நூலகம்

பேராசிரியர் சி.மௌனகுருவின் ‘அரங்கியல்’

கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத் துறைத் தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் எழுதிய ‘அரங்கியல்’ எனும் நூல் வெளி வந்துள்ளது. பூபாலசிங்கம் புத்தகசாலையின் வெளியீடான இந்நூல், குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது.

ஐரோப்பிய நாடக அரங்கின் நடிப்பு முறைகள், மட்டக்களப்புக் கூத்துக்கள், ஈழத்து தமிழ் அரங்கின் சமகாலச் செல்நெறிகள், பற்றி கட்டுரைகள் மூன்று பகுதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஈழத்து அரங்கின் வளர்ச்சிக்கு அரங்கு தொடர்பான புத்தங்கங்கள் வெளிவருவது சிறப்பானது. பேராசிரியர் மௌனகுரு அவர்கள் பல நாடகப் புத்தகங்களை ஈழத்து அரங்குக்குத் தந்துள்ளார்.

நாடக அரங்க ஆய்வுக்கு இவரது அனேகமான நாடகப் புத்தகங்கள் ஆழமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஆரம்பப் படிகளாக அமைந்துள்ளன. மட்டக்களப்புக் கூத்தரங்கை தனது கலாநிதிப் பட்டத்துக்காக விரிவாக ஆராய்ந்துள்ளார். இவர் பல நாடகப் புத்தங்களை வெளியிட்டுள்ளார்.

மறுமொழி இடுக