
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் எவ்வாறு முக்கியமாகக் கருதப்படுகிறதோ அந்தவாறு மனிதர் அறிவை, சிந்தனையை பகிர்ந்துகொள்ளச் சித்தமாக இருப்பது மிக இன்றியமையாத ஒன்றாகும்.
நீர் புகவொண்ணா அறைகளுக்குள் (water tight Compartment) எம்மை இட்டுக் கொண்டு நாம் காண்பதுவே உலகம் என இருப்பது மனிதருக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் ஒவ்வாத ஒன்று.
கருத்துப்பரிமாற்றம் கருத்து சுதந்திரத்தின் வாய்க்காலாக அமைகிறது. இந்த வாய்க்கால் வழியே நாம் அனைவரும் எமது எண்ணங்களை செயற்பாடுகளை மடை திறந்து விடுவோமாக.
கருத்துக்களின் சங்கமம் கலைஞர்களுக்கு மட்டுமல்ல அனைத்துத் துறையினருக்கும் அவசியம்.
ஏகதத்துவவாதம் என்றும் இடும்பை தரும்.
- கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம்
