Theva

உண்மையான உழைப்பின் ஊடாக ஒரு நாடகம் முழுமை பெற்றுள்ளது.

In பகிர்வு on ஒக்ரோபர்14, 2007 at 6:00 முப

– கு.லக்ஷ்மணன்

இன்றைக்கு அரங்கு வழங்கும் நிலையில் பல மாறுபாடான வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. இந்நிலையில் தனிமனித ஆளுமை விருத்திக்கு அரங்கு மிகப்பெரும் பங்காற்றுகிறது என்பது பலரும் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்தே. ‘நெஞ்சுறுத்தும் கானல்’ என்ற நாடகமும் அது சார்ந்த செயற்பாடுகளும் இவ்வரங்கோடு தொடர்பு கொண்ட அரங்கச் செயலாளிகளிடத்தில் ஏராளமான வளர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளதை அவதானிக்கின்றேன். அவை அரங்கியல் சார்ந்தவையாக மட்டுமின்றி வாழ்வியல் சார்ந்தும் அமைந்திருப்பது மகிழ்வைத் தருவதாக இருக்கிறது. என்னோடு நட்புறவுடன் இருக்கும் இவர்களிடம் நெருங்கியிருக்கிற பொழுதுகளில் நான் அவதானித்த வளர்ச்சிப்பாங்கான மாற்றங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் பொருத்தமானது என்றே நினைக்கின்றேன்.

நானும் இவ்வரங்க நடவடிக்கைகளில் உள்வாங்கப்பட்டவன் என்ற வகையிலும் அனேக சந்தர்ப்பங்களில் வெளிநின்று பார்க்கக்கூடிய வாய்ப்புக்களைப் பெற்றவன் என்ற நிலையிலும் எனது மனதின் பசுமையான படிவுகளில் நின்றும், வெளிக்கிளம்புகிற நினைவலைகளை ‘நெஞ்சுறுத்தும் கானல்’ சாதித்த, சந்தித்த ‘பாரம்’ பற்றிய சிந்தனையில் பேசுதல் பயனுள்ளதாய் அமையலாம்.

எதேச்சையாக இவ்வரங்கு என்னை ஈர்த்துக்கொண்டாலும் அதன் ஒவ்வொரு அசைவும் எனக்கு நம்பிக்கையுடையதாகவும் சந்தோசமானதாகவுமே அமைந்திருந்தது. தொடர்ந்து இணைந்திருக்கவேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்திய  வண்ணமிருந்தது. இதைவிடவும் உரிய இலக்கு நோக்கி நாம் நெறிப்படுத்தப்படுவதான உணர்வு ஏற்பட்டவண்ணமிருந்தது.

நாடக முன்னேற்பாட்டின் பிரகாரம் பாடசாலை மாணவருக்கானநாடக அமைப்பும், கிராம மக்களுக்கான தெருவெளி அரங்க அமைப்பாகவுமே இவ்வரங்கச் செயற்பாடு திட்டமிடப்பட்டது. இத்திட்டம் அதன் பயன் தொடர்பான முழுப் பிரயத்தனங்களையும் கொள்ளவேண்டும் என்பதில் செயலாளிகள், நெறியாளர், யாவரும் மிகுந்த கருத்துடனிருந்தனர்.

இவ்வரங்கு அரங்கு செயலாளிகளிடம் காணப்பட்ட ஆற்றல்களை முழுமையாக உள்வாங்கித் தன்னை வளமாக்கிக் கொண்டுள்ளது எனலாம். அரங்கப் பாவனையில் உள்ள சித்திரங்கள், விளக்கப்படங்கள் என்பவற்றோடு வேடஉடைகள், பிரமாண்டமான காட்சி அமைப்புக்கள், காட்சிப் படிமங்கள் என்பன சிறப்பாக இருந்தன. காகித கூழ்களில் வடிவங்கள் அமைத்து காட்சிப்படுத்தல்களை மெருகூட்டியதிலும் இவர்களின் உழைப்பு தனிப்பட்டது.

நாடகம் தொடர்ச்சியான மேடையேற்றலைக் கொண்டிருந்ததால் இவர்கள் தமது நடிப்பிலும் அது சார்ந்த வேiலைகளிலும் தகுந்த உத்திகளைக் கையாண்டனர். இந்த உத்திகள் நாடகத்தில் பல பரிணாம வளர்ச்சிகளை ஏற்படுத்தின. நெறியாளரினால் மாற்றம் செய்யப்படும் காட்சிகளை மிக இலகுவாக விளங்கிச் செய்யக்கூடியவர்களாக உருவானதை செயற்பாடு ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் அவதானிக்க முடிந்தது. நாடக ஓட்டத்தில் இவர்களது ஒத்துழைப்பான பங்களிப்பு குறைந்த நாட்களுக்குள் உரிய இலக்கினை நோக்கிய அதிகமான முன்னேற்றத்தை அடைய வகை செய்தது எனலாம்.

அரங்கச் செயலாளிகளிடத்தில் ஆளுமை விருத்தி என்ற நிலையில் நோக்குகின்ற போது இவர்களிடம் சுயகட்டுப்பாடும், வழங்கப்பட்ட வேலையிலும் பிறவற்றிலும் பொறுப்புணர்வுடன் செயற்படும் தன்மையும் இருந்ததை அவதானித்தேன். நேர முகாமைத்துவம் இவர்களிடம் குறிப்பிடக்கூடிய ஒரு வளர்ச்சி எனக்கூறலாம். இப்போது இவர்கள் சமூகத்தின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் சமூகத்தினை நம்புபவர்களாகவும் உள்ள நிலை மகிழ்ச்சியானது. அர்பணத்துடன் சேiயாற்றும் மனப்பக்குவம் உருவாகி இருப்பதும் ‘நெஞ்சுறுத்தும் கானல்’ பெற்ற பெரும் பேறே என்பேன்.

இவர்களின் உழைப்பினால், நெஞ்சுறுத்தும் கானல் நாடகம் 2002 – 2003 ஆம் ஆண்டுகளில் யாழ் மாவட்டத்தில் உள்ள 137 பாடசாலைகளில் மேடையேற்றப்பட்டுள்ளது. இதனை 65 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களும் ஆசிரியர்களும் பார்வையிட்டுப் பயன் பெற்றுள்ளனர்.
logo-flat.jpg

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: