உண்மையை சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு ஆணித்தரமாக வெளியிடுவது ‘நடிப்பு’

பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி)அவர்கள் 24.05.2005 அன்று கூத்தரங்கிற்காக வழங்கிய கருத்துரை ஒலிப்பதிவு செய்யப்பட்டு எழுத்துருவாக்கப்பட்டுத் தரப்படுகிறது.

நான் பலகாலமாக ஷேக்ஸ்பியரது வசனத்தைப் பற்றிச் சிந்திப்பதுண்டு. அதாவது, “உலகம் ஒரு நாடக மேடை. மக்கள் எல்லோரும் நடிகர்கள்.” போகப்போக அதனது உண்மை எனக்கு இன்னும் அதிகமாகத் தெரியவந்தது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

செய்தி இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

நடிப்பு – அது என்ன பண்டம்?

shokkan.jpg- சொக்கன்

மகாவித்துவான் வீரமணி ஐயர் மறைந்து ஓராண்டு ஆகிறது. அவருடன் நான்கு ஆண்டுகள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராக இருந்தவன் நான்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

செய்தி இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

கூத்தாடிகளும் ஆட்டுவிப்பவர்களும் எனக்கொரு விடை தாருங்கள்

sivanathan.jpgபேராசிரியர் ப.சிவநாதன்

தலைவர், பொருளியல்துறை
யாழ். பல்கலைக்கழகம்

அண்ட வெளியையும் அதில் உலாவரும் முழுநிலாவையும் மின்னும் நட்சத்திரங்களையும் நாம் நேரே பார்க்கும்போதுள்ள பரவசத்தை, பிரதி பண்ணித்தரும்  புகைப்படங்களோ தொடர் சினிமாச் சித்திரங்களோ ஏற்படுத்துவதில்லை. அதேவிதமாக, மனிதம் எதிர்கொள்ளும் சவால்களையும் நெருக்கடிகளையும் துன்பங்களையும் நாம் நேரில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

செய்தி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

வழக்கிறந்து வரும் நாட்டார் அரங்கு!

visakaruban.jpgகலாநிதி கி.விசாகரூபன், சிரேஷ்ட விரிவுரையாளர்
தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம்

ஈழத் தமிழர்களின் தேசியக்கலை வடிவமான நாட்டுக் கூத்து இன்று வேகமாக வழக்கிறந்து வருவதனைப் பார்க்கக் கூடியதாக உள்ளது. நவீன நாடகங்களின் செல்வாக்கு, பரபரப்பான இன்றைய வாழ்க்கைமுறை, எமது பாரம்பரியக் கலைகளின் கையளிப்புக் குறைபாடுகள் எனப் பல்வேறு காரணங்களை இதற்குக் கூறலாம். நாட்டார் அரங்கத்துறையில் பயிற்சியுள்ள அண்ணாவிமார் சிலர் ஆங்காங்கே உயிர்வாழ்ந்து வருகின்றபோதிலும், அவர்களை நாடிச்சென்று கூத்துப்பழகுபவர் தொகை குறைவடைந்தே வருகிறது. இன்றைய சூழலில் கூத்து ஒன்றை ‘இணக்குவது’ என்பது பெரும்பாடாகவே உள்ளது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

செய்தி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . மறுமொழி இல்லை »

யாம்பெரிது வல்லேமே யென்று வலிமை சொல வேண்டாம் காண்…

sivalinga-rajah.jpgகூத்தரங்கத்திற்கு ஒரு செய்தி வேண்டும் என்று நண்பர்கள் என்னைக் கேட்ட பொழுது, சாணக்கிய நீதிவெண்பாவில் உள்ள பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. அப்பாடல் பின்வருமாறு:

“ஆடையால் மற்றை அணியால் அலங்கரித்துப்
பீடடைய வந்த பெருமூடன் - நீடவையில்
எத்துணையும் பேசாது அடங்கி இருப்பரேல்
அத்துணையும் மேன்மை அவர்க்கு”

‘பேசாது அடங்கி இருக்க’ இவர்கள் விடுவதாயில்லை. பட்டம், பதவி என்கின்ற ஆடையும் அணியும் என்னைப்  ‘பெருமூடன்’ என்று காட்டாமல் மறைக்க முயன்றும் தோற்றுவிட்டதை உணர்கின்றேன். சாதிப்பவர்கள், அடங்கி  இருக்கப் போதிப்பவர்கள் ‘சன்னதம்’ ஆடும் நிலை இன்று எல்லாத் துறைகளிலும் ‘தொற்றி’ விட்டது. நாடகம் இதிலிருந்து எவ்வாறு தப்பிக்கொள்ள முடியும்.

பூசாரிகள் ‘பார்வைபார்த்து’  ‘குழைக்கடித்து’  ‘விபூதி’ போட்டு இச் சன்னதத்தை நிறுவத்துவதற்குப் பதிலாக, உடுக்கடித்து, உச்சாடனப்படுத்தி, உருவேற்றிச் சன்னதத்தை உச்சமாக ஆட்டுவிப்பதையும் அவதானிக்க முடிகின்றது. ‘உரு’வேறியவர்கள் ‘கோழிகொண்டா’,  ‘ஆடு கொண்டா’ என்று கூச்சல் போட்டால் அப்‘பாவிகளால்’ என்ன செய்ய முடியும். எனக்கும் கூத்து, நாடகத்திற்கும் உள்ள ஒரே உறவு இவற்றை என்னளவில் இரசிப்பவன் என்பதுதான். எனது அறிவு, அனுபவம், உணர்வு, விளக்கம் இவையே எனது அளவு கோல்கள். இவற்றிலிருந்து விடுபடமுடியாது. விடுபட விருப்பமும் இல்லை.

‘ஆமை ஆயிரம் முட்டைகளை இட்டுவிட்டு அடங்கி இருக்க கோழி ஒரு முட்டையை இட்டு விட்டுக் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றது’ என்ற பழமொழியும் என் நினைவில் வருகின்றது.

‘வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - யாம்பெரிது
வல்லேமே யென்று வலிமை சொல வேண்டாம் காண்
எல்லோர்க்கும் ஒவ்வொன்று எளிது’
இதுவே கூத்துரங்கத்தினூடு நான் சொல்லும் செய்தியாகும்.

செய்தி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

பல்லுயிர் ஓம்புதல்

shanmugalingam-copy.jpg

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் எவ்வாறு முக்கியமாகக் கருதப்படுகிறதோ அந்தவாறு மனிதர் அறிவை, சிந்தனையை பகிர்ந்துகொள்ளச் சித்தமாக இருப்பது மிக இன்றியமையாத ஒன்றாகும்.

நீர் புகவொண்ணா அறைகளுக்குள் (water tight Compartment)  எம்மை இட்டுக் கொண்டு நாம் காண்பதுவே உலகம் என இருப்பது மனிதருக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் ஒவ்வாத ஒன்று.

கருத்துப்பரிமாற்றம் கருத்து சுதந்திரத்தின் வாய்க்காலாக அமைகிறது. இந்த வாய்க்கால் வழியே நாம் அனைவரும் எமது எண்ணங்களை செயற்பாடுகளை மடை திறந்து விடுவோமாக.

கருத்துக்களின் சங்கமம் கலைஞர்களுக்கு மட்டுமல்ல அனைத்துத் துறையினருக்கும் அவசியம்.

ஏகதத்துவவாதம் என்றும் இடும்பை தரும்.

- கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம்

செய்தி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »