கூத்தரங்கம் கடந்த மார்ச் - 2005 உடன் தனது ஓராண்டைப் பூர்த்திசெய்துள்ளது. இந்த ஓராண்டில் 06 இதழ்களை வெளியிட்டுள்ளோம். இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை கூத்தரங்கத்தை வெளியிடுவது என்று திட்டமிட்டிருந்தோம். அதன்படி குறித்த காலத்தில் இதழ்களை வெளியிட முடிந்தது. இதற்கு நாடகமும் அரங்கியலும் துறை மாணவர்கள், ஆர்வலர்கள், புலமையாளர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் மிகுந்த ஆதரவு தந்துதவினார்கள்.
பெஞ்சமின் ஐயா. நாடகத் துறை சார்ந்தோரிற்கு இவரைத் தெரியாதிருக்க
முடியாது. கூத்து, இசைநாடகம், இலக்கிய நாடகம், நவீன நாடகம், நாட்டிய நாடகங்கள் என பெஞ்சமின் ஐயாவின் தொடர்புகள் விரிவுபட்டன.
வேடஉடைகள், ஒப்பனைகள், அரங்க அமைப்புக்கள், காட்சித்திரைகள், தட்டிகள் என அரங்கத்துறைக்கான இவரது பங்களிப்பு நீண்டகாலமாகவே இருந்து வந்திருக்கின்றது. 90வயதினைத் தாண்டி விட்ட இவர் தனது இளந்தாரிக் காலத்திலேயே மேற்குறித்த விடயங்களில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார்.
தனது 90வது வயதில் பெரும் பகுதியை அரங்கத்துறை சார்ந்த விடயங்களில் ஈடுபடுத்திய ஒப்பனைக் கலைஞரான பெஞ்சமின் ஐயாவை கூத்தரங்கின் சார்பில் சந்தித்தோம். 25ம் ஆண்டளவில் இருந்து தனது நாடகத்துறை சார்ந்த அனுபவங்களை மீட்டு எம்முடன் கதைப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார் பெஞ்சமின் ஐயா.

(மேலும் படங்கள் கலரியில்)
- ஆனந்த்
ஸ்பெயின் நாட்டின் மிகப் பரவலாக அறியப்பட்ட நாடகக் கலைஞர் வெட்றிகோ கார்ஷியா லோர்காவின் Blood wedding நாடகம் சிங்களத்தில் “சந்த லங்க மரணய” (நிலவருகே மரணம்) என்ற பெயரில் 23.04.2005 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் மேடையேற்றப்பட்டது.
“நிலவருகே மரணம்” நாடகம் 2005ம் ஆண்டு தேசியநாடக விழாவில் வருடத்தின் சிறந்த நாடகம் என்ற விருதையும் சிறந்த நெறியாள்கை, சிறந்த தழுவல் எழுத்துரு, சிறந்த தற்புதுமையான இசையமைப்பு, சிறந்த நடன அமைப்பு, சிறந்த துணை நடிகை, சிறந்த ஒப்பனை வடிவமைப்பு போன்ற விருதுகளையும் பெற்றுக் கொண்டது. இந்நாடகத்தை நெறியாள்கை செய்திருப்பவர் ஆங்கில ஆசிரியராகக் கடமைபுரியும் கௌஷல்யா பெர்னாண்டோ. இவர் சிங்கள மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் திரைப் படங்களிலும் நடித்த நிறைந்த அனுபவத்தைப் கொண்டுள்ளவர்.
நேர்கண்டவர் : தே.தேவானந்த்

கேள்வி:- ஈழத்தமிழ் அரங்க வரலாற்றிற்கு சாட்சியாக இருப்பவர்களில்; நீங்களும் ஒருவர். உங்களுக்கும் ஈழத் தமிழ் அரங்கத் துறைக்கும் உள்ள ஈடுபாடு பற்றிக் கூறுங்கள்?
பதில்:- எனக்கு அதிஷ்டவசமாகவோ அல்லது துரதிஷ்டவசமாகவோ பல துறைகளில் ஈடுபாடு இருந்தது. அதிலும் நாடகத்துறையில் அதன் ஒரு பிரிவில் மட்டும்தான் எனக்கு ஈடுபாடு என்று சொல்லமுடியாது. நாடகத்துறையில் எனக்கு ஏற்பட்ட ஈடுபாடு, அல்லது அதற்குள் புகுந்தது, ஈர்க்கப்பட்டது பற்றிக் கூறத்தொடங்குவது இந்தப் பேட்டியைச் சிக்கலானதாகவோ அல்லது சிக்கலானதிலும் பார்க்க ஒரு நீண்ட விடயமாகவோ ஆக்கிவிடும். எனவே நான் இதனை இவ்வாறு எடுத்துக் கூறலாம் என்று கருதுகிறேன்.
அனுபவப் பகிர்வு
- சா.சிவயோகன்

மனித நாகரீகத்தின் தோற்றத்தோடு கலைப்படைப்புக்களின் வரலாறும் சங்கமிக்கின்றது. ஒரு உயிரியினுடைய அடிப்படைத் தேவைகளுக்கு அப்பாலும் மனித மூளையினது விருத்தி, வேறு பல தேவைகளை வேண்டி நிற்கையில், இவற்றை நிறைவேற்றித் திருப்தி காணவேண்டிய நிலைமையின் ஒரு அம்சமாகவே கலைகள் உருவாகியிருக்க வேண்டும். எழுந்தமானமான வெளிப்பாடும், ரசனையும், திருப்தியும் மெல்ல மெல்ல ஏதோவொரு ஒழுங்கமைவுக்குள் வரத்தொடங்க, அவை தனித்தனியாக அடையாளங் கண்டு வேறுபடுத்தக் கூடிய தன்மைகளையுடைய வெவ்வேறு கலைப்படைப்புகள் ஆகுகின்றன.
- இ.வரதர் (ஆணையூர்)
சென்ற பங்குனி மாதம் 27ம் திகதி இளவாலையில் சீந்திப்பந்தல் எனும் இடத்தில் ‘மனம்போல் மாங்கல்யம்’ எனும் நாட்டுக்கூத்து (தென்மோடி) மேடையேற்றப்பட்டது. இந்த நாடகத்தின் மூலக்கரு ஆங்கிலக் கவிஞன் ஷேக்ஸ்பியரின் சிந்தனையில் உருவாகியது.
யாழ் மண்ணில் இந்நாடகத்தை ஒப்புநோக்கிப் பாடியவர் மறைந்த கணித ஆசான் ஆசீர்வாதம். துணைநின்றவர் நாட்டுக்கூத்துச் சக்கரவர்த்தி அண்ணாவியார் திருப்புகுந்தார் யோசப். அன்று இந்நாட்டுக் கூத்தில் பங்குபற்றிய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தில் பிரபல்யாமான அண்ணாவிமார்கள்.