Theva

நெஞ்சுறுத்தும் கானல் – இரு நாடகங்கள்

In ஆக்கம் on ஒக்ரோபர்14, 2007 at 7:08 முப

அறிமுகக் குறிப்பு – தி.செல்வமனோகரன்

nenjuruththum-kannal.jpg‘நாடகம்’ என்பது எப்பொழுதும் வலிதான ஊடகமாகவே இருந்துவருகின்றது. அதிலும் நவீன நாடகங்கள் சமூக யதார்த்தங்களைக் கருப்பொருளாக்கி நடிகனுக்கும் பார்வையாளனுக்கும் இடையிலான இடைவெளிகளைக் குறைத்து  பார்வையாளரையே நடிகனாக்கி தமது நோக்கத்தில் வெற்றி பெறுகின்றன. திரு தே.தேவானந்தின் நாடகங்களும் அவ்வாறானவையே.

தேவானந்த் அவர்களின் நெஞ்சுறுத்தும் கானல், முடக்கம் எனும் இரு நாடகங்களும் இணைந்த தொகுப்பாக ‘நெஞ்சுறுத்தும் கானல்’ எனும் நூல் வெளிவந்துள்ளது. இவ்விரு நாடகங்களும் யுத்த பூமியில் புதைக்கப்பட்ட மிதிவெடிகளும் இதர வெடி (மர்ம) பொருட்களும், நொந்து சீரழிந்து மீளத்தம் மண்ணில் குடியேறும் மக்களின் வாழ்வைச்  சிதைத்துச் சின்னா பின்னமாக்குவதைப் பற்றி பேசுகின்றன. அத்தோடு அதனைப் பயன்படுத்தி சுயலாபம் சம்பாதிக்கின்ற அதிகார வர்க்கத்தையும், அதன் மனச்சாட்சி இல்லாத நடத்தைகளையும் (முடக்கம்) ஏழ்மையால் ஆசையால் செய்கின்ற களவுகள் மற்றவர் வாழ்வுக்கு ‘உலை’ வைப்பதையும், (மிதிவெடி அபாயம் என்ற பலகையையும் கம்பத்தையும் களவாடல்) முகத்தில் அடித்தாற் போல் மக்கள் முன் வைக்கின்றன. குள்ளநரி, சிங்கம், ஒட்டகச் சிவிங்கி, குரங்கு என்னும் விலங்குகளின் கதையினை குறியீடாகப் பயன்படுத்தி மக்களை அரசு, அதிகாரவர்க்கம் எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதையும் (நெஞ்சுறுத்தும் கானல்) இந்நாடகங்கள் எடுத்துரைக்கின்றன.

மனிதர்களின் தீய நடத்தைகளால், அலட்சியத்தால் மனிதர் மட்டுமல்ல கால்நடைகள், மரங்கள் கூட அழிந்தும், ஊனமுற்றும் போவதையும் இவை எடுத்துரைக்கின்றன. இவ்விடத்தில் நெஞ்சுறுத்தும் கானலில் வருகின்ற இ.முருகையனின் ‘நாங்கள் மனிதர் நாங்கள் மனிதர்’ என்ற வரி எம்முன்னே எக்காளம் இட்டுத் தாண்டவமாடி, கைகொட்டிச் சிரிக்கிறது. இந்நாடகங்கள் சிறுவர்களை முன்னிறுத்திய அரங்க செயற்பாடாகவும் திறந்தவெளி அரங்கிலான சாதாரண மக்களிற்;கு விpழிப்புணர்வு ஊட்டும் அரங்க செயற்பாடாகவும் அமைந்துள்ளது. அந்த வகையில், இவை கருத்தேற்றத்திற்கான அல்லது பிரச்சாரத்திற்கான உருவாக்கங்களே ஆயினும், பிரச்சாரநெடி மூக்கைத்துளைத்து மனதை நெருடவில்லை. ‘பிரச்சாரப் படைப்புகள்’ கலையம்சம் குறைந்தவை என்ற கருத்து பொதுவானது. எனினும் இ.முருகையன் கூறுவது போல “இந் நாடகம் சிறுவருக்கு எனவும் திட்டமிடப்பட்டு பக்குவமாக நிறைவேற்றப்பட்டு உள்ளபடியால், அதில் உள்ள பிரச்சாரப்பிடிமானம் கலைச்சுவை குன்றாதவிதத்திலும் கையாளப்பட்டுள்ளது.” என்பது இந்நாடகங்களைப் பார்த்தவர்கள், வாசித்தவர்கள் ஆகிய அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தாகும்.

இந்நூல் இரண்டு நாடகங்களோடு இன்னும் சில பதிவுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆக்கவியலாளன், பாடலாசிரியன், நடிகர்கள், பார்த்த இரசிகர்கள் என்போரின் அனுபவங்கள் இங்கே பதிவுகளாகப் பகிரப்பட்டுள்ன. அத்தோடு மிதிவெடி, அமுக்க வெடி, இதர வெடிபொருட்களால் உடல் ஊனம் உற்றவர்கள் சிலர் பற்றிய தவல்களும், அவ்வாறு ஊனமுற்றவர்களினதும் அவர்களின் உறவினர்களினதும் அனுபவங்களும் இதில் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், நாடக இலக்கிய நூலாகவும், சமூக விழிப்புணர்வைத் தூண்டுகின்ற வழிகாட்டி நூலாகவும் இது முக்கியமானது.

நாடகம் எப்பொழுதும் கூட்டு முயற்சியாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக நவீன நாடகங்கள் இதற்கு முதன்மை கொடுக்கின்றன. தேவானந்தின் இந்நாடகங்களும் இக் கலையாக்க முறைமைக்கு உட்பட்டே எழுத்துரு வாக்கப்படப்டுள்ளன. ‘நெஞ்சுறுத்தும் கானல்’ பல நிஜச்சம்பவங்கள் பற்றிய தகவல் சேகரிப்பாலும் நடிகர்களினதும் படைப்பாளிகளினதுமான அனுபவங்களின் ஊடாகவும் தேவானந்தால் எழுத்துருவாக்கப்பட்டுள்ளது. 130 மேடையேற்றங்களின் பின்னே அவ்வெழுத்துருவைப் பூரணமாக்கியதாக அவர் கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்த நாடகங்கள் இரண்டுமே மேடையேற்றப்பட்ட இடங்களில் எல்லாம் வெற்றிவாகை சூடியுள்ளமை இவ் அரங்கவியலாளர்கள் அனைவரினதும் உழைப்பை எமக்கு எடுத்துரைக்கின்றன.

நாடகம் என்பது பார்க்கும் போது தருகின்ற அதிர்வுகளை, அருட்டுணர்வுகளை வாசிக்கும் போது முழுவதுமாக பெற்றுவிட முடியாது. ஆயினும், இந்நூல் மேடையமைப்பு, காட்சிகள், நடிகர் செயற்பாடு போன்றன எவ்வறமைதல் வேண்டும் என்பதனை குறிப்புக்களால் தருவதன் ஊடாகவும், புகைப்படங்களுடாக காட்டுவதனூடும் அதனை ஓரளவேனும் நிறைவு செய்ய முயன்றுள்ளது.

இந்நூல் ஆவணப்படுத்துகை என்ற வகையிலும் ஈழத்தமிழர் யுத்தத்தால் படும் அவலங்களையும் மிதிவெடி, அமுக்கவெடி, வெடிக்காத (மர்ம) பொருட்கள் போன்றவற்றால் தெரிந்தோ தெரியாமலோ படும் துயரங்களையும்  இப்பிரச்சாரத்தை கலையம்சத்தோடு செய்ய முற்பட்ட வகையிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. இந் நாடகங்கள் மேடைகளில் தந்த அதிர்வுகள் அடங்க முன்னமே நூலுருப்பெறுவதும் குறிப்பிடத்தக்கது. யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு ப.சிவநாதன் கூறுவது போல “தேவானந்தின் நாடகங்கள் எந்தக் காலகட்டத்திலும் எவ்வித அச்சுறுத்தல்கள் மத்தியிலும் வாழ்வில் நம்பிக்கையுடனும் நெஞ்சுறுதியுடனும் தன்மானத்துடனும் கௌரவத்துடனும் ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்பதனை கருப்பொருளாகக் கொண்டுள்ளன” எனலாம். தேவானந்த் இன்னும் பல நாடகங்களையும் எழுத்துருக்களையும் தரவேண்டும்.

குறிப்பு: இந்த நூலுக்கு வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் நாடக இலக்கியத்திற்கான விருது வழங்கப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: