Theva

நடிப்பு – அது என்ன பண்டம்?

In செய்தி on நவம்பர்24, 2007 at 10:31 முப

shokkan.jpg– சொக்கன்

மகாவித்துவான் வீரமணி ஐயர் மறைந்து ஓராண்டு ஆகிறது. அவருடன் நான்கு ஆண்டுகள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராக இருந்தவன் நான்.

ஒரு தடவை “கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி” பற்றி அவர் புதுக்கருத்து ஒன்று கூறினார். உண்மையில் மயில் தன் அழகிய சிறகை விரித்தாடுவது அதன் இயல்புச் செயல். அது நடனம் என்ற கலையாகாது. மயிலைப் போலத் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடுகிறதே வான்கோழி? உண்மையில் அது ஆடுவதுதான் கலை. அதாவது ஒன்றைப் போல் போலிப்புச் செய்யும் அபிநயம்தான் கலை, நடனக்கலை.

“நாடகத்தில் நடிப்பு என்பது போலிப்பு.” ஏற்கலாமா? டி.கே. சண்முகம் ஒளவையாராக நடித்ததைப் பார்த்து “நீர் ஒளவையாராகவே மாறிவிட்டீர்” என்று நண்பர் ஒருவர் பாராட்டினார். அதனை டி.கே. சண்முகம் வன்மையாக மறுத்தார். “இல்லை  நான் ஒளவையாராக மாறவில்லை. நான் டி.கே. சண்முகம் நான் ஒளவையார் பாத்திரத்தை என்னில் படைக்கிறேன். ஒவ்வொரு நிமிடமும் இந்த உணர்விலிருந்து நான் விடுபடுவதில்லை என்றார்.

தன் மறப்பு, ஏற்கும் பாத்திரமாகவே மாறல் என்பதெல்லாம் உண்மை நடிப்பாகாதா? நடிகன் தன்னில் குறித்த பாத்திரத்தைப் படைப்பதுதான் நடிப்பா?

அண்மையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சுயசரிதையைப் படித்தேன். அவர் தம்மை மிகைநடிப்பாளர் என்று குறை கூறுபவருக்குப் பின்வருமாறு பதிலளித்தார்.

நடிகன் ஒருவன் அந்தக் களத்தில் வெளிப்படுத்த வேண்டிய உணர்ச்சியை வெளிப்படுத்துவது மிகை நடிப்பு என்பீர்களானால் நான் மிகை நடிப்பாளன்தான். ஆனால் உணர்ச்சி தோன்றிப் பல காலங்களுக்குப்  பிறகு வெளிப்படுத்துவது என்பது டியூப்லைட்டில் வெளிச்சம் வருவது போல அதனால் என்ன பயன்? (அவர் கூறியதன் சாரம் இது)?

நடிகன் தனது உணர்ச்சியை உடனடியாக யதார்த்தபூர்வமாக வெளிப்படுத்துவது மிகைநடிப்பா?

‘நவரசங்கள்’ என்ற நூலிலே ச.கு.கணபதி ஐயர் அருவருப்புச் சுவை பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.

பன்றி ஒன்று சேற்றில் புரள்வது அருவருப்பு என்ற உணர்ச்சியைத் தரும். ஆனால் அதன் மையக் கருத்தினை ஒருவன் தத்துவரூபமாக வரைந்தால் அது ‘பீபத்சம்’ என்னும் அருவருப்பு ரசமாகும். எந்த கலையையும் அழகுபெறப் புலப்படுத்தல் என்பதுள் நடிப்பையும் சேர்க்கலாமா?

ஆக இங்கு ஒத்தவை போலவும் மாறுபட்டவை போலவும் நடிப்பைப் பற்றிக் கூறப்பட்ட கருத்துக்களுக்கு கூத்தரங்கினரே உங்கள் விடை என்ன?  இது அறிந்தோன் வினா அல்ல. அறியான் வினா.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: