Theva

வழக்கிறந்து வரும் நாட்டார் அரங்கு!

In செய்தி on ஒக்ரோபர்17, 2007 at 5:21 பிப

visakaruban.jpgகலாநிதி கி.விசாகரூபன், சிரேஷ்ட விரிவுரையாளர்
தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம்

ஈழத் தமிழர்களின் தேசியக்கலை வடிவமான நாட்டுக் கூத்து இன்று வேகமாக வழக்கிறந்து வருவதனைப் பார்க்கக் கூடியதாக உள்ளது. நவீன நாடகங்களின் செல்வாக்கு, பரபரப்பான இன்றைய வாழ்க்கைமுறை, எமது பாரம்பரியக் கலைகளின் கையளிப்புக் குறைபாடுகள் எனப் பல்வேறு காரணங்களை இதற்குக் கூறலாம். நாட்டார் அரங்கத்துறையில் பயிற்சியுள்ள அண்ணாவிமார் சிலர் ஆங்காங்கே உயிர்வாழ்ந்து வருகின்றபோதிலும், அவர்களை நாடிச்சென்று கூத்துப்பழகுபவர் தொகை குறைவடைந்தே வருகிறது. இன்றைய சூழலில் கூத்து ஒன்றை ‘இணக்குவது’ என்பது பெரும்பாடாகவே உள்ளது.

நாட்டார் அரங்கத்துறைக்கென்றே தம்மை அர்ப்பணித்துள்ள ஒருசில இளங் கலைஞர்கள் இத்துறையில் ஈடுபாடுகாட்டி வருவது மனநிம்மதியைத் தருகிறது. ஆயினும், பல்கலைக்கழகம் மற்றும் கலை சார்ந்த நிறுவனங்கள் முதலானவை இக் கூத்துக்களை எம்மக்கள் மத்தியில் தக்கவைத்துக் கொள்வதில் உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும். கூத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து ‘பட்டம்’ எடுக்கலாமே தவிர கூத்தைப் பயில்நிலைக்குக் கொண்டுவரமுடியாத நிலைமையே தற்போது காணப்படுகிறது.

தமிழர் பரந்து வாழும் பிரதேசங்களிலுள்ள பல்கலைக்கழகங்களும், உயர்கல்வி நிறுவனங்களும் எமது பாரம்பரியக் கலைகளுக்குப் போதிய முக்கியத்துவம் கொடுக்க முன்வரவேண்டும். ‘நாடகமும் அரங்கியலும்’ பயில்கின்ற மாணவர்களின் பாடவிதானத்திலே பாரம்பரிய அரங்குக்குப் போதிய முக்கியத்துவமும் முன்னுரிமையும் தரப்படவேண்டும். கண்ணுக்கு முன்னே எமது பாரம்பரிய அரங்கு வழக்கிறந்து வரக்கண்டும் மேலைத்தேய அரங்கின் மீதே எமது புலமைச்சிரத்தை குவிவது ஆரோக்கியமானதாகப்படவில்லை.

குறிப்பிட்ட சமூகங்களிலிருந்தும் கலைக் குழுமங்களிலிருந்தும் இக்கலை மரபுகள் விடுவிக்கப்பட்டு, இன்றைய இளைய தலை முறையினர்க்கு அவற்றைப் பயிற்றுவிப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாடசாலைகளில் தமிழ்த்தினப் போட்டிகள் நடைபெறும் வேளைகளில் இவ்வாறான நாடகங்கள் சில மேடையேற்றப்பட்டு வருவது பாராட்டத்தக்கது.

இன்றைய நவீன படச்சட்டக மேடைக்குத் தகுந்தவாறு இம்மரபுவழி நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றி இந்நாடகங்களையும் சுவைக்கச் செய்யலாம். மரபுவழி நாடகங்களில் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தமிழ்த் துறைகளில் பணியாற்றிய பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளையும், மேடையேற்றங்களையும், பரிசோதனை முயற்சிகளையும் ‘நாடகமும் அரங்கியலும்’ துறைசார்ந்தவர்களும் மேற்கொள்ள முன்வரவேண்டும். முன்வருவார்களா?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: