு பாடசாலையிலே உடல்நலம் அல்லது சுகாதாரத்தைப் பற்றி அந்த மாணவர்களுக்கு ஒரு நாடகம் செய்யவெளிக்கிட்டால் அந்த நாடகத்தை எந்த அளவுக்கு அழகியல் பண்போடு கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு அழகியல் பண்போடுதான் கொடுக்க வேண்டும். ஆனபடியால் இரண்டும் வேறு அல்ல. எந்தளவுக்கு அவர்களுக்குப் போடப்படுகின்ற அரங்கின் தரம் கூடுதலாக இருக்கின்றதோ அந்தளவுக்கு அதைப் பார்வையிடுகின்ற மாணவர்களின் தரம், அனுபவம் செழுமையாக இருக்கும்.

அதேபோல அழகியல் அரங்கு அல்லது தொழில்முறை அரங்கு சார்ந்தவர்களும் இப்N;பா  உணரத்தொடங்குகிறார்கள். தாங்கள் தயாரிக்கின்ற நாடகங்கள் சமூக உள்ளடக்கம் கொண்டதாக, சமுதாயத்துக்குப் பயன்படக்கூடிய கருக்களைக் கொண்ட நாடகங்களாக இருக்க வேண்டுமென்பதை உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

ஆனபடியால் நான் முதல் சொன்ன வரைவிலக்கணத்துக்குத் திரும்பி வரலாம். அதாவது, கலைஞர்களை உருவாக்கி அந்தக் கலைஞர்கள் தங்களுடைய கலைசார்ந்த கைவினையை – அது இசைஞர்களாக இருக்கலாம், நடனகாரராக இருக்கலாம், நாடகக்காரராக இருக்கலாம். எவராக இருந்தாலும் தங்களுடைய கைவினையை – கைத்திறனை சமுதாயத்தினுடைய மேம்பாட்டுக்காக நல்ல கலைப்படைப்புகளோடு நல்ல ஒரு அர்பபணிப்போடு செயல்படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தித்தான் இந்தப் பிரயோக அரங்கு வருகிறது.

இங்கு இலங்கையிலே பிரயோக அரங்கப் பணிகள் எதையும் நான் பார்க்கவில்லையா என என்னைச் சிலர் கேட்டார்கள். நான் இங்கே வந்து ஒரு சில களப்பயிற்சிகளை நடத்துகிறபோது அவற்றிலே என்னுடைய மரபிலே வந்த சில அரங்க விளையாட்டுக்கள், அரங்கப் பயிற்சிகளை காணமுடிந்தது.

அரங்க அனுபவம் இல்லாதவர்களுக்காக பங்குபற்றுதல் அரங்கு என்ற அடிப்படையிலே திட்டமிடப்பட்ட ஒரு முறைமைதான் என்னுடையது. இலங்கையிலே பல்வேறு இடங்களிலே சமூகத்திலே பல்வேறு பிரிவினரோடு நான் இதைப் பிரயோகித்துப் பார்த்திருக்கின்றேன். இந்தத் தேசத்தின் அரங்கினைப் பிரயோகிக்கின்றவர்களை நான் பார்ததிருக்கிறேன். 2000ம் ஆண்டு ஐனவரியில் நான் யாழ்ப்பாணம் வருவதற்கு முன் எங்களுடைய நூல் நிலையத்திலே இலங்கை அரங்குபற்றிய புத்தகங்களைத் தேடினேன். இலங்கையினுடைய அரங்குபற்றி படிக்கக்கூடிய ஒரே ஒரு புத்தகம் இருந்தது. அதைத்தான் படித்திருந்தேன்.

200 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்திலே மூன்று வரிகளிலே சொல்லப்பட்டிருந்தது. யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்திலே அரங்கு இல்லையென்று. அது குப்பை. நான் இங்கு வந்து பார்த்தபோது பல அரங்கவியலாளர்கள் பல்வேறு வகையான அரங்குகளை வைத்திருக்கின்றார்கள். மக்களோடு சமுதாயத்தோடு அரங்கச் செயற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதை நான் கண்ணாலே கண்டேன்.

அந்த அரங்கக் கலைஞர்களிடம், தங்களுடைய அரங்கச் செயற்பாடுகளை சமூகத்துக்கும், அந்தக் காலத்துக்கும் பொருத்தமானதாக ஆக்க வேண்டும் என்ற ஆவல், மிகுந்த ஈடுபாடு இருந்ததை நான் கவனித்தேன். யாழ்ப்பாணத்தில் ஒருவகையான அரங்கு மட்டும் இருக்கவில்லை. பாடசாலையோடு தொடர்பான அரங்கு இருந்தது. கூத்துக்களை மீளாக்கம் செய்கின்ற நடவடிக்கைகள் நடந்தன. நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கிற பிரச்சினைகள் சம்பந்தமான எழுத்துருக்களைப் படைக்கிறதென்று பலவகையான செயற்பாடுகள் இங்கு இருந்து வந்ததைக் கண்டேன்.

அந்தப் புத்தகத்திலே குறிப்பிடப்பட்ட அந்த முரண்பாடு அல்லது மோதல் அல்லது யுத்தம் நாடகம் உருவாக்குவதை நிறுத்தி வைக்கவில்லை. இந்த யுத்தம் மக்களுடைய ஆக்கச் செயற்பாடுகளிற்குத் தடைவிதிக்கவில்லை. அதற்குப்; பதிலாக அங்கு எழுகின்ற பிரச்சினைகளுக்குப் பொருத்தமான விசயங்களை அவர்கள் தங்களுடைய கலைப் படைப்புக்களினூடே படைக்க வேண்டும் என்ற தீவிரத்தையும், பற்றையும், ஈடுபாட்டையும் அது பலமடங்கு அதிகரித்திருந்ததை நான் பார்த்தேன். இந்த நிலையிலே நான் பார்க்கின்ற போது இங்கே தங்களுடைய அரங்கைப் பிரயோகிக்காமல் இருந்த எவரையும் நான் காணவில்லை.

இங்கிலாந்து போன்ற நாடுகளில் நீங்கள் பார்க்கலாம். சிலர் தங்களுடைய அரங்கப் பணிகளைத் தங்களுக்குள்ளே இருந்து செய்துகொண்டிருக்கிற ஒரு நிலமை இருக்கிறது. ஆனால் இங்கே ஒரு அவசரம், ஒரு இக்கட்டு, பிரச்சினைகள் மிகுந்திருக்கின்ற ஒர் சூழலிலே வாழுகின்ற வடக்கு கிழக்கிலே அப்படி ஒதுங்கி இருந்து தங்களுடைய பாட்டுக்கு அரங்கைச் செய்கின்ற நிலமை சாத்தியமில்லை.

என்னுடைய நாட்டிலே இருந்த அழகியல் அரங்கு, சமூக அரங்கு என்ற வேறுபாட்டை இங்கு நான் வந்தபோது நான் காணவில்லை. இங்கே அந்த குறித்த காலத்திலே, அந்த குறித்த சமூகத்தினுடைய தேவைக்காக, எல்லோரும் – அது நாடகம் எழுதுகிறவர்களாக இருந்தால் என்ன, வேறுயாராக இருந்தால் என்ன – சிறிய அளவிலே தங்களுடைய சமூகத்தவரோடு சேர்ந்து அரங்கைப் படைத்தார்கள். அவற்றில் இருந்து நான் அறிந்து கொண்டது என்னவென்றால் பிரயோக அரங்கு என்பது தனித்த ஒன்று அல்ல. அது அந்த அரங்கினை அது எந்த அரங்காக இருந்தாலும் அந்த அரங்கினைப் பயன்படுத்துகின்றவர்களுடைய மனப்போக்கு. அந்த மனப்போக்கு இங்கு அனைவரிடமும் இருந்ததை நான் கண்டேன். ஆனபடியால் நான் இங்கே இருந்து பெற்றுக்கொண்டு போகின்ற இந்தக் கருத்தினை என்னுடைய நாட்டிலே நடைபெற்றக் கொண்டிருக்கின்ற அந்த விவாதங்களுக்கு நான் ஒரு தர்க்கமாக, ஒரு வாதமாக முன்வைத்து வருகின்றேன். அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: