இசைப்பார் இல்லாத இராகம்!

- பேராசிரியர் சி.மௌனகுரு

mavu-4.jpg

அமரர் நா.சுந்தரலிங்கம் அவர்களின் நினைவுரை நிகழ்வு 21-03-2005 அன்று நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற போது பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் ஆற்றிய உரை. அரங்கியல் மாணவர்களின் தேவை கருதி இங்கே பிரசுரிக்கிறோம்.

இப்போது இந்த தலைமுறையைக் காண மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. நான் இங்கு வரவேண்டிய சந்தர்ப்பம் வந்தபோது நண்பர் தேவானந் அவர்கள் தொடர்பு கொண்டார். இப்பிடி ஒரு கூட்டத்தை நிகழ்த்தலாம் என அவர் கேட்டுக் கொண்டார். நான் அவருக்கு கொடுத்த தலைப்பு ‘இசைப்பார் இல்லாத இராகம்’ இசைப்பார் இல்லாத படியால் அந்த இராகம் இல்லாது போய்விடும். என்.சுந்தரலிங்கம் ஒரு மிகப் பெரிய அற்புதமான இராகம். ஆனால் இசைப்பார் இல்லாத இராகம். அவர் மரபை, தன்மையை, துறையை ஏற்றுக் கொண்டு போகின்ற ஒரு தலைமுறை உருவாகவில்லை, உருவாக வழிகோலவில்லை என்பதனால் தான் நான் அவரை பற்றி இசைப்பார் இல்லாத இராகம் என்கிற தலையங்கத்தில் பேசலாம் என்று நினைக்கிறேன். அவர் மறைந்துவிட்டார். அவர் எங்களிடம் விட்டுச் சென்ற எழுத்துக்கள்தான் மிஞ்சியிருக்கின்றன.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கட்டுரை இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

நடிகனுக்கான பயிற்சி

- ந.முத்துசாமி (கூத்துப்பட்டறை, தமிழ்நாடு)

கூத்துப்பட்டறையில் நடிகன் தொடர்ந்து கற்றலில் வைக்கப்படுகிறான். கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இது நிர்பந்தம் இல்லாத தன்னிச்சையான கற்றல். கற்றலில் வைத்தல் என்பதில் நிர்பந்தம் இருக்கிறது. இது நடிகனின் சுதந்திரத்துக்கு விரோதமானது போலத் தோன்றுகிறது. இது சோம்பேறித்தனத்துக்கு எதிரானது. வேண்டுவதைச் சாதிக்க வேண்டுமென்றால் இந்த நிர்பந்தம் தவிர்க்க முடியாதது. படைப்பாற்றல், திறமை என்ற இரண்டினுள் குறைந்தபட்சம் இதனால் நடிகன் திறமையையாவது பெறுகிறான். உடல்வலி, மனவலி இரண்டுக்கும் அப்பால் படைப்பாற்றல் செயல்படுகிறபோது அவன் உணர்வான் இந்தத் திறமை எப்படிக் கை கொடுக்கிறது என்பதை. எனவே, ஒரு விதமான நிர்பந்தத்துடனேயே கூத்துப்பட்டறையில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இது ஒரு பெரிய சோதனை முயற்சி.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கட்டுரை இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

இறந்து கொண்டிருக்கிறது இசை நாடகம்

இசை நாடகமும் ஈழத்தின்
கர்நாடக இசை வரலாறு

       sinnamani.jpgsinnamani-2.jpg

ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் தமிழக மக்களின் கலை கலாசாரம் பண்பாடுகளுடன் ஒத்த வாழ்க்கை முறையில் வாழ்பவர்களாயினும், தமிழகத்தில் தோன்றி பெரு விருட்சமாக வியாபித்து நிற்கும் கர்நாடக இசையானது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னரே ஈழத்தில் பரவலாயிற்று. மும்மூர்த்திகள் முதலான இசை வாக்கேயக்காரர்கள் பல நூற்றாண்டுகளிற்கு முன்பே கர்நாடக இசையிலக்கணங்களையும் இசை உருப்படிகளையும் தெய்வீக இசைஞான நுண்ணறிவால் உருவாக்கி இவ்வுலக மாந்தரிடம் தந்துள்ளனர். இவர்கள் இயற்றிய கீர்தனைகளே கர்நாடக இசையை இன்றும் உயிர் வாழச்செய்து கொண்டிருக்கின்றன. உலக இசைகளில் மிக நுட்பமானது கர்நாடக இசையே. இவ்விசையானது தென்னிந்தியாவில் தோன்றி வளர்ந்து இன்று உலகமெங்கும் வாழும் அனைத்து மனிதர்களாலும் விரும்பப்படும் ஒரு சிறந்த இசைக்கலையாகப் பரவி வளர்ச்சி பெற்று வருகின்றது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கட்டுரை இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

இந்திய அரங்கின் சமகாலப் போக்குகள்

- ஓர் அனுபவப் பகிர்வு

செ.சுந்தரேஸ்

இந்தியச் சமூகம் பற்றிய புரிதல் என்பது மிகவும் கடினமான விடயமாகும். அது தன்னகத்தே பல இனங்களினையும் மதங்களினையும் பண்பாடு, கலாசாரம், சாதித்துவ அடையாளங்களினையும் அரசியல் நிலைப்பாடுகளினையும் கொண்டது. இவற்றுக்கிடையே பல ஒன்றிணைந்த பண்பினையும் வேறுபட்ட அம்சங்களினையும் கொண்டிருப்பதன் பயனாகவே இந்திய சமூகம் பற்றிய புரிதல் கடினமாகப்படுகின்றது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கட்டுரை இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

அரங்கினூடான உளசமூக மேம்பாட்டுச் செயற்பாடுகள்

சுனாமி பேரலைத் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் யாழ். மாவட்டத்தில் தற்போது 17 இடைத்தங்கல் முகாம்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் தங்கியுள்ள மக்களின் உளநெருக்கீட்டை தீர்ப்பதற்கான செயற்றிட்டங்கள் நடைபெறுகின்றன. முக்கியமாக சிறுவர்களின் உளநெருக்கீட்டைத் தீர்ப்பதற்கு அரங்கச் செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கட்டுரை இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

பாரம்பரிய கலை மேம்பாட்டுக் கழகத்தின் அழகெழல்!

paarampariyam_b.jpg

கூத்தன்

யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்ற பாரம்பரிய கலை மேம்பாட்டுக் கழகம் கடந்த பத்தாண்டுகளாக செயற்பட்டு வருகின்றது. இக்கழகத்தின் செயற்பாடு யாழப்பாணத்தில் காணப்படுகின்ற பாரம்பரிய அரங்குகளின் வாழ்வுக்கு ஓரளவேனும் உந்து சக்தியாக அமைகின்றதை இனங்காண முடிகின்றது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கட்டுரை இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

இசை நாடகம் : அது வந்தவாறும் இருக்கின்றவாறும்

- குழந்தை ம. சண்முகலிங்கம்

esai-nadakam_b.jpgஇலங்கைத் தமிழர், தம் பாரம்பரிய நாடக வகைகளுள் ஒன்றாக ‘இசை நாடகம்’ ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பல ஆண்டுகளும் ஆகிவிட்டன. - கவனிக்கவும் - பல ஆண்டுகளேயல்லாமல், பல நூற்றாண்டுகளோ, ஒரு சில நூற்றாண்டுகளோவல்ல. இதனால், பண்டுதொட்டு அல்லது நீண்ட நெடுங்காலமாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்ததாக இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பை, வரைவிலக்கண விதியை ‘இசை நாடகம்’ நிறைவு செய்யவில்லை.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கட்டுரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

சிறுவர் அரங்கு ஊடாக சமுதாய மேம்பாடு: மாதிரிச் செயற்திட்டம்.

- இலக்கியா

நாடகம் வெறுமனே கண்டுகளிப்பதற்குரிய ஒன்று என்பதற்கு அப்பால், நாடகத்துறை சார்ந்த செயற்பாடுகள் விரிவடையத் தொடங்கியுள்ளன. மேற்குல நாடகத்துறை சார்ந்த அனுபவங்களும், ஈழத்தில் நாடகமும் அரங்கியலும் கற்கை நெறிக்குரியதாக்கப்பட்ட பின்பும் அரங்குசார் செயற்பாடுகளின் மூலம் - மனிதம், சமூகம், தேசம் பற்றிய மாற்றம், மேம்பாடுகள் கருதிய வேலைத் திட்டங்கள் நடைபெறுவது இயல்பான ஒன்றாகிவிட்டது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கட்டுரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 1 மறுமொழி »

அரங்க விளையாட்டுக்களும் சிறுவர் அரங்கும்

சிறார்களிடையே இறுக்கமான நிலையினைக் களைவதற்கும் இலகுவான அல்லது இலேசானதும், சுதந்திரமானதுமான மனநிலையை சிறார்களிடையே ஏற்படுத்துவதற்கும் அரங்க விளையாட்டுக்கள் மிக உகந்தவை. இவ்வகையில், இவ்விளையாட்டுக்கள் மாணவர்களின் தேர்ச்சியினை அதிகரிக்கக்கூடிய தயார்நிலையை மாணவர்களுக்கு ஏற்படுத்த உதவுகின்றது எனலாம். அதுமட்டுமல்லாது உடனடியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக்கூடிய செயற்திறனையும் ஏற்படுத்துகின்றது. மாணவர்களிடையே பிணைப்பையும், நற்பண்புகளையும், முதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது. ஒன்றிணைந்து செயற்படுவதற்கும், அழகியல் ஆற்றல்களை வளர்த்தெடுப்பதற்கும், எல்லாவற்றிற்கும் மேலாகப் பிள்ளையை, பிள்ளை போல் செயற்பட வைப்பதற்கும் ஆசிரியர்களுக்கு உதவுகின்றது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கட்டுரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . மறுமொழி இல்லை »

சிறுவர் அரங்கு, ஆரம்பக்கல்வி கற்றல் செயற்பாட்டுக்கான வழிகாட்டி!

மாகாணக் கல்வித் திணைக்களம் ஆண்டு தோறும் சிறுவர் நாடக விழாக்களைக் கல்வி வலய ரீதியாகக் கொண்டாடி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் மே, ஜூன் மாதங்களில் சிறுவர் நாடகங்களை தயாரிப்பதில் ஒரு சில ஆரம்பப் பாடசாலைகள் முனைப்பாக ஈடுபடுவதைக் காணமுடியும்.

தற்போது, 2004ம் ஆண்டு சிறுவர் நாடக விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இவ்வருடம் கூடுதலான பாடசாலைகள் சிறுவர் நாடக விழாவில் பங்கு பற்றுவதாக ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்களே, சிறுவர் நாடக விழாக்களை நடத்துவதற்குப் பொறுப்புடையவர்கள். ‘கூத்தரங்கம்’ சார்பாக வலிகாமம், வடமராட்சி, யாழ்ப்பாணக் கல்வி வலயங்களைச் சேர்ந்த உதவிக்கல்விப் பணிப்பாளர்களை அணுகி சிறுவர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கட்டுரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . மறுமொழி இல்லை »