Theva

சிறுவர் உள்ளம்… சில நிமிடங்கள்!

In ஆக்கம் on ஒக்ரோபர்17, 2007 at 5:22 பிப

பார்ப்போர் – ஆற்றுவோர் இவ்விரு பிரிவினரையும் எல்லைப் புள்ளிகளாகக் கொண்டு அரங்கு நீளுருப்பெறுகின்றது. பல காத்திரமான செய்திகளைத் தன்னகத்தே சுமந்து கடத்திக் கொண்டிருக்கும் அரங்கச் செயற்பாடுகள் பற்றிப் பரவலாகப் பேசப்படும் இக்கால கட்டத்தில் ‘பார்ப்போர்’ பற்றிச் சற்று ஆழமாகப் பேசலாம் என்று இம் மடலில் ஆரம்பிக்கின்றேன்.

யார் இந்தப் பார்ப்போர்? ஏன் இந்தப் பார்ப்போர்? இவர்களின் பங்களிப்பு, செல்வாக்கு என்பன அரங்கச் செயற்பாட்டில் எவ்வளவு அவசியம் என்பது பற்றி நாம் கூறத்தேவையில்லை. இதே பார்ப்போர் வரிசையில் சிறுவர்களை இலக்காகக் கொண்ட அரங்கச் செயற்பாடுகள் பாடசாலைகளில் மிக வேகமாக நிறுவன ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அற்புதமான முயற்சிக்கு வாழ்த்துக்களும் வரவேற்புக்களும் என்றென்றும் உண்டு. இந்த முயற்சிகளில் பின்வரும் விடயங்கள் அதிகமாய்க் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகிறேன்.

children_kulanthai_b.jpgபாடசாலைச் சிறுவர்கள் – சின்னஞ்சிறு தளிர்களின் வாழ்வியல் பின்னணி, அவர்களது பொருளாதாரப் பின்னணி, அவர்களது உள்ளத்தின் ஆரோக்கியம,; அவர் தங்கி சார்ந்து வாழுகின்ற அவர்களது குடும்பத்தின் உளநலம் என்பனவற்றை அரங்கு மிகவும் நுணுக்கமாக அணுகி ஆராய்ந்து அந்த அழுத்தங்களில் வாடிவதங்கிக் கிடக்கும் பிஞ்சு நெஞ்சங்களுக்கு ஒரு ஒத்தடம் கொடுக்க வேண்டியது அவசியம். அந்த அரவணைப்பானது கணநேர மாயத் தோற்றமாக, மனோரதியமாக அல்லாமல் பிள்ளையின் ஆழ்மனதில் ஆழப்பதிந்து, அதன் ஆளுமையை எழுச்சி கொள்ள வைக்க வேண்டும். அவர்களது பலம், பலவீனம், என்பனவற்றை நன்கு அறிந்து கொண்டு அவர்களை வளப்படுத்த வழிசமைக்க வேண்டும். நிரந்தரமான உயர்வுக்கு அடித்தளமிட்டு அவர்களின் ஆளுமையைக் கட்டியெழுப்ப வேண்டும். அவர்களே அவர்களை இனம் கண்டு கொள்ள அரங்கு உதவ வேண்டும். நிஐத்தை முன்வைக்க வேண்டும். அவர்களது உச்சம் எது என்பதைத் தொட்டுக் காட்டி, அதனை எய்துவதற்கான வழிவகைகளை அரங்கு கூறவேண்டும். நீடித்த நிறைவிற்கு வழிசமைக்க வேண்டும். இந் நீடித்த நிறைவிற்கு வழிசமைக்க நிறுவன மயப்படுத்தப்பட்டவர்களாலேயே முடியும்.

குடும்பத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உழைக்க வழியற்று, குழந்தைகளை வளர்க்க வழியற்று, தனது நிலைப்பாட்டினை விளங்கிக் கொள்ள வழியற்று, தனது அறிவை மது போதையில், சோம்பேறித் தனத்தில், விரக்தியின் விளிம்பில் அடகு வைத்து நிற்கும் பெற்றோரின் அறியாமை – அதனால் அல்லலுறும் குழந்தை உள்ளம், அது இழந்து போகும் கல்வி, சந்தோஷம், வாழ்வு, வளம் அனைத்தையும் அறிந்து, தாங்கி அதை மீறி மேலெழுவதற்கான தாங்கு திறனை அரங்கு வழங்க வேண்டும். குழந்தைகள் எமது சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள், அவர்களை வெறும் மின்மினிப் பூச்சிகளாக, கணநேரத்தில் கருகிப்போகும் காய்ந்த சருகுகளாக, உயிர்ப்பற்ற நிலையில்; கடந்த காலப் போர் அரக்கனின் சுவடுகள் உருவழித்து விட்டுள்ளன. நாளைய தலைவர்களை நாம்;தான் உருவாக்க வேண்டும். இத்தகைய நீண்ட கால நோக்கில் அடித்தளம் இட்டு மேற்கிளம்ப வைக்க அரங்கு – சிறுவர் அரங்கு- பாடசாலை அரங்கு ஒன்றினால் மட்டுமே முடியும்.

பசிக்கும் குழந்தைக்குக் கஞ்சியை மட்டுமே நாம் ஊற்றுகிறோம். அதேவேளை ஊட்டச்சத்தையும் நாம்தான் வழங்க வேண்டும். மேற்குலக நாடுகளில் வாழும் குழந்தைகளின் உடல், உள ஆரோக்கியம், கல்வி அறிவு, தொழில்நுட்ப அறிவு வளம், என்பவற்றைப் பற்றிய செய்திகளை அரங்க ஊடகத்தின் மூலம் வழங்க வேண்டும். சர்வதேச எண்ணக்கருவில் எமது பிள்ளைகளை இணைத்துக் கொள்ள அரங்கு உதவவேண்டும். அதேவேளை அரங்கு காட்டும் பாதையை ஏற்று இடம் விட்டு அனுசரித்துப் போகும் தன்மையை இளையோரும், பெரியோரும் வளர்த்துக் கொள்ளவேண்டும். பிள்ளையைத் தட்டிக் கொடுக்கப் பாராட்ட அதன் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க ஏனையோர் தமது உள்ளக் கதவுகளை அகலத் திறந்து கொள்ள வேண்டும். இதையும் அரங்கு தனது செயற்பாடுகள் மூலம், ஆற்றுகை வடிவங்கள் மூலம் சாதிக்க வேண்டும். இந்த சிறுவர் உள்ளங்கள் முன்வைக்கப்பட இருக்கின்ற சில நிமிடங்கள் பல வருடங்களை ஒளிமயமாக்கி எமது மனித வலுவை – வளத்தைச் செம்மைப்படுத்தட்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: