Theva

அரங்கச் செயற்பாட்டாளர் ச.பாஸ்கரன் பற்றி…

In சொற்சித்திரம் on நவம்பர்24, 2007 at 10:40 முப

அரங்க வரலாற்றில் மறைந்து கிடப்பவர்கள் 01

– ஆனந்த்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் 1994ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வண்டிலொன்று முன் வாயில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் அனுமதி பெற்று உள் நுழைகிறது. அதனை வயோதிபத் தோற்றமுடைய ஒருவர் ஓட்டிச் செல்கிறார். மெல்லியதாக மழை தூறிக்கொண்டிருக்கிறது. வண்டில்  பல்கலைக்கழக வீதியில் உருளத்  தொடங்கியதும் இரண்டு மாணவர்கள் அதில் ஏறி நின்றபடி செல்கிறார்கள். மாணவர்கள் ஊழியர்கள், விரிவுரையாளர்கள் அனைவரும்  என்ன இது? என்று கேள்வியுடன் அங்காங்கே நின்று பார்க்கிறார்கள். வண்டி ஓட்டி வரும் முதியவர் தோற்றத்தையுடையவர் பாடிச் செல்கிறார்.

baskaran.jpg“நடடா ராசா மயிலக்காளை
நாளை விடியப் போகுது”  கைலாசபதி கலையரங்கின் முன்னால் வண்டியை திருப்பி மாட்டை அவிட்டு அங்கிருந்த மரத்தில் கட்டுகிறார் மாணவர்கள் இருவரும் வண்டியில் இருந்து இறங்கி விரிவுரை மண்டபத்திற்கு செல்கிறார்கள். வண்டில்கார கிழவனை சில சிரேஷ்ர மாணவர்கள் அணுகி “ஏன் ஐயா இங்க வந்தனீங்கள்” எனக் கேட்கிறார்கள்.

“தம்பி, சைக்கிள் காத்து திறந்து விடுகிறாங்களாம். காத்து திறக்க முடியாத வாகனமென்று
வண்டில பிடிச்சுக் கொண்டு வந்ததுகள். சின்னப் பள்ளிக் கூடங்களுக்கு ஓடுகிறனான் ஐம்பது ரூபா தாரவை. இது பெரிய பள்ளிக்கூடமென்றபடியா எழுபத்திஐந்து ரூபாவுக்கு வந்தனான்.”

முதியவரின் வார்த்தைக்குப் பின்தான் சிரேஷ்ட மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் புரிந்தது. புதுமுக மாணவர்களை வேட்டி உடுத்தி சைக்கிளை பல்கலைக்கழக முன் வாசலில் இருந்து உருட்டிக் கொண்டு வருமாறு வருத்துகின்ற ராக்கிங் நடவடிக்கைக்கு எதிரான ஒரு நடவடிக்கை இதுவென்று.

உடனடியாக பல்கலைக்கழகம் எங்கும் இருந்த சிரேஷ்ர மாணவர்கள் ஆத்திரத்துடன் வண்டிலுக்கு அருகில் ஒன்று கூடுகிறார்கள். விரிவுரை மண்டபத்திற்கு சென்ற மாணவர்கள் இருவரும் மீண்டும் வண்டிலில் ஏறிக்கொள்ள வண்டில் முன் வாயிலை நோக்கி செல்கிறது. ஒருவர் இந்தக் காட்சியை படமெடுக்கிறார். விரிவுரையாளர் ஒருவர் ஆத்திரம் கொண்டு கத்துகிறார். “படத்தை எடுத்து பேப்பரில போடப் போறாங்கள் கேற்றப்பூட்டி வண்டில மறியுங்கோ” ஐந்நூறுக்கு மேற்பட்ட சிரேஷ்ட மாணவர் கூட்டம் முன்வாயிலை நோக்கி ஓடிச்சென்று வாயில் கேற்றை பூட்டி விடுகிறார்கள். வண்டிலைச் சூழ்ந்து மாணவர்கள் கூட்டம்.

வட்டிலில் வந்தவர்கள் மாணவர்கள்தானா என்பதை உறுதி செய்ய பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் முனைகிறார்கள். “ஏன் வண்டியில் வந்தீர்கள்.” “பல்கலைக்கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்.” இது அவர்களின் குற்றச்சாட்டு. ராக்கிங்கிற்கு எதிராக வண்டியில் வந்த மாணவர்கள் பல்கலைக்கழக ஒழுக்காற்று விதியின்படி ஒரு மாணவன் எந்தவொரு வாகனத்திலும் வரமுடியும். இது எந்த வகையில் பல்கலைக்கழகத்தை குழப்புவதாக அமையுமென்று வாதிட்டுக் கொண்டிருக்கும் போது வண்டியின் அச்சாணி கழற்றப்பட்டு, வண்டில் சில்லு பல்கலைக்கழக மைதானத்தில் மாணவர்களால் உருட்டிச்  செல்லப்படுகிறது. வண்டில்காரன் மாட்டை கையில் பிடித்து வைத்திருக்கிறார்.  மழைத் தூறல் சற்று பெரிதாக ஒட்டிய மீசை கரைந்து முக ஒப்பனை கழுவுப்படுகிறது. “அடே இது ஆயுள் வேதம் படிச்சு நாடகம் செய்யிற அரியாலை பாஸ்கரனடா!” இவரைத் தெரிந்த ஓரிருவர் மாணவர்களுக்கு சொல்ல மாணவர்கள் தூஷணை வார்த்தைகளால் இவரைத் திட்டுகிறார்கள். அப்போதும், தான் தாங்கிய வண்டில்காரன் பாத்திரத்தில் இருந்து விடுபடாது.

“தம்பியவை இந்தப் பள்ளிக் கூடத்தில தூஷணமே சொல்லித் தாரவை” என்று கேட்டு மழைபெய்து கொண்டிருக்க வண்டியை விட்டுவிட்டு மாட்டை கொண்டு வெளியேறிச் செல்கிறார். வண்டி பல்கலைக்கழக நிர்வாகத்தால் சீர் செய்து கொடுப்பதற்காகப் பொறுப்பேற்கப்பட்டது. இந்தச் சம்பவம் அடுத்த நாள் ஈழநாதம் பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தது.  சிரேஷ்ட மாணவர்கள் பல்கலைக்கழ வளாகத்தில் நின்ற வண்டிலை மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்திவிட்டார்கள். இதில் இருந்து ஒரு மாதகாலத்திற்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடைநிறுத்தம், மறியல் போராட்டமென்று ராக்கிங் பற்றி பல்வேறான கருத்துப் பரிமாற்றங்கள் விவாதங்கள் பல்கலைக்கழகத்திற்குள்ளும் பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் நடந்தன.

baskaran_round.jpg

இது, யாழப்பாண அரங்க வரலாற்றில் முதல் முதல் நடைபெற்ற கண்ணுக்குப் புலனாகா அரங்க நடவடிக்கையாகும். இந்தச்  சாதனையில் ச.பாஸ்கரன் அவர்கள் ஒப்பனை கலைந்து போக வேடஉடையுடன் ஐந்நூறு மாணவர்களுக்கு முன் தான் தாங்கிய பாத்திரத்தை குலையவிடாது நகர்த்தி சென்றமை நாடகக்காரர் பலரையும் வியப்பிலாழ்த்தியது.யாழ்ப்பாணத்தில் அரியாலை நீண்ட நாடகப் பாரம்பரியமுடைய ஒரு பிரதேசம். இங்கு ஆண்டு தோறும் சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு நடத்தப்படுகின்ற சுதேச தின விழா மிகப்  பிரபல்யமானது. ஊரார் ஒன்று கூடி இவ்விழாவை நடத்துவார்கள். இதில் ஒரு பகுதியாக நாடகவிழா வருடாவருடம் நடைபெறும். வரலாற்று கதைகளை அடிப்படையாகக் கொண்ட பல நாடகங்கள் தயாரித்து மேடையேற்றப்படுவது வழமை. பாஸ்கரன் இந்த நாடகப் பாரம்பரியத்தினூடாக நாடகத்துறைக்கு உள்ளீர்க்கப்பட்டவர்.

“நாடகங்களை மேடையில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்ததால்தான் நான் இத்துறை;ககு வந்தேன்” என்று அடிக்கடி கூறிக்கொள்கிறார்.

யாழ் கனகரத்தினம் மகாவித்தியாலயத்தில் படித்தபோது ‘மக்கள் அணி’ என்ற நாடகத்தை நண்பர்களுடன் இணைந்து தயாரித்து யாழ்  மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மேடையேற்றியதால் நவீன நாகடங்கள் மீது ஒரு பற்று ஏற்பட ஆரம்பித்து அதன் உந்து சக்தியால் ஈழத்து நாடக விற்பன்னர்கள் குழந்தை ம.சண்முகலிங்கம் கலாநிதி க.சிதம்பரநாதன் போன்றோருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.

உயிர்த்த மனிதர் கூத்து, நாமிருக்கும் நாடு நமது, பெரிய மனிதர்கள் பற்றி…, பாஞ்சாலி சபதம், யாரொடு நோகேன், கூடிவிளையாடு பாப்பா போன்ற நாடகங்களில் நடித்ததோடு சத்தியசோதனை, முயலார் முயல்கிறார், தாயுமானார் நாயுமானார் போன்ற நாடகங்களை றேடியன் கல்வி நிறுவனத்திற்காக நெறியாள்கை செய்துள்ளார். றேடியன் கல்வி நிலையத்திற்கு, பொறுப்பாக இருந்த மோகன் மாஸ்ரரின் (இவர் இராணுவத்தினரால் 1997ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு காணாமற்போனார்) நாடக ஈடுபாட்டால் இது சாத்தியமாயிற்று.

அ.தாஸீஸியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தமிழ் நாட்டில் நடைபெற்ற நாராய் நாராய்.. நாடகப் பயணத்தல் பங்கு பற்றி புதியதொரு வீடு, பொறுத்தது போதும் போன்ற நாடகங்களில் நடித்துள்ளார்.

தனது கற்பனையை சிறகடிக்கவிட்டு நடிக்கும் ஆற்ற்ல் கொண்ட இவருக்கு வட இலங்கை சங்கீதசபை நாடகத்தேர்வின் போது(1993)  நடிப்புக்கு சித்தியடைய முடியாத புள்ளிகள் இடப்பட்டது ஏன் என்ற கேள்வி இன்றுவரை இவரை துளைத்துக் கொண்டிருக்கிறது. (இந்த நாடகத்  தேர்வுக்குழு தலைவியாக கோகிலா மகேந்திரன் அமர்ந்திருந்தார். இவர் பாஸ்கரனுக்கு அநீதி இழைக்கப்பட்டமைக்கு பின்னர்; வேதனைப்பட்டிருக்கிறார்.)

பாஸ்கரன் நாடக வரலாற்றில் கால்பதிக்கும் இரண்டாவது படியாக அவர் அரங்கச் செயற்பாட்டு குழு (வுhநயவசந யஉவழைn பசழரி) உடன் இணைந்து செயற்பட்ட காலத்தை குறிப்பிட முடியும். யாழ்ப்பாணத்தில் இருந்து 1995ம் ஆண்டு மக்கள் வெளியேறியபோது இவரும் வெளியேறி சிதம்பரநாதனுடன் இணைந்து வவுனியா, கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் பல்வேறு அரங்கக் களப்பயிற்சிகளை நடத்தினாhர். ஆங்காங்கே பல அரங்கக் குழுக்கள் உருவாகின. அரங்கக் களப்  பயிற்சிகளில் பங்குபற்றியவர்கள் இணைந்து கொற்றவை உருவத்துடன் கொழும்பு திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளில் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் நடைபெற்ற பண்பாட்டுப் பவணியில் பங்கெடுத்தார்கள். பண்பாட்டுப் பவணியை ஒழுங்குபடுத்தி நடத்ததுவதில் பிரதானமானவராகச் செயற்பட்டார் பாஸ்கரன். பண்பாட்டு பவனி விடுவிக்கப்பட்ட மனதுடன் கூடிய உடல் விடுவிப்பாக இருந்தது. தாம்பட்ட அவலங்களை கட்டற்ற மொழியில் அண்டவெளியெங்கும் கேட்க சொன்னது  அந்நிகழ்வு.

தற்போது அரங்கச் செயற்பாட்டுக் குழுவில் இருந்து விலகி ஒரு அரசசார்பற்ற நிறுவனத்தில் வேலை செய்யும் பாஸ்கரன் தான் அரங்கச் செயற்பாட்டுக் குழுவில் இருந்து விலகியமைக்கு இரண்டு காரணங்களைக்  குறிப்பிடுகிறார்.
1. தனியுரிமையாக அரங்கை ஒர் நிறுவனம் வைத்திருக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. பல்வேறு இடங்களிலும் பல்வேறு அரங்கக் குழுக்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் சிறந்த அரங்கப் பண்பாடு உருவாகும். இதனை சாத்தியமாக்க நான் எனக்கென்றொரு வழியை தேர்ந்தெடுத்தேன்.

2. எனது வாழ்வுக்கு பணம் தேவை.  அதனை அரங்கில் முழுநேரமாக இருக்கும் போது என்னால் போதியளவு பெறமுடியவில்லை. இதனால், நான் ஒரு வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டேன்.

பாஸ்கரனை என்.ஐP.ஓ.  அதிக காசுக்கு வாங்கிவிட்டது. அவனது நாடகத்  திறமைகளை மழுங்கடிக்கிறது  என்ற காட்டமான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. வேலையில் சேர்ந்தபின் நடிப்பது, நாடகம் தயாரிப்பது.  களப்பயிற்சிகள் போன்றவற்றை பாஸ்கரன் குறைத்துக் கொண்டுவிட்டார் என்பது உண்மையாகவுள்ளது. ஆனால், பல்வேறு பிரதேசங்களிலும் அரங்கக் குழுக்களை அமைப்பதில் மிகத் தீவிரமாகச் செயற்பட்டுவருகிறார். தொடர்ந்து நாடகக்காரர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணுகிறார். எங்கு சந்தித்தாலும் நாடகம் பற்றியே பேசுகிறார். இவரது இந்த உணர்வு குறைந்துவிடக்கூடாது. தொடர்ந்து முன்புபோல் மேலும் அரங்கத்துறையில் ஈடுபட வேண்டும் என்பது கூத்தரங்கின் விருப்பு.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: