Theva

பார்த்தவரின் மனப்பிரமையில் இருந்து…..

In விமர்சனம் on ஒக்ரோபர்17, 2007 at 5:42 பிப

greed_couple.jpgபேராசை

GREED

ஆனந்த்

அண்மையில், (25, ஏப்ரல் 2004)  யாழ்ப்பாணத்தில் உள்ள நாவலர் மண்டபத்தில் பிரித்தானியாவின் கோல்ட் என்சோம்பிள் (Cold ensemble)  நிறுவனத்தினரின் கிறீட் (பேராசை) எனும் ஊம நாடகம் (Mime Play) மேடையேற்றப்பட்டது. சிறுவர் பாதுகாப்பு நிறுவனம், பிறிட்டிஷ் கவுன்சில் போன்ற அமைப்புகள் இந்நாடகத்தை யாழ்ப்பாணத்தில் மேடையேற்றுவதற்கான ஒழுங்குகளை மேற்கொணடிருந்தன.

நாடகத்தில் இரண்டு நடிகர்கள் மட்டும் மேடையை ஆக்கிரமித்து நின்றார்கள். மிகத் தேர்ச்சி பெற்ற நடிகர்களான அந்த இருவரும் ஒரு சில பொருட்களுடன் மேடையில் நடித்தார்கள். இருப்பினும், பல பொருட்களைக் கையாண்டார்கள் – பல பொருட்களுடன் ஊடாடினார்கள். ஊம அசைவுகளை மிக மிக நுட்பமாகவும் இலாவகமாகவும் நிகழ்த்தினார்கள். ஊம அசைவுகள் மேடை எங்கும் பொருட்கள் இருக்கும் பிரமையை பார்வையாளர்களுக்குத் தந்து நின்றன.

greed.jpgகணினியில் கட்டுப்படுத்தப்படும் ஒளி அமைப்பு. நாவலர் மண்டபத்தின் மேடைத் தரைப் பக்கச் சுவர்கள், யன்னல்கள் அனைத்தும் கறுப்புத் துணிகளினாலும் பேப்பர்களினாலும் அடைக்கப்பட்டிருந்தன. 30ற்கும் மேற்பட்ட ஒளி முதல்கள் பயன்படுத்தப்பட்டன. பொட்டொளியின் பயனையும், தாக்கத்தையும் தெளிவாகக் கண்டுகொள்ள முடிந்தது. மிக நேர்த்தியான முன்னாயத்தங்களுடன் நாடகம் மேடையேற்றப்பட்டிருந்தது. மிக நுட்பமான நேரக்கட்டுப்பாட்டுடன் நாடகம் நகர்ந்தது. கணினி மயப்படுத்தப்பட்ட ஒளி அமைப்புக்கும் புறொஜெக்ரரின் தெறிப்புக்கும் ஏற்ப நடிகர்கள் இருவரும் பம்பரமாகச் சுழன்றார்கள்.

கதையொன்றை அடிப்படையாகக் கொண்டதான ஊமக்காட்சிகளையே கிறீட் நாடகம் கொண்டிருந்தது. நாடகத்திற்கான இசை ஒரு ஓர்கன் வாத்தியத்தின் மூலம் நாடகத்தின் இயங்கு நிலைக்கு ஏற்ப நேரடியாக (Live music) வழங்கப்பட்டது. (இவ்வாறான ஆற்றுகைகளுக்கு ஒளிப்பதிவு செய்யப்பட்ட இசையே பயன்படுத்தப்படுவது வழமை) வார்த்தைகள் அற்ற இந்நாடத்திற்கு இசை மிக அவசியமாக இருந்தது. அசைவுக்கான ஆக்க நிலையையும் மனநிலையையும் இசை வழங்கியிருந்தது.

நாடகத்தினைப் பார்ப்பவர்களின் விளக்கத்திற்காக புறொஜெக்ரர் மூலம் தமிழில் விபரிப்புக்கள் நடைபெற்றன. காட்சிகளின் தொடர்ச்சிக்காகவும் செயல்களின் விளக்கத்திற்காகவும் எதிர்வு கூறலுக்காகவும் சூழ்நிலைகளை விபரிப்பதற்காகவும் பாத்திரங்களின் வரலாறு சொல்வதற்காகவும் புறொஜெக்ரரின் தமிழ் வரிகள் காட்சியாகின. இது அந்நியமான சூழலில் நடைபெறும் ஒரு கதையைப் பார்ப்பவர்களுக்கு அவசியமானதாகத் தெரிந்தாலும், சில கேள்விகளையும் எழுப்பின. ஊம ஆற்றுகை முழுமையாகத் தன் கதையைச் சொல்வதற்கு/புரியவைப்பதற்கு வார்த்தைகளின் இடத்திற்கு வேறொன்றை எதிர்பார்க்கின்றதா? நாடகத்தின் சம்பவங்களை பொருத்துவதற்கு புறொஜெக்ரர் மூலமான ‘தொகுப்பு’ அவசியமாகின்றதா? வசனங்களை நடிகர்களின் ஊம நடிப்பிற்கு இடையில் காட்சியாக காட்டுவதற்கான அவசியம் இருப்பதாயின் வார்த்தைகளையே பயன்படுத்தி இருக்கலாமே? இருப்பினும், இவை தனித்து நின்று உணர்வுகளை அறுக்கவில்லை எனலாம்.

greed_man.jpgபேராசை ஒரு பல் வைத்தியரையும் அவரது இளம் மனைவியையும் சுற்றி நகர்கிறது. பணத்தின் மூலமாகக் கிடைக்கின்ற பெரும் மதிப்பையும் அழிவையும் இரண்டு பாத்திரங்களுடாக நெறியாளர் சித்தரிக்க முயல்கிறார். விஞ்ஞானத்தின் வேகம், பாரிய உற்பத்தியின் விளைவான செல்வம் ஐரோப்பிய நகரங்களை அச்சுறுத்துவதை நாடகம் துலக்கமாக்குகிறது. (இவை இன்று எமது நாடுகளையும் அச்சுறுத்துகின்றன அல்லது நசுக்கி ஆட்சி செய்கின்றன)

பேராசை நள்ளிரவில் கூச்சல்போடும் மரணப் பறவையின் சத்தத்தைப் போல் உங்களுக்கு இருக்கிறதா? என்ற கேள்வியுடன் நாடகம் ஆரம்பமாகிறது. இரண்டு கதிரைகள் மேடையில் காணப்படுகின்றன. இக்கதிரைகள் இருக்கையாக, பல்வைத்தியரின் நோயாளிகளுக்கு பல்லுப்பிடுங்கும் நாற்காலியாக, படுக்கையாக என்று பலவற்றிற்குப் பயன்படுகின்றது.

நாடகத்தின் கரு பல்தேசிய கம்பனிகளின் பேராசையை விலாவாரியாக ஒரு குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு பேசுகிறது. மனிதனது பல்லின் பாதுகாப்பிற்குத் தற்செயலாக கழிவுகளில் இருந்து கலவை மதுபானம் தயாரிக்க முற்படும்போது (மெதேல் எரிவாயு, மில்க் ஒவ் மெக்னீசியா, சிறிதளவு கற்பூரத்தையலம், கரியக்காடின் உப்பு, ஒரு தேக்கரண்டி போன்றவற்றில் இருந்து) டென்ட் – ஓ -ஷைன் என்ற பற் பற்பாதுகாப்பிற்கான ஒன்றைத் தயாரித்துள்ளார்கள். அதனைப் பற்களுக்கு அழிவில்லை என்ற விளம்பரத்துடன் விற்பனை செய்கிறார்கள். பெரும் செல்வம் குவிகிறது. புதிய பொறுப்புக்கள், வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. பேராசை ஆட்கொள்கிறது. இந்தப் பேராசை மீது ஆங்காங்கே நாடக ஆக்க கர்த்தாவின் விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

எமது பாரிய நிறுவனங்களின் பேராசை தானே எமது நாட்டை யுத்தத்திற்கு இட்டுச் செல்கிறது. இந்த யுத்தத்தில் உத்தம புத்திரர்கள் மரணமடைய வேண்டி இருக்கும் – செல்வந்தர்களின் பொருளாதார நன்மைக்காகவே அல்லாது வேறு எந்த கௌரவமான இலட்சியத்திற்காக அவர்கள் சாகப்போறார்கள்?

பாரிய பொருளாதார இலாபத்திற்காக போர்களை ஆரம்பித்து நடத்துகின்ற போது எவ்வாறு நியாயப்படுத்தப்படுகிறது. அதில், பொதிந்து கிடக்கும் உணர்ச்சித் தூண்டல் குறிப்பாக மதத்தையும் இனத்தையும் மேலாண்மை நிலையில் வைத்து இலாபம் ஈட்டும் நிலமைகள் பற்றியும் நாடகம் பேசுகின்றது.

“ஐரோப்பாவெங்கும் சமாதானத்தை நேசிக்கும் இளைஞர்கள், இறைவனையும் நாகரிகத்தையும் மற்றும் கிடைப்பதற்கரிய கனிப்பொருட்கள் வளங்களையும், பாதுகாப்பதற்காக தங்கள் உயிரையே தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.” இது பிரதம மந்திரியின் உரை. இதற்காக யுத்தம் புரிய நாடகத்தின் கதாநாயகன் செல்கிறான். அங்கு, அவன் கொலை செய்யப் பழகிக்கொள்கிறான். யுத்தத்தின் பின் வீடு திரும்பியவன் குடும்பத்துடன் உறவாட முடியாதவனாக உள்ளான்.

பொருளாதாரப் பேராசை மனிதக் குணங்களை சிதைப்பதை மிக இலாவகமாக நாடகம் சுட்டிச் செல்கிறது. தேவைக்கேற்ப பல்வைத்தியர், இராணுவ வீரர், பிரபு போன்ற பாகங்களை ஆடுவதற்கு வேட உடைகளை மாற்றிக்கொள்கிறார். அவ்வாறே அவர் மனைவியும். ஒரு மணி நேரம் இரு நடிகர்களும் அற்புதமாக பார்ப்போரை ஆட்கொண்டு இருந்தார்கள். பல்தேசிய கம்பனியின் பேராசையால் மனிதப் பற்கள் சிதைவடைந்து தேசம் குழப்பத்தில் மூழ்கிறது என்பதாக நாடகம் முடிவடைகிறது.

இந்த நாடகத்தைப் பார்ப்பதற்கு மிகச் சொற்பமானவர்களே வந்திருந்தார்கள். போதிய விளம்பரப்படுத்தல் நடைபெறவில்லை. பிரிட்டிஷ் கவுன்சில், சிறுவர் பாதுகாப்பு நிதியம் போன்ற அமைப்புகள் கிறீட் நாடகத்தை யாழ்ப்பாணத்தில் போடுவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தன. விளம்பரப்படுத்தலில் இன்னும் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம்.

பிரிட்டிஷ் கவுன்சில் யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் ‘பூஜா’ என்னும் ஓராள் அரங்காற்றுகையை இதற்கு முன் ஒழுங்குபடுத்தி நிகழ்த்தியிருந்தது. அந்நாடகம் இந்து மதச் சடங்குகளை புரிந்துகொள்ளாது வக்கிர அடிப்படையில் இந்து மதத்தை கேலிசெய்வதாக அமைந்தது. இதனைப் பார்த்த பலரும் விசனமடைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. அவ்வாறான ஒரு முரண்பாட்டு நிலை இல்லாது யாழ்ப்பாண மக்களும் எதிர்நோக்குகின்ற, எதிர்நோக்கப்போகின்ற ஒரு பிரச்சினையை கிறீட் ஊடாகப் பேசியது வரவேற்கத்தக்கது.

பிரான்ஸ், பிரித்தானிய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் நான்கு ஐந்து ஆண்டுகள் நாடகக் கலையைக் கற்று பத்து வருடங்களுக்கு மேலாக தொழில் முறை நடிகர்களாக உள்ளவர்கள் இந்நாடகத்தின் ஆற்றுகையாளர்கள். ஒரு பல்கலைக்கழக கற்கை எவ்வாறு அற்புதமான ஆற்றுகையாளர்களை உருவாக்குகிறது என்பதற்கு கிறீட் நாடகத்தின் ஆற்றுகையாளர்கள் சிறந்த உதாரணமாக அமைவார்கள். இவ்வாறான தரமான ஆற்றுகையாளர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமும் உற்பத்தியாக்க வேண்டும் என்பது பலரது அவா.

கிறீட் நாடகத்தின் நெறியாளர் சுசி (Suzy willson) என்னும் பெண் அவர் இரண்டு நாட்கள் யாழ்ப்பாணம் Y.M.C.A  கட்டடத்தில் சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட களப்பயிற்சியை முன் நின்று நடத்தினார். இதில் சிறுவர் அரங்கக் கழகத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களும், திருமறைக்கலா மன்றம், செயல்திறன் அரங்க இயக்க உறுப்பினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் என கிட்டத்தட்ட ஐம்பது பேர் கலந்து கொண்டார்கள். பயிற்சியில் ஏழு உணர்ச்சி வெளிப்பாடுகள் பற்றிய அசைவுகள் செய்துபார்க்கப்பட்டன.

greed_susi.jpgஇவ்வாறானதொரு நாடகத்துடன் தாம் முதற்தடவையாக இலங்கை வந்திருப்பது பற்றி சுசி குறிப்பிட்டு யாழ்ப்பாணத்தில் நடந்த களப்பயிற்சி புதிய அனுபவத்தை தந்ததாகத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் “பல பிரச்சனைகளோடு களப் பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் உள்ளார்கள். பிரச்சினைகளுக்கு அரங்கு மூலம் தீர்வு காண எண்ணுகிறார்கள். நாம் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இயங்க விரும்புகிறோம். அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்வோம்” எனக் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் அரங்கத்துறை வளர்ச்சிக்கு பல்வேறு தேசங்களைச் சேர்ந்த அரங்கவியலாளர்களின் ஊடாட்டம் அவசியமானது. அதற்குத் தயாராக உள்ளவர்களை நாடகத்துறை சார்ந்தோர் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இத்தோடு, அரங்கத் துறை வளர்ச்சிக்குத் தரமான நாடக ஆற்றுகைகளைப் பார்த்தல் குறிப்பாக, வெவ்வேறு வடிவம் சார் ஆற்றுகைகளையும் பார்த்து நயத்தல் அவசியம். அதற்காக, இவ்வாறான ஆற்றுகைகளை ஒழுங்கு செய்து யாழ்ப்பாணத்தில் மேடையேற்றுவதில் அரங்க நிறுவனங்கள், பல்கலைக்கழகம் ஆகியன அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

யாழ் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் மாணவர்களை கிறீட் நாடகப் பார்வையாளர் மத்தியில் காணவில்லை. ஒரு சிலரைத் தவிர அனேகமான மாணவர்கள் ‘கட்டுப்பெட்டித்தனத்திற்குள்’ இருப்பதே சுகம் என்று கருதுகிறார்கள். அவ்வாறான நிலைமைகள் ஊக்குவிக்கப்படுகின்றது. இதைக் களைந்து உயர்வோமாக……

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: