Theva

Editorial: சிறுவர் அரங்கச் செயற்பாடுகள்

In பொது on ஒக்ரோபர்20, 2007 at 8:05 முப

சிறுவர்களுக்கு நன்மையளிப்பதான சிறுவர் அரங்கை பாடசாலைக் கல்விச் செயற்பாட்டில் உள்ளடக்கி நடைமுறைப்படுத்தும் விருப்பத்தோடு பல செயற்பாடுகளை கல்வியலாளர்கள் சிலர் முன்னெடுக்கிறார்கள். அவர்களின் ஆக்கபூர்வமான முயற்சிக்கு நாடகத்துறை சார்ந்தோர் தன்னலமின்றி ஆதரவளித்தல் அவசியமானது.

ஆரம்பப் பாடசாலைக் கல்விச்செயற்பாட்டில் சிறுவர் அரங்கச் செயற்பாடுகளை உட்புகுத்துவதற்கு ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து சிறுவர் அரங்கப் பயிற்சிகளை வழங்குதல் மிக அவசியம். இதுவே நின்று நிலைக்கக்கூடியது. இந்தப் பணியை ஒரு கால வரையறைக்குள் அனைத்து கல்வி வலயங்களிலும் சமாந்தரமாக முன்னெடுத்தல் வேண்டும், இதற்குப் பயிற்றுவிப்பாளர்கள், வளவாளர்கள் தேவை கல்வித்திணைக்கள மட்டத்தில் போதியளவு இல்லை. ஆகவே, முதலில் பயிற்றுவிப்பாளர்களை வலய ரீதியாக உருவாக்கும் பெரும்பணியையும் செய்தாக வேண்டும். இதற்கான வளவாளர்களும் நம்மத்தியில் மிகக் குறைவாகவே உள்ளார்கள். இருப்பினும், நாம் எம்முன்னுள்ள பெரும் பணியை முன்னெடுத்தேயாக வேண்டும்.

1978ம் ஆண்டு குழந்தை ம. சண்முகலிங்கத்தினால் எழுதப்பட்டு அ.தாஸீஸியஸ் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்ட ‘கூடி விளையாடு பாப்பா’ சிறுவர் நாடகத்தை ஈழத்து தமிழ் அரங்க வரலாற்றில் சிறுவர் அரங்க முதல் முயற்சியெனலாம். இன்று இருபத்தியைந்து வருடங்கள் கடந்துவிட்டன. சிறுவர் அரங்கு திருப்திகரமான வளர்ச்சியை அடையவில்லை. பல கிராம பாடசாலைகள் இன்றும் சிறுவர் அரங்கு பற்றி அறியாமல் இருப்பதை இனங் காணமுடிகின்றது. ‘சிறுவர் அரங்கத்துறையில் மட்டும் ஈடுபடுவதற்கான தனிநபர்கள், நிறுவனங்கள் நம்மத்தியில் இல்லை’ என்ற குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் கூற்று இங்கு மனங்கொள்ளத்தக்கது.

சிறுவர் அரங்கிற்கு ஈடுபடுவோர் பலர் பின் அத்துறையைக் கைவிட்டு பெரியோர் அரங்கிற்கு சென்றுவிடுகிறார்கள். இதனால், சிறுவர் அரங்கு ஆரம்ப நிலையிலேயே இன்றும் காணப்படுகிறது. இந்நிலைமைகளை வென்று சிறுவர் அரங்கத்துறையை வளர்த்தெடுப்பதற்கு பலரும் முன்வரவேண்டும். எம்முன் உள்ள தேவையை நோக்குகின்ற போது ஒரு சிலர் அல்லது ஒரு சில நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபடுவதால் மட்டும் இதனைச் சாத்தியமாக்கிவிடமுடியாது. சென்ற ஆண்டு ‘வளரும் பயிருக்கு முளையில் உதவும் சிறுவர் அரங்கு’ என்ற தலைப்பில் நாவலர் மண்டபத்தில் ஒரு கருத்தரங்குத் தொடர் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குழந்தை. ம. சண்முகலிங்கம் அவர்களின் தலைமையில் சிறுவர் அரங்க வளவாளர் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் உதவியுடன் சிறுவர் அரங்க களப் பயிற்சிகள், சிறுவர் நாடக மேடையேற்றங்கள் நடைபெறுகின்றன.

சிறுவர் அரங்கச் செயற்பாடுகள் மேலும் பரவலாகவும் விரைவாகவும் முன்னெடுக்கப்படவேண்டும். இதற்கு சிறுவர்களோடு வேலை செய்யும் அனைத்துத் தரப்பினரும் உதவவேண்டும்.

ஆசிரியர் குழு

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: