மேடையில் எரிந்த பெண்

the-ritual_f.jpgThe returel

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் ‘த ரிச்சுவல்’ என்னும் ஆங்கில மொழியில் அமைந்த சுதேச நாடகம் 29, மே 2004, மாலை 4.30 மணிக்கு மேடையேற்றப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் துறையினர் நாடக மேடையேற்றத்திற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார்கள். ‘த ரிச்சுவல்’ நாடகத்தை எழுதி நெறியாள்கை செய்திருப்பவர் கொழும்பு பல்கலைக்கழக மொழியியல் துறை விரிவுரையாளர் ஜெகான் அலோசியஸ் (Jehan Aloysius)

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Editorial: தமிழ்ப் பாரம்பரிய அரங்குகளைக் காப்பவர் யார்?

ஈழத் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் காணப்படும் பாரம்பரிய அரங்குகளாக கூத்துக்களையும் இசை நாடகங்களையுமே கொள்ளலாம்.

இவ்வரங்குகளும் இன்று அழிந்து வருகின்றன. தமிழ்ப் பாரம்பரிய அரங்குகளைப் பேணுவதற்கான முயற்சிகளை ஐம்பதுகளில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் மேற்கொண்டிருந்தார். அவரது முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படாமை வேதனைக்குரியது. பேராசிரியரின் முயற்சிக்குப் பின் எந்தவிதமான ஆக்கபூர்வமான முயற்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவில்லை. மாறாக, அவரது முயற்சிகளை விமர்சிக்கும் போக்கே மேலோங்குகிறது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பொது இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

கூத்தாடிகளும் ஆட்டுவிப்பவர்களும் எனக்கொரு விடை தாருங்கள்

sivanathan.jpgபேராசிரியர் ப.சிவநாதன்

தலைவர், பொருளியல்துறை
யாழ். பல்கலைக்கழகம்

அண்ட வெளியையும் அதில் உலாவரும் முழுநிலாவையும் மின்னும் நட்சத்திரங்களையும் நாம் நேரே பார்க்கும்போதுள்ள பரவசத்தை, பிரதி பண்ணித்தரும்  புகைப்படங்களோ தொடர் சினிமாச் சித்திரங்களோ ஏற்படுத்துவதில்லை. அதேவிதமாக, மனிதம் எதிர்கொள்ளும் சவால்களையும் நெருக்கடிகளையும் துன்பங்களையும் நாம் நேரில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

செய்தி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

இசை நாடகம் : அது வந்தவாறும் இருக்கின்றவாறும்

- குழந்தை ம. சண்முகலிங்கம்

esai-nadakam_b.jpgஇலங்கைத் தமிழர், தம் பாரம்பரிய நாடக வகைகளுள் ஒன்றாக ‘இசை நாடகம்’ ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பல ஆண்டுகளும் ஆகிவிட்டன. - கவனிக்கவும் - பல ஆண்டுகளேயல்லாமல், பல நூற்றாண்டுகளோ, ஒரு சில நூற்றாண்டுகளோவல்ல. இதனால், பண்டுதொட்டு அல்லது நீண்ட நெடுங்காலமாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்ததாக இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பை, வரைவிலக்கண விதியை ‘இசை நாடகம்’ நிறைவு செய்யவில்லை.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கட்டுரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

சிறுவர் அரங்கு ஊடாக சமுதாய மேம்பாடு: மாதிரிச் செயற்திட்டம்.

- இலக்கியா

நாடகம் வெறுமனே கண்டுகளிப்பதற்குரிய ஒன்று என்பதற்கு அப்பால், நாடகத்துறை சார்ந்த செயற்பாடுகள் விரிவடையத் தொடங்கியுள்ளன. மேற்குல நாடகத்துறை சார்ந்த அனுபவங்களும், ஈழத்தில் நாடகமும் அரங்கியலும் கற்கை நெறிக்குரியதாக்கப்பட்ட பின்பும் அரங்குசார் செயற்பாடுகளின் மூலம் - மனிதம், சமூகம், தேசம் பற்றிய மாற்றம், மேம்பாடுகள் கருதிய வேலைத் திட்டங்கள் நடைபெறுவது இயல்பான ஒன்றாகிவிட்டது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கட்டுரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 1 மறுமொழி »

ஈழத்துத் தமிழ் அரங்கில் பெண்

திருமதி ஞா.ஜெயறஞ்சினியின் நூல் பற்றிய ஒரு பார்வை

pean.jpgஓர் ஆய்வு நூலாக பரிணமித்துள்ள இந்நூலானது பெண்நிலைவாத நோக்கு நிலையிலிருந்து ஈழத்துத் தமிழ் அரங்கில் பெண்களின் பங்களிப்பையும், அவர்களின் நிலையினையும் ஆராய விழைகிறது. ஐந்து இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் நூலாசிரியர் வரலாற்றுப் பின்புல விவரணங்களுடன் ஆரம்பித்து எதிர்காலச் சாத்தியப்பாடுகளென எதிர்வு கூறப்படும் விடயங்கள் வரை, தனது கருத்தாக்கத்தைக் கட்டியெழுப்ப விழைகிறார்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவுப் பேருரையும் அரங்க அளிக்கையும்

2004ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் நினைவுப் பேருரையும் அரங்க அளிக்கையும் நடைபெற்றன. இதனை பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவு அறக்கட்டளை ஒழுங்க செய்து நடத்தியிருந்தது.

குழந்தை ம.சண்முலிங்கம் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் நினைவுப் பேருரையை பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி) அவர்கள் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் அரங்க அளிக்கையாக வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக் குவினரின் கீசகன் வதை வடமோடி நாட்டுக் கூத்து இடம்பெற்றது. இக்கூத்தில் இளைஞர்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆக்கம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

தொம்சனின் பிரயோக அரங்கக் கருத்தரங்கு

(பிரிட்டன் மான்செஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர்)

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழக நாடகத்துறை விரிவுரையாளர் ஜேம்ஸ் தொம்சன் அண்மையில் இலங்கை வந்திருந்தார்.

2000ம் ஆண்டு இலங்கைக்கு முதல்முதலில் வந்திருந்த ஜேமஸ் தொம்சன் அவர்கள் யாழ்ப்பாணம், அனுராதபுரம், மட்டக்களப்பு போன்ற இடங்களில் பிரயோக அரங்கக் களப்பயிற்சிகளை நடத்தியிருந்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சொற்சித்திரம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

வெறுவெளி அரங்கக் குழு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் மாணவர்கள் ஒன்றிணைந்து ‘வெறுவெளி’ அரங்கக் குழுவை அமைத்துள்ளார்கள். இவ்வமைப்பு 2003ம் ஆண்டில் இருந்து செயற்பட ஆரம்பித்திருக்கிறது. இதன் முதலாவது பொதுமக்களுக்கான நிகழ்ச்சியாக ‘சிகப்பு விளக்கு’ எனும் நாடக மேடையேற்றம்  17.07.2004 அன்று மாலை 3.30 மணிக்கு கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் நாடக மேடையேற்றங்களைப் பல்வேறு மன்றங்கள் முன்னெடுத்திருக்கின்றன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆக்கம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 1 மறுமொழி »

கிராம மட்டத்திலான நாடகப் போட்டி

கியூடெக் நிறுவனத்தால் நடத்தப்பட்டது

யாழ் கியூடெக் நிறுவனத்தினரால் கடந்த ஜூலை மாதம் 10ஆம் திகதி கிராம மட்டங்களுக்கு இடையிலான நாடகப் பொட்டி யாழ் மறைக்கல்வி நடுவுநிலைய மண்டபத்தில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் கலந்துகொள்வதற்கு 15 கிராமங்கள் பதிவு செய்துகொண்டன. ஆயினும் 12 கிராமங்களைச் சேர்ந்த நாடகங்களே போட்டியில் கலந்துகொண்டன. இந்நாடகங்களில் இன்றைய சிறுவர்கள் எதிர்கொள்ளும் உடல், உளத் தாக்கங்களே கருப்பொருளாக அமைய வேண்டும் என வரையறுக்கப்பட்டிருந்தது. போட்டி விதியும் அதுவே. பங்குபற்றுனர்களுக்கு வயதெல்லை குறிப்பிடப்படவில்லை. நாடகத்தில் ஈடுபாடுள்ள எவரும் பங்குபற்றலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சொற்சித்திரம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »