Theva

தனிமையில் ஒரு நாடகக் கலைஞர்

In ஆக்கம் on ஒக்ரோபர்2, 2007 at 3:42 பிப

arasu-copy.jpg

நீண்ட குர்த்தா, அகண்ட இடுப்புப் பட்டியால் வலிந்து கட்டிய வேஷ்டி, நெற்றியில் நீறு, சந்தணப்பொட்டு என மலர்ந்த முகத்துடன் துவிச்சக்கர வண்டியில் வந்து இறங்கினார் அரசையா.

“கோயிலுக்குப் போயிட்டு வாறன். நீங்களும் சொன்ன நேரத்துக்கு வந்திட்டீங்கள்” என்றார். வீதியில் இருந்து அவரின் வீட்டினுள்ளே சென்றோம். அவருடைய வீட்டின் அத்திவார அமைப்புக்கள் மட்டும் கிடந்தன. இடிக்கப்பட்ட வீட்டின் எச்சங்கள் சிறு சிறு குவியல்களாகக் கிடந்தன.தற்போது இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீட்டில் அவரது வாழ்க்கை.

நாடக வாழ்க்கைக்காக எவற்றையெல்லாம் இழந்தாரோ அதே நிலையில் – தனிமையில் – கோயில் குளம், ஒரு சில உறவுகள், நண்பர்கள், ஒளிப்படப்பிடிப்பு என அவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. கலை உலக உறவுகள் தன்னை  அரவணைத்திருக்கும் என்ற தளராத நம்பிக்கையுடன் அவர் எல்லாச் சுமைகளையும் தாங்கிக் கொண்டிருக்கிறார்.

இருள் பரவும் நேரம். எம்மை அழைத்து அமரச் செய்த பின்னர், தனது மேலங்கியை கழற்றி வைத்தவர், வீடெங்கும் குங்கிலியப் புகையிட்டார், விளக்கேற்றினார். கூடவே தனது வாழ்க்கை முறை பற்றி எமக்குச் சொல்லிக்கொண்டேயிருந்தார். இவருடைய மகள் 2002ம் ஆண்டு திடீர் சுகயீனம் காரணமாக இவ்வுலகை விட்டுப் பிரிந்துள்ளார். அப்பிரிவு இவரது மனதை விட்டு அகலவில்லை. நாடகப் பணிகளில் தற்போது ஈடுபடாததற்கும் அதுவே காரணம் எனக் கூறுகிறார்.

தனது நாடக ஈடுபாடுகள் பற்றி பசுமையான அனுபவங்களைத் தெரிவித்துக்கொண்டவர். “என்னைப் போல நடிக்கின்ற தோதான ஆட்கள் வரவில்லை. என்னுடைய சகாக்கள் வந்துகொண்டிருந்தவர்கள்தான். ஆனால் அவர்கள் அப்படியே எல்லாவற்றையும் கைவிட்டு விட்டார்கள்” என்றார்.

அரசையாவைப் பொறுத்தமட்டில், புராண இதிகாச நாடக, இயற்பண்பு வாத, யதார்த்தவாத நடிப்புக்கொண்ட ஆற்றுகைகளையே “நாடகம்”, “நடிப்பு” எனக்கருதுகிறார். தற்போது நடைபெற்றுவருகின்ற நாடக முயற்சிகள் தொடர்பாக தனது விசனங்களை தெரிவிப்பதிலும் அவர் பின்னடிக்கவில்லை. அரங்குகளில் காட்டாது தவிர்க்க வேண்டியவைகள் எல்லாம் அளிக்கை செய்யப்படுகின்றன எனவும் குறைப்பட்டுக்கொள்கின்றார்.

குறிப்பாக பல்கலைக்கழக மட்டத்தில் நடைபெறுகின்ற அரங்கியல் பரீட்ச்சாத்தங்களைப் பற்றி குறிப்பிட்டுக் கூறும் அரசையா, பரீட்சார்த்த நாடகங்களை எல்லா இடமும் மேடையேற்ற முடியாது எனவும் கூறுகிறார். ஆடல், பாடல் கொண்ட அளிக்கை முறைகளைத் தான் தற்போது அதிகம் அவதானிப்பதாகவும், அவை “பலே” வடிவம் (Pallet Style)  கொண்டதாகவும் எனினும் அவற்றுள் ஜதிகள், ஒழுங்குகள் காணப்படவில்லை எனவும் ஆதங்கப்பட்டுக் கொள்கின்றார்.

arasu-1-copy.jpg

அரசையாவின் “தமிழன் கதை” எனும் நாடகம் அவரை ஓர் போற்றக் கூடிய கலைஞனாக வெளிக்காட்டி உள்ளது. அத்தோடு 95ன் முன் நாடக அரங்கக் கல்லூரியில் “வையத்துள் தெய்வம்”, “பாஞ்சாலி சபதம்” எனும் நாடகங்களை நெறியாள்கை செய்துள்ளார். அண்மைக் காலங்களில் கொழும்பில், வவுனியாவில் தங்கியிருந்த போது திரு.கந்தையா ஸ்ரீகணேசனோடு கூட்டாக நாடகப் பணிகளை மேற்கொண்டுள்ளார். “சைவப்பிரகாச” போன்ற பாடசாலைகளும் “சாயிசமித்தி” போன்ற இடங்களும் இவருக்கு நாடக வேலைகளில் ஈடுபடக் களமாகக் கிடைத்திருக்கின்றன.

உண்மையிலேயே நாடகம் மீதான பற்றுக் காரணமாக அரசையா இழந்தவை பல. எனினும் மேலும் மேலும் அரங்கத்துறை சார்ந்த வேலைகளில் ஈடுபட அவர் ஆர்வமாக உள்ளமை எமக்கெல்லாம் முன்னுதாரணம் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

சிறந்த நடிகனாக, நெறியாளனாக, வேட உடை ஒப்பனையாளனாக, சிற்பக் கலைஞனாக இருந்து வந்த அரசையா இன்றும் தன் ஜீவனோபாயத்திற்கான முயற்சிகளை விட்டு விடவில்லை. அதற்கு அவருக்கு கைகொடுத்திருப்பது ஒளிப்படக்கலை. நீண்ட காலமாகவே இக் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தவர். இன்றுள்ள நவீன, வியாபார முயற்சிகளுடன் ஈடுகொடுக்க முடியாத நிலையில் உள்ளார். அரசையா கலை இலக்கியத்துறை சார்ந்தவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து பேணி வருவதோடு இவர்களுடன் கலந்துரையாடுவதில் பெரும் திருப்தி கொள்கின்றார்.

தற்போது எங்கு நாடகம் மேடையேறினாலும் அதனை அரசையா அறிந்தாராயின் அவர் அவ்விடத்தில் பிரசன்னமாகியிருப்பார்.

‘கூத்தரங்கம்’ இவர் போன்றவரை ஒரு கணம் உரையாடி உறவு கொள்ள விரும்புகின்றது. அதற்காக அரங்க முதிய நண்பர்களின் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: