Theva

முனைவர் கே.ஏ.குணசேகரனின் இலங்கை விஐயம்!

In ஆக்கம் on ஒக்ரோபர்17, 2007 at 5:18 பிப

dr-kunasekaran.jpgபாண்டிச்சேரி, பல்கலைக்கழக (இந்தியா) நாடகத்துறைத் தலைவர் முனைவர் கே.ஏ.குணசேகரன் மே மாத இறுதியில் இலங்கை வந்திருந்தார். நாடகத்துறையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்களுக்கு விஐயம் செய்து தமிழ் நாடகத்துறை சார்ந்தவர்களையும் நாடக மாணவர்களையும் சந்தித்து உரையாடிச் சென்றுள்ளார்.

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திலும் நாடக மாணவர்களுக்கு நாட்டார் பாடல், இசை, நடனம் பற்றிய களப்பயிற்சியை நடத்திய இவர் ‘மக்கள் இசை’ என்ற தலைப்பிலான கருத்தரங்க உரையையும் நிகழ்த்தியிருந்தார். இக்கருத்தரங்கிற்கு மட்டக்களப்பு பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமை வகித்திருந்தார்.

கொழும்பு தமிழ்ச்சங்கமும் இவரை அழைத்து ‘மக்கள் இசை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கொன்றை ஒழுங்கு செய்து நடத்தியிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் மாணவர்களை இரண்டு மணிநேரம் சந்தித்து ‘தலித் அரங்கு’ பற்றி உரையாடியதுடன் மூத்த நாடகவியலாளர் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களையும் சந்தித்துச் சென்றுள்ளார்.

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் சிறிது காலம் வேலை செய்ய விரும்புவதாக குறிப்பிட்ட கே.ஏ.குணசேகரம் அவர்கள் இலங்கையில் மூன்று மாத காலம் தங்கியிருந்து நாடகத்துறை சார்ந்தோருடன் வேலை செய்ய விரும்புகிறார்.

கே.ஏ.குணசேகரம் அவர்கள் தமிழ் நாட்டில் முனைப்புப் பெற்று வரும் தலித் இயக்கங்களுடன் தன்னை அடையாளப்படுத்தி வேலை செய்பவர். தலித் மக்கள் வாழ்வியல் பற்றிய பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். அண்மையில் மனுசங்கடா, மண்ணின் பாடல்கள், தன்னானே போன்ற தலித் பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழைகளை வெளியிட்டுள்ளார். தன்னானே குழுவுடன் இணைந்து வேலை செய்பவர்.
இவரது ‘பலி ஆடுகள்’, நாடகம் மிக வரவேற்பைப் பெற்ற நாடகமாகும். இத்தோடு, ‘அறிகுறி’ எனும் தலித் அரங்காற்றுகையையும் நிகழ்த்தியிருக்கிறார்.

‘அறிகுறி’ நாடகம் மேடை அருவருப்பாகக் ;காணப்பட்ட காட்சிகளை மேடையில் இட்டு அரங்க மறுமலர்ச்சிக்கு வித்திட்டதாக அறிகிறோம். இதனோடு, புராணக் கதைகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தி பல நாடகங்களை குணசேகரமவர்கள் படைத்துள்ளார். பெண்சார்ந்த சிந்தனையுடன் அடக்கப்பட்டோரின் ஆவேசக்குரலாக இந்நாடகங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. சமகாலத்தின் நிலைமைகளை வழிவழியாக வந்த மரபுகளின் தொடர்ச்சியாக இனங்கண்டு குறிப்பாக இந்துதத்துவ மேலாண்மை மீது கேள்வி எழுப்பும் ஒரு போக்கை இவரது நாடகங்களில் காணமுடிகின்றது. பவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு நாடகம் தொழில்முறையான பெண் நடிகைகள் மீது காணப்படும் பாலியல் ஒடுக்குமுறை பற்றிப் பேசுகிறது. இந்நாடகம் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. வள்ளி திருமணம் நாடகம், சத்திய சோதனை நாடகம் என்பன இவரது மறுவாசிப்புச் சிந்தனையோடு மேடையேற்றப்பட்ட நாடகங்கள் ஆகும். மேலும், தலித் அரங்கியல் என்ற தலைப்பிலான அரங்கக் கட்டுரைத் தொகுப்பு ஒன்றையும் நூலாக வெளியிட்டுள்ளார்.

இவரது புதிய அரங்கத் தேடல் அமுக்கிக் கிடக்கும் அல்லது மறைக்கப்பட்டுக் கிடக்கும் தலித் அரங்கை வெளிக்கொணர வேண்டும் என்ற கடும் உழைப்பு தமிழ் அரங்கத்துறையை மேலும் செழுமைப்படுத்தும் எனக் கூறுகின்றோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: