Theva

அரங்க விளையாட்டுக்களும் சிறுவர் அரங்கும்

In கட்டுரை on ஒக்ரோபர்17, 2007 at 5:20 பிப

சிறார்களிடையே இறுக்கமான நிலையினைக் களைவதற்கும் இலகுவான அல்லது இலேசானதும், சுதந்திரமானதுமான மனநிலையை சிறார்களிடையே ஏற்படுத்துவதற்கும் அரங்க விளையாட்டுக்கள் மிக உகந்தவை. இவ்வகையில், இவ்விளையாட்டுக்கள் மாணவர்களின் தேர்ச்சியினை அதிகரிக்கக்கூடிய தயார்நிலையை மாணவர்களுக்கு ஏற்படுத்த உதவுகின்றது எனலாம். அதுமட்டுமல்லாது உடனடியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக்கூடிய செயற்திறனையும் ஏற்படுத்துகின்றது. மாணவர்களிடையே பிணைப்பையும், நற்பண்புகளையும், முதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது. ஒன்றிணைந்து செயற்படுவதற்கும், அழகியல் ஆற்றல்களை வளர்த்தெடுப்பதற்கும், எல்லாவற்றிற்கும் மேலாகப் பிள்ளையை, பிள்ளை போல் செயற்பட வைப்பதற்கும் ஆசிரியர்களுக்கு உதவுகின்றது.

அரங்க விளையாட்டுக்கள் மாணவர்களின் பாடவிதானம் சார்ந்த நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தக்கூடியன. கணிதம், சுற்றாடல் மொழி, செயற்பாட்டு ரீதியிலான வாய்மொழி, ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பல படிகளை கற்கும் அனுபவத்தை இவ்விளையாட்டுக்கள் மூலமாக மாணவர்கள் அடையச் செய்ய இயலும்.

சுற்றாடலுக்கு நேசமான தன்மையினை ஏற்படுத்தும் அரங்க விளையாட்டுக்கள் மூலமாக சிறார்களிடையே மரங்கள், தாவரங்கள், இயற்கை என்பவற்றிடம் விருப்பமும், இயற்கையை ரசிக்கும் பண்பும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் மனப்பாங்கும் ஏற்படுகின்றது. அதுமட்டுமல்லாது, மிருகங்கள், பறவைகள் என்பவற்றை அவதானிக்கும் இயல்பு, அவற்றிடம் அன்பு கொள்ளும் தன்மை, அவற்றைத் துன்புறுத்தாமல் பாதுகாக்கும் தன்மை, அவற்றைப் போலச் செய்தல், சூழல் rathakrishnan.jpgமாசுபடுதலை அனுமதிக்காமல் தன்னளவில் சூழலுக்கு நேசமான செயற்பாடுகளைக் கொண்டவர்களாகும் இயல்பு என்பவை ஏற்பட வாய்ப்பு உண்டு.

இவ்வரங்க விளையாட்டுக்கள் மூலம் சிறார்களிடையே கணித இயல்பும், கலாசாரமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. கணித சிந்தனை விளையாட்டு, உடல் தெறிவினை போல் கணிதப் பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பழகுதல். தீர்வுகளைக் காணல். அடிப்படைகளை இனங்கண்டு விடை காணப்பழகுதல். துரித செயற்பாடுடையவர்களாக செயற்பட்டு ஞாபக சக்தியை வளர்த்தல் என்பவற்றை கணிதம் சார்ந்த அரங்க விளையாட்டுக்கள் மூலம் சிறார்களிடையே இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள இயலும்.

இவ்வரங்க விளையாட்டுக்கள் மூலம் மொழி தொடர்பான ஆற்றல்களையும், வளர்த்துக்கொள்ள இயலும். மொழியை ஒரு கல்வியாகக் கொள்ளாது ஒரு திறனாகக் கருதப் பழகுதல், துரிதமாக மொழியைக் கையாளப்பழகுதல், மனதில் பட்டதைத் தெளிவாகக் கூறுவதற்கு பழகுதல், ஏற்ற இறக்கங்களுடன் உரத்து மொழியைக் கதைக்கப் பழகுதல், மொழியின் முழுமையினை தொடர்பாடலுக்குப் பயன்படுத்துதல், கலைச்சொற்களை ஞாபகத்தில் தேடிச் சேர்த்தல், உணர்வுகளைப் புரிந்து உரையாடல், போன்ற பல்வேறு தன்மைகளை மொழி தொடர்பான அரங்க விளையாட்டுக்கள் மூலம் சிறார்களிடையே உருவாக்கிக் கொள்ள முடியும்.

பிள்ளைகளுக்கு உதவுதல் என்பதே கல்வியாகும். இவ்வகையில் ஒரு ஆசிரியரின் பணி மிக மேன்மையானது. மி;ருகங்களைப் பழக்குவது போன்ற ஒரு நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, அன்பும், உறவும், புரிந்த உணர்வும் நிறைந்த தெய்வீக நிலையை அவ்வாசிரியர் பேணுதல் வேண்டும். தனது மாணவச் சிறார்களுக்கு கற்றல் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்தல், அதற்கான களநிலைமையினை நன்கு திட்டமிட்டு உருவாக்குதல் என்பவையே அவரது பிரதான பணியாகும்.

பிள்ளை பங்குபற்றும் ஒவ்வொரு செயற்பாடும் அது வகுப்பறைச் செயற்பாடாக இருந்தாலென்ன, வகுப்பறைக்கு வெளியே பாடசாலை மைதானமாக இருந்தாலென்ன அல்லது பாடசாலை முற்றமாக இருந்தாலென்ன ஒரு சுற்றுலாவாக இருந்தால் என்ன ஒவ்வொரு செயற்பாடும் ஒரு முழுமையான ஆற்றுகையாக அமைதல் வேண்டும். பிள்ளைகளுக்கு அவர்கள் விருப்பத்துடன் அடையக்கூடிய கற்றல் அனுபவமாக இருத்தல் வேண்டும்.

பிள்ளைகளின் கல்வி பற்றிச் சிந்தித்த எமது மூத்தோர் பலர் இதைச் செய், இதைச் செய்யாதே, இது தவறு, இது பயனுள்ளது என பல்வேறாகக் கூறி வந்தனர். பல சிந்தனைகள் உருப்பெற்றன. ஆனாலும், பிள்ளைகள் தாம் நினைத்ததையே செய்தனர், செய்கின்றனர் என்பதுவே உண்மை. எப்போது அப்பிள்ளை தான் உணர்ந்து விருப்பத்துடன் செயற்படுகின்றதோ அவ்வேளையில் அவன் அடைகின்ற அடைவு அல்லது அனுபவம்தான் கல்வியாகின்றது. இங்குதான் ஆசிரியரின் பணிபற்றிக் கவனம் எடுக்க வேண்டியுள்ளது.

உண்மையில் ஆசிரியர் ஒரு வசதியளிப்பவர். ஒரு பங்குபற்றும் நெறியாளர் ஆகின்றார். கற்றல் செயற்பாட்டை நன்கு திட்டமிட வேண்டியவர் ஆகின்றார். என்ன விடயம் பிள்ளைகளுக்குச் சென்றடைய வேண்டும். எந்தளவில் சென்றடைய வேண்டும், எவ்வளவு காலத்தில் அக்கற்றல் அனுபவத்தை அவர்கள் பெற வேண்டும், என்பவை போன்ற விடயங்களை நன்கு திட்டமிடுவதோடு இவ்வனுபவத்தைப் பெறுவதற்கான தயார் நிலைக்குப் பிள்ளைகளை அரவணைத்துக் கொண்டு செல்பவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கு, உணர்வுகளைப் புரிந்து கொள்ளக்கூடிய, உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கக்கூடிய பக்குவ நிலையினை அவ்வாசிரியர் கொண்டிருத்தல் வேண்டும். இவ்வாறான நிலையிலேயே பிள்ளைகள் குறிப்பாகக் கவனிக்கப்பட்டு உரிய தேர்ச்சிகளை உச்ச அளவில் பெற்று பாண்டித்திய நிலையினை அடைவர்.

அதுமட்டுமல்லாது இத்தகைய ஒரு பக்குவ நிலையிலேயே மனிதத்துவத்தை உருவாக்கக்கூடிய கல்வி அனுபவம் பிள்ளைகளிடத்தே சென்றடையும். அரங்க விளையாட்டுக்கள் மூலம் பிள்ளைகளிடத்தும், ஆசிரியரிடத்தும் மேற்குறிப்பிட்ட பக்குவ நிலையினை இலகுவாக உருவாக்க முடியும். வெளிப்படையான உணர்வுப் பகிர்வு, கற்றல் அனுபவத்தை தேடிப்பெறும் இயல்பு, சாதிக்க முடியும் என்ற மனத்தைரியம் என்பவற்றையும் இவ்வரங்கு ஏற்படுத்தவல்லது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: