அன்ரன் பொன்ராஜ் அவர்களுடனான உரையாடல்.
தே.தேவானந்த்
யாழ்ப்பாணத்தில் 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாடக அரங்கக் கல்லூரியின் செயற்பாடு ஈழத் தமிழ் அரங்க வளர்ச்சியில் முக்கியமான திருப்புமுனையாக உணரப்படுகிறது. நாடக அரங்கக் கல்லூரி எழுபதுகளின் பிற்பகுதி எண்பதுகளின் முற்பகுதியில் நடத்திய தொடர் அரங்கக் களப்பயிற்சிகள் முக்கியமானவை. அவற்றில் பங்கு கொண்ட பலர் தொடர்ந்து அரங்கத்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள். திரு அன்ரன் பொன்ராஜ் அவர்கள் நாடக அரங்கக் கல்லூரி நடத்திய பயிற்சியில் பங்குபற்றியவர். இன்று சுவிஸ்ஸில் தொழில்முறை நடிகராக 1987ம் ஆண்டிலிருந்து செயற்பட்டுவருபவர்.
