நிலவருகே மரணம்! நாடக ஆற்றுகை பற்றி………

Nelavaruke Maranam

(மேலும் படங்கள் கலரியில்) 

- ஆனந்த்

ஸ்பெயின் நாட்டின் மிகப் பரவலாக அறியப்பட்ட நாடகக் கலைஞர் வெட்றிகோ கார்ஷியா லோர்காவின் Blood wedding நாடகம் சிங்களத்தில் “சந்த லங்க மரணய” (நிலவருகே மரணம்) என்ற பெயரில்  23.04.2005 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் மேடையேற்றப்பட்டது.

“நிலவருகே மரணம்” நாடகம் 2005ம் ஆண்டு தேசியநாடக விழாவில் வருடத்தின் சிறந்த நாடகம் என்ற விருதையும் சிறந்த நெறியாள்கை, சிறந்த தழுவல் எழுத்துரு, சிறந்த தற்புதுமையான இசையமைப்பு, சிறந்த நடன அமைப்பு, சிறந்த துணை நடிகை, சிறந்த ஒப்பனை வடிவமைப்பு போன்ற விருதுகளையும் பெற்றுக் கொண்டது. இந்நாடகத்தை நெறியாள்கை செய்திருப்பவர் ஆங்கில ஆசிரியராகக் கடமைபுரியும் கௌஷல்யா பெர்னாண்டோ. இவர் சிங்கள மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் திரைப் படங்களிலும் நடித்த நிறைந்த அனுபவத்தைப் கொண்டுள்ளவர்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

முடிந்தும் முடியாதவற்றைப் பேசிய அரங்கு

trro_drama_11.jpg- இலக்கியா

அரங்கு பேசவேண்டியவற்றைப் பேசவேண்டும். பேச வேண்டியவை மறை பொருளாகக் கிடக்கும், மௌனமாகக் கிடக்கும். அவை புலணுணர்வைத் தட்டும்போதும் அடக்குமுறைகள், அச்ச நிலைமைகளால் பேசாப் பொருட்கள் ஆகிவிடுகின்றன. 1995இன் பின் ஏற்பட்ட அரசியல், இராணுவ மாறுதல்கள் குடாநாட்டின் அரங்கப் பயணத்தில் மிகுந்த தாக்கம் செலுத்தியிருந்தன. அரங்கு புரட்சிக்கான ஊக்கியெனக் கருதியதாலோ என்னவோ, அதன் மீதான இராணுவப் பார்வை கடுமையானதாகவே இருந்தது. அது இன்றுவரை அரங்கியலாளருக்கான அச்ச நிலைமையை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

தீனக்குழந்தைகள் நாடகம்: ஒரு பார்வை

இ.விஜி

சமூகத்தில் இன்று அரங்கு பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. போர்க்காலத்தில் போரின் உடனடித் தேவைகளைப் பேசிய அரங்கு போர் சற்று ஓய்ந்திருக்கும் வேளையில் போரினால் பாதிக்கப்பட்ட மனிதமனங்களைப் ஆற்றுப்படுத்த முற்படுகின்றது. போரினால் நாம் எதிர்கொண்ட, எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகளை அரங்கு பேசி வருகின்றது. அந்த வகையில் தே.தேவானந்தின் ‘நெஞ்சுறுத்தும் கானல்’, ‘இடர்கள் கெடுக’, ‘முடக்கம்’ போன்ற மிதிவெடி விழிப்புணர்வு நாடகங்கள் கடந்த ஆண்டுகளில் பாடசாலைகளில் மேடையேற்றப்பட்டன. அந்நாடகங்கள் பெரும்பாலும் மதிவெடியினால் ஏற்படும் பாதிப்புக்களையும் அப்பாதிப்புக்கு உள்ளானவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும் பாதிப்புக்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிகளையும் கூறுகின்றன. இப்பொழுது ‘தீனக் குழந்தைகள்’ எனும் நாடகம் தே.தேவானந்தினால் எழுதி, நெறியாள்கை செய்யப்பட்டு பாடசாலைகளில் மேடையேற்றப்படுகின்றது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆக்கம், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

நிர்வாணம்: நாடக விமர்சனம்

nirvanam-copy.jpgநிர்வாணம் நாடகம் ஜனகரளய என்ற பல் இன இளைஞர்கள் அடங்கிய நாடகக் குழுவினரால் 01.12.2004 அன்று செயல்திறன் அரங்க இயக்க அலுவலகத்தில் மேடையேற்றப்பட்டது.

சிங்கள நாடக உலகிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நன்கு அறியப்பட்டவர்களான பராக்கிரம நீரியல்ல, H.A.பெரேரா ஆகியோர் இந்நாடகத்தை தயாரித்துள்ளார்கள்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பலர் ‘கலைப் பாலங்கள்’ அமைத்திருக்கிறார்கள். ஒன்று கூடல்கள், கருத்தரங்குகள், பட்டறைகள், புத்தக வெளியீடுகள் என்பன நடத்திருக்கின்றன. ஒரு சில ஆங்கில நாடகங்கள் வடக்கில் மேடையேற்றப்பட்டுள்ளன. இடையிடையே திரைப்பட விழாக்களும்கூட நடந்திருக்கின்றன. இவை அனைத்தும் சமாதானத்திற்கு வலுச்சேர்க்கும் முயற்சிகள் என்று சொல்லப்படுகின்றன. இந்த வரிசையில் ஜனகரலய செயற்திட்டமும் இணைந்து கொள்கிறது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

மேடையில் எரிந்த பெண்

the-ritual_f.jpgThe returel

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் ‘த ரிச்சுவல்’ என்னும் ஆங்கில மொழியில் அமைந்த சுதேச நாடகம் 29, மே 2004, மாலை 4.30 மணிக்கு மேடையேற்றப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் துறையினர் நாடக மேடையேற்றத்திற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார்கள். ‘த ரிச்சுவல்’ நாடகத்தை எழுதி நெறியாள்கை செய்திருப்பவர் கொழும்பு பல்கலைக்கழக மொழியியல் துறை விரிவுரையாளர் ஜெகான் அலோசியஸ் (Jehan Aloysius)

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஈழத்துத் தமிழ் அரங்கில் பெண்

திருமதி ஞா.ஜெயறஞ்சினியின் நூல் பற்றிய ஒரு பார்வை

pean.jpgஓர் ஆய்வு நூலாக பரிணமித்துள்ள இந்நூலானது பெண்நிலைவாத நோக்கு நிலையிலிருந்து ஈழத்துத் தமிழ் அரங்கில் பெண்களின் பங்களிப்பையும், அவர்களின் நிலையினையும் ஆராய விழைகிறது. ஐந்து இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் நூலாசிரியர் வரலாற்றுப் பின்புல விவரணங்களுடன் ஆரம்பித்து எதிர்காலச் சாத்தியப்பாடுகளென எதிர்வு கூறப்படும் விடயங்கள் வரை, தனது கருத்தாக்கத்தைக் கட்டியெழுப்ப விழைகிறார்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

பார்த்தவரின் மனப்பிரமையில் இருந்து…..

greed_couple.jpgபேராசை

GREED

ஆனந்த்

அண்மையில், (25, ஏப்ரல் 2004)  யாழ்ப்பாணத்தில் உள்ள நாவலர் மண்டபத்தில் பிரித்தானியாவின் கோல்ட் என்சோம்பிள் (Cold ensemble)  நிறுவனத்தினரின் கிறீட் (பேராசை) எனும் ஊம நாடகம் (Mime Play) மேடையேற்றப்பட்டது. சிறுவர் பாதுகாப்பு நிறுவனம், பிறிட்டிஷ் கவுன்சில் போன்ற அமைப்புகள் இந்நாடகத்தை யாழ்ப்பாணத்தில் மேடையேற்றுவதற்கான ஒழுங்குகளை மேற்கொணடிருந்தன.

நாடகத்தில் இரண்டு நடிகர்கள் மட்டும் மேடையை ஆக்கிரமித்து நின்றார்கள். மிகத் தேர்ச்சி பெற்ற நடிகர்களான அந்த இருவரும் ஒரு சில பொருட்களுடன் மேடையில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

பெண்கள் மீதான அழுத்தங்களுக்கு எதிரான உணர்வெழுச்சியே ‘கல்லின் கசிவு’

நாடகம் பற்றிய கருத்தியல் பார்வை

kallin-kasivu.jpg

- இலக்கியா

அரங்கின் பல்பரிமாணப் பிரயோகப்போக்கின்படி அது சாதிக்க விளைவன பற்பல. புரையோடிக்கிடக்கின்ற சமூக நியமங்களுள் (Social nomes)  அரங்கு தன்னகத்தே எல்லைப்படுத்தப்பட்ட, புலனாகா நியமங்களைத் தாங்கி வந்திருக்கின்றது. ஈழத்தைப் பொறுத்தமட்டில் கூத்துப் பாரம்பரியம், பின்வந்த இசை நாடகப் பாரம்பரியம் என்பனவெல்லாம் அரங்கப் பாரம்பரியங்களாகக் கொள்ளப்பட்ட வேளைகளில் இவ்வளிக்கைகளில் பெண்கள் பங்கு பற்றுதல் என்பது இயலாத அல்லது விரும்பப்படாத ஒன்றாகவே இருந்திருக்கின்றது. இவை மீறப்பட்ட சந்தர்ப்பங்களிலும் அவை புறநடைகளாகவே (Exception) கருதப்பட்டிருக்கின்றன. எனினும் மேற்குலக அரங்கின் தாக்கங்கள் இங்கு எட்டப்பட்ட வேளைகளில், குறிப்பாக ‘நவீன நாடகங்கள்’ என மக்களால் குறிப்பிடப்பட்டு வந்த அரங்க அளிக்கைகள் ஈழத்தில் தலைகாட்டத் தொடங்கிய வேளைகளில் பெண்களும் பாத்திரமேற்றல் எனும் நிலைமை மெல்ல அங்கீகாரம் பெறத்தொடங்கியது எனலாம். ஏழுபதுகளின் பின்பகுதி, எண்பதுகள் என்பவற்றில் இந்நிலைமையைப் பெரும்பாலும் அவதானித்திருக்கலாம். யதார்த்தவாத நாடக வடிவம் (Realistic style)  அதன் கட்டமைப்பு வடிவம் என்பன இதற்கான சந்தர்ப்பத்தை அளித்திருக்கலாம். உண்மையில் ஒரு மத்தியதர வர்க்கத்தின் அரங்கியல் ஈடுபாடு என்பது இதுவரை இருந்து வந்த அரங்க மரபுகளைத் தாண்டி முன்னேற வழிவகுத்தது என்றே கருதவேண்டும்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

மக்கள் மௌனமாகச் சொல்லியதை ‘முடக்கம்’ மேடையேறிக் கூறிவிட்டது.

தேவானந்தின் நாடகம்
பற்றிய ஓர் அலசல்

நீடித்து வந்த யுத்தம் ஒரு கணம் ஓய்ந்துள்ளது. ஆனால் குண்டுகள் துளைக்காத மனித வடுக்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இழக்கப்பட்ட பெறுமதிகள் எவையெனப் புரியாமல் திணிக்கப்பட்டு வருகின்ற இன்னொரு வாழ்க்கைமுறை! இந்த இடைவெளிக்குள், உள்நுழைந்து, உருப்படியற்ற திட்டங்களை நிறைவேற்ற எத்தனையோ முதலீட்டாளர்கள்.  முடியவில்லை மக்களால் திரும்பிப்பார்ப்பதற்கு. எங்கோ ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள்! ஆனால் எங்கிருந்தோ வருவார்கள். எம் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வாளர்கள், திட்டங்களை அமுல்படுத்துவார்கள்.  கோடிக்கணக்கான டொலர்கள் அள்ளியிறைக்கப்படும். ஆனால் மக்கள் வாழ்வு? “பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்”  என மக்களின் அவலம் தொடர்கதைதான்.  வறுமைக் கோட்டைக் கீறியவர்கள் இன்னமும் அதனை அழிக்க விரும்பாத பேரவலம்.

இவையொரு புறமிருக்க, படைநகர்த்தலின்றி முற்றுகைகள் இன்றி, கைதுகள் காணமால் போதல்கள் இன்றி - இன்னுமொரு யுத்த அவலம் தொடர்கிறது. அது புதைக்கப்பட்ட மிதிவெடிகளால் தொடர்ந்து வருகின்ற இழப்புக்கள்.  இதனால் யாருக்கென்ன கவலை.? பாதிக்கப்படுவது வறுமைக் கோடு கீறப்பட்டுவிட்ட குடும்பங்கள்தானே. யுத்தம் என்றாலும் அதன் வீச்சு இவர்களைத்தான் தாக்கும். இப்போ மட்டுமென்ன தப்பிவிட்டார்களா!  பொருளாதாரத் தடையில் யாழ் குடாநாடு முற்றுகையில் கிடந்த போது விறகு கட்டியிழுத்த துவிச்சக்கர வண்டிகள் என்ன ஓய்ந்து விட்டனவா? இன்னமும் அவர்களின் வாழ்க்கை அப்படியேதான்.  ஆனால் கோடிக்கணக்கில் செலவு செய்யும் திட்டங்கள் எல்லாம் இவர்கள் மீதான தேவைப் பகுப்பாய்வின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன.  அவற்றிற்கு என்ன நடந்து விட்டது?

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »