முடிந்தும் முடியாதவற்றைப் பேசிய அரங்கு

trro_drama_11.jpg- இலக்கியா

அரங்கு பேசவேண்டியவற்றைப் பேசவேண்டும். பேச வேண்டியவை மறை பொருளாகக் கிடக்கும், மௌனமாகக் கிடக்கும். அவை புலணுணர்வைத் தட்டும்போதும் அடக்குமுறைகள், அச்ச நிலைமைகளால் பேசாப் பொருட்கள் ஆகிவிடுகின்றன. 1995இன் பின் ஏற்பட்ட அரசியல், இராணுவ மாறுதல்கள் குடாநாட்டின் அரங்கப் பயணத்தில் மிகுந்த தாக்கம் செலுத்தியிருந்தன. அரங்கு புரட்சிக்கான ஊக்கியெனக் கருதியதாலோ என்னவோ, அதன் மீதான இராணுவப் பார்வை கடுமையானதாகவே இருந்தது. அது இன்றுவரை அரங்கியலாளருக்கான அச்ச நிலைமையை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

விடியலின் விம்பங்கள்

சமாதானம் நின்று நிலைக்கவேண்டும் என்பதற்காகப் பல தரப்பினரும் பல்வேறு வழிகளில் முயற்சியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சமாதானத்தில் ஏற்படுகின்ற சிறு சீறலைக் கண்டு ‘எல்லாம் உடைந்து விடும்’ எனும் அச்சத்தில் மக்கள் வாழந்து கொண்டிருக்கிறார்கள்.

எம்மை அடக்கி ஒடுக்கி ஆள நினைக்கிற அதிகார சக்திகளிற்கு எதிராகப் போராடும் நாம், எமக்குள்ளேயே நிலவும் சின்னச் சின்னப் பிரச்சினைகள், குரோதங்கள், துவேசங்கள், மனக்கசப்புக்களைக் களைந்தெறிந்துவிட்டு ‘மன இருள்’ அகற்றி அணிதிரள்வோம் என வேண்டுதல் செய்தவாறு வவுனியா அரங்காலயா பண்பாட்டுக் குழுவினர் குடாநாட்டிற்கு 19.12.2004 அன்று வருகை தந்தனர்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சொற்சித்திரம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

இறந்து கொண்டிருக்கிறது இசை நாடகம்

இசை நாடகமும் ஈழத்தின்
கர்நாடக இசை வரலாறு

       sinnamani.jpgsinnamani-2.jpg

ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் தமிழக மக்களின் கலை கலாசாரம் பண்பாடுகளுடன் ஒத்த வாழ்க்கை முறையில் வாழ்பவர்களாயினும், தமிழகத்தில் தோன்றி பெரு விருட்சமாக வியாபித்து நிற்கும் கர்நாடக இசையானது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னரே ஈழத்தில் பரவலாயிற்று. மும்மூர்த்திகள் முதலான இசை வாக்கேயக்காரர்கள் பல நூற்றாண்டுகளிற்கு முன்பே கர்நாடக இசையிலக்கணங்களையும் இசை உருப்படிகளையும் தெய்வீக இசைஞான நுண்ணறிவால் உருவாக்கி இவ்வுலக மாந்தரிடம் தந்துள்ளனர். இவர்கள் இயற்றிய கீர்தனைகளே கர்நாடக இசையை இன்றும் உயிர் வாழச்செய்து கொண்டிருக்கின்றன. உலக இசைகளில் மிக நுட்பமானது கர்நாடக இசையே. இவ்விசையானது தென்னிந்தியாவில் தோன்றி வளர்ந்து இன்று உலகமெங்கும் வாழும் அனைத்து மனிதர்களாலும் விரும்பப்படும் ஒரு சிறந்த இசைக்கலையாகப் பரவி வளர்ச்சி பெற்று வருகின்றது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கட்டுரை இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

இந்திய அரங்கின் சமகாலப் போக்குகள்

- ஓர் அனுபவப் பகிர்வு

செ.சுந்தரேஸ்

இந்தியச் சமூகம் பற்றிய புரிதல் என்பது மிகவும் கடினமான விடயமாகும். அது தன்னகத்தே பல இனங்களினையும் மதங்களினையும் பண்பாடு, கலாசாரம், சாதித்துவ அடையாளங்களினையும் அரசியல் நிலைப்பாடுகளினையும் கொண்டது. இவற்றுக்கிடையே பல ஒன்றிணைந்த பண்பினையும் வேறுபட்ட அம்சங்களினையும் கொண்டிருப்பதன் பயனாகவே இந்திய சமூகம் பற்றிய புரிதல் கடினமாகப்படுகின்றது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கட்டுரை இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

தீனக்குழந்தைகள் நாடகம்: ஒரு பார்வை

இ.விஜி

சமூகத்தில் இன்று அரங்கு பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. போர்க்காலத்தில் போரின் உடனடித் தேவைகளைப் பேசிய அரங்கு போர் சற்று ஓய்ந்திருக்கும் வேளையில் போரினால் பாதிக்கப்பட்ட மனிதமனங்களைப் ஆற்றுப்படுத்த முற்படுகின்றது. போரினால் நாம் எதிர்கொண்ட, எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகளை அரங்கு பேசி வருகின்றது. அந்த வகையில் தே.தேவானந்தின் ‘நெஞ்சுறுத்தும் கானல்’, ‘இடர்கள் கெடுக’, ‘முடக்கம்’ போன்ற மிதிவெடி விழிப்புணர்வு நாடகங்கள் கடந்த ஆண்டுகளில் பாடசாலைகளில் மேடையேற்றப்பட்டன. அந்நாடகங்கள் பெரும்பாலும் மதிவெடியினால் ஏற்படும் பாதிப்புக்களையும் அப்பாதிப்புக்கு உள்ளானவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும் பாதிப்புக்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிகளையும் கூறுகின்றன. இப்பொழுது ‘தீனக் குழந்தைகள்’ எனும் நாடகம் தே.தேவானந்தினால் எழுதி, நெறியாள்கை செய்யப்பட்டு பாடசாலைகளில் மேடையேற்றப்படுகின்றது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆக்கம், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

ஜனகரலய – மக்கள் களரி

People’s Theatre

“நீண்ட காலமாகச் செயற்பட்டு வரும் அங்கீகரிக்கப்பட்ட நாடகக் கலை சமூகத்தில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மாத்திரம் செல்லக் கூடிய நிலையில் இன்று உள்ளது. இதனைப் புரிந்துகொண்ட நாங்கள் 1948ஆம் ஆண்டு தொடக்கம் வீதி நாடகக் குழுவாக நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று நாடகங்களை நிகழ்த்தினோம். இதன் மூலமாக உண்மையான அரங்கம் தொடர்பான அனுபவங்கள் சிலவற்றைப் பெற்றுக்கொண்டோம். அதனூடாக மக்களுக்கிடையில் நாடகங்களைப் போடும் விதிமுறை தொடர்பான எண்ணம் எம் மனதில் தோன்றியது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆக்கம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

நிர்வாணம்: நாடக விமர்சனம்

nirvanam-copy.jpgநிர்வாணம் நாடகம் ஜனகரளய என்ற பல் இன இளைஞர்கள் அடங்கிய நாடகக் குழுவினரால் 01.12.2004 அன்று செயல்திறன் அரங்க இயக்க அலுவலகத்தில் மேடையேற்றப்பட்டது.

சிங்கள நாடக உலகிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நன்கு அறியப்பட்டவர்களான பராக்கிரம நீரியல்ல, H.A.பெரேரா ஆகியோர் இந்நாடகத்தை தயாரித்துள்ளார்கள்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பலர் ‘கலைப் பாலங்கள்’ அமைத்திருக்கிறார்கள். ஒன்று கூடல்கள், கருத்தரங்குகள், பட்டறைகள், புத்தக வெளியீடுகள் என்பன நடத்திருக்கின்றன. ஒரு சில ஆங்கில நாடகங்கள் வடக்கில் மேடையேற்றப்பட்டுள்ளன. இடையிடையே திரைப்பட விழாக்களும்கூட நடந்திருக்கின்றன. இவை அனைத்தும் சமாதானத்திற்கு வலுச்சேர்க்கும் முயற்சிகள் என்று சொல்லப்படுகின்றன. இந்த வரிசையில் ஜனகரலய செயற்திட்டமும் இணைந்து கொள்கிறது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

கைகூப்பி அஞ்சலி

நாடக நெறியாளரும் ஆசிரியரும் தமிழ் மூதறிஞருமான கலாநிதி க.சொக்கலிங்கம் (சொக்கன்) அவர்கள் அமரத்துவம் அடைந்துள்ளார். தனது உடல் சுகயீனமான நிலையிலும் ஐந்தாவது கூத்தரங்கத்திற்காக ‘நடிப்பு: அது என்ன பாண்டம்’ என்ற தலைப்பில் கருத்துரை ஒன்றைத் தந்திருந்தார். இவருக்கு விடுதலைப் புலிகள் நாட்டுப்பற்றாளர் என்ற விருது வழங்கிக் கௌரவித்துள்ளனர். இவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தாருடன் நாமும் துயர் பகிர்கின்றோம். கைகூப்பி அஞ்சலி செலுத்துகின்றோம்.

ஆக்கம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

அரங்கினூடான உளசமூக மேம்பாட்டுச் செயற்பாடுகள்

சுனாமி பேரலைத் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் யாழ். மாவட்டத்தில் தற்போது 17 இடைத்தங்கல் முகாம்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் தங்கியுள்ள மக்களின் உளநெருக்கீட்டை தீர்ப்பதற்கான செயற்றிட்டங்கள் நடைபெறுகின்றன. முக்கியமாக சிறுவர்களின் உளநெருக்கீட்டைத் தீர்ப்பதற்கு அரங்கச் செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கட்டுரை இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

Editorial: பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவார்

டிசெம்பர் 26, 2004 சுனாமிப் பேரலை தமிழர் தாயகப் பிரதேசங்களைத் தாக்கி பல ஆயிரம் உயிர்களைப் பறித்துச் சென்றது. சொத்திழப்புக்களும் உயிரிழப்புக்களும் ஆழமான மனவடுக்களை உருவாக்கியுள்ளன.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பொது இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »